லாஜிக்...மேஜிக்!



வேலைச் சூழலும் ‘அரசியல்’ நிர்ப்பந்தமும் பணிச்சுமையும் அரசு ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன எனச் சொன்ன அரசு ஊழியர் சங்கத் தலைவி  தமிழ்ச்செல்வியின் ஆதங்கம் நியாயமானது, நேர்மையானது!
- சிவமைந்தன், சென்னை.

அவர் இறக்கவுமில்லை, நாம் மறக்கவுமில்லை என்பது போல் அமைந்திருந்தது எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கான அஞ்சலி. ஜெ.கே எனும் எழுத்தாளனின் வாழ்க்கை நெகிழ  வைத்தது!
- எஸ்.நதியா, புதுச்சேரி.

ஒரு ரோலில் வந்தாலும் மனசில் வேல் பாய்ச்சும் சமந்தா, ‘பத்து எண்றதுக்குள்ளே’ படத்தில் டபுள் ரோல் பண்றாங்களா? கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா..?
- எச்.ஸ்டீபன் சார்லஸ், கோயமுத்தூர்.

ரஷ்ய நிறுவனம் ஒன்று பலான மேட்டருக்காக டின்னில் ‘காற்றை’ அடைத்து விற்பதை அறிந்து வியந்தோம். ‘அந்த மாதிரி’ விஷயத்துக்காக விஷத்தைக் கொடுத்தாலும் குடிப்பாங்க  போல!
- கே.பி.பிரகாஷ், சாத்தூர்.

ஒரு நடிகையின் பேட்டி என்ற தரத்திலிருந்து பல படி மேலே இருந்தது நந்திதா பேட்டி. ‘நம்பர் 1’, ‘நம்பர் 2’ இடங்களைப் பற்றி அவர் சொல்லியிருக்கும் லாஜிக்... தத்துவார்த்த  மேஜிக்!
- மு.மதிவாணன், அரூர்.

‘சட்டவிரோதம் என்று தெரிந்தே செம்மரம் வெட்ட வந்ததேன்?’ என்று கேட்பவர்களே... அவர்களைச் சுட்டுக் கொல்ல எந்தச் சட்டம் கூறியது? அப்ப, நீங்களும் சட்டவிரோத  காரியம் செய்ய சம்பளம் வாங்கும் கூலிகள்
தானே?
- கே.எஸ்.குமார், விழுப்புரம்.

‘புலி’ படம் பற்றிய துல்லிய விவரங்கள் படித்து பரவசமடைந்தோம். இந்தப் ‘புலி’யைப் பார்த்து அந்த ‘மயிலு அக்கா’ வியந்தது தப்பே இல்லை!
- டி.கே.பால்பாண்டி, ராஜபாளையம்.

உம்மிடம் போய் ‘மன்மத வருடம்’ மாட்டுமா? அதை வைத்து இவ்வளவு விஷயத்தை அலசி... விளாசித் தள்ளி விட்டீரே... வாவ்!
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

பார்த்தவுடன் சிரிக்க வைக்கும் முகத்தோற்றம், பேசும் வட்டார மொழி, குறுகிய உடல் அனைத்தும் உள்ள கொட்டாச்சிக்கு ‘குங்குமம்’ தந்த அறிமுகம் அருமை. இனி  கொட்டாச்சிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாச்சி என்ற நிலைமை வர வேண்டும்!
- ப.இசக்கி பாண்டியன், திருநெல்வேலி.

‘சித்திரை ஸ்பெஷல்’ பிட்ஸ் சிம்ப்ளி சூப்பர். புத்தகத்தைப் பிரித்ததும் தமிழ் மாதங்கள் 12க்கும் விளக்கம் தந்து அசத்தி விட்டீர்கள்! பாராட்டுகள்!
- டி.என்.லட்சுமி, சென்னை