வாசகர் கவிதைகள்
Untitled Document Untitled DocumentUntitled Document விவாகரத்து சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு நரகத்தில் முடிவுக்கு வருகின்றன அநேக திருமணங்கள்! - வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
அன்பு முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய் வருந்தினாள்... மகனுக்கு வயதாவதை நினைத்து! - நா.கி.பிரசாத், கோவை. கடவுள் சன்னிதானம் செல்லாதவன் கடவுள் ஆகிறான் அன்னதானத்தால்... - வீ.உதயக்குமாரன், வீரன்வயல். அனுபவம் வீட்டில் கடிகாரம் தாமதமாக ஓடுகிறது என்பதை தாத்தா கண்டுபிடித்து சொன்னார்... சூரியனைப் பார்த்து! - மு.பெரியசாமி,விட்டுக்கட்டி. பாடம் நிரம்பிவழியும் உண்டியலை என்னிடம் வந்து நீட்டிய குழந்தையைப் பார்த்து கற்றுக்கொண்டேன்... இனியாவது சேமிக்கலாம் என்று!
- தென்கரை சி.சங்கர், வந்தவாசி. நோ டென்ஷன் சிமென்ட், செங்கல், மணல் விலை உச்சத்துக்கு ஏறிவிட்டாலும் கவலைப்படாமல் ஸ்டிராங்காக கட்டினான் செலவில்லாமல், 'மனக்கோட்டை'யை! - ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம். வெறுமை வயல்வெளியை விற்றுவிட்டோம். வாங்குவதற்கு யாருமற்று வீட்டில் வெறுமையாய் நிற்கிறது நெற்குதிர்! - பெ.பாண்டியன், காரைக்குடி.
|