தனுசு(21.11.2010 முதல் 7.5.2011 வரை) இதுவரை 3, 4 வீடுகள்ல அமர்ந்து, நாலாவிதத்திலேயும் அலைய வைத்தாரே, அந்த குருபகவான் இப்ப 4வது வீட்டுக்குள்ள நுழைஞ்சு 21.11.2010 முதல் 7.5.2011 வரைக்கும் நீடிக்கறாருங்க. 21.11.2010 முதல் 2.1.2011 வரை: உங்க ராசிநாதனும், சுகாதிபதியுமான குரு பகவான், தன்னோட பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதத்துல போறதால திடீர் பயணம், தாயாரின் உடல்நிலை பாதிப்பு, வீடு வாகனப் பராமரிப்புன்னு செலவுகள் அதிகரித்தல்னு வருமுங்க. 3.1.2011 முதல் 13.3.2011 வரை: உங்க தன, சேவகாதிபதியான சனி பகவானோட உத்திரட்டாதி நட்சத்திரத்துல குரு பகவான் போறதால முன்கோபம், வாக்குவாதம்னு வருமுங்க. 21.2.2011 முதல் பணப்புழக்கம் அதிகரிக்குமுங்க. 14.3.2011 முதல் 7.5.2011 வரை: குரு பகவான் உங்க சப்தம, ஜீவனாதிபதியான புதனோட ரேவதி நட்சத்திரத்துல போறதால பிரிஞ்சவங்க சேருவீங்க. மனைவி வழி உறவுக்காரங்க உதவுவாங்க. வியாபாரத்துல மார்ச், ஏப்ரல்ல லாபம் அதிகரிக்குமுங்க.
ஆனாலும் பெரிய முதலீடுகள் வேண்டாங்க. வாடிக்கையாளர்களை அதிகரிக்க புது உத்திகளைக் கையாளுங்க. ரியல் எஸ்டேட், கெமிக்கல் வகைகளால ஆதாயம் உண்டுங்க. கூட்டுத் தொழில்ல பங்குதாரர்கிட்ட கொஞ்சம் வளைஞ்சு கொடுத்துப் போயிடுங்க. உத்யோகத்துல அடுத்தவங்க வேலைகளையும் பார்க்க நேரிடுமுங்க. அலுவலக ரகசியங்களைப் பாதுகாக்கணுமுங்க. திடீர் இடமாற்றம் உண்டுன்னாலும், குரு பகவான் 10ம் வீட்டை பார்க்கறதால சவால்களை சமாளிச்சுடுவீங்க. மார்ச், மே மாதங்கள்ல நிம்மதிப் பெருமூச்சு விடுவீங்க. கன்னிப்பெண்கள் பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கணுமுங்க. மாணவர்கள் கணிதம், அறிவியல் பாடங்களுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குங்க. கலைத்துறையினர் வாய்ப்பு எதுவானாலும் டக்குனு புடிச்சுக்கோங்க. இந்த குருப் பெயர்ச்சி அனுபவ அறிவை அதிகமாக்கி, வருங்காலத்துல சாதிக்க வைக்குமுங்க.
பரிகாரம்: கரூர் பசுபதீஸ்வரரையும், தட்சணாமூர்த்தியையும் பூரட்டாதி நட்சத்திர நாளில் வணங்குங்க; பார்வையிழந்தவங்களுக்கு உதவுங்க. மகிழ்ச்சி பெருகும்.மகரம் இதுவரைக்கும் ராசிக்கு 2, 3 வீடுகள்ல மாறி மாறி அமர்ந்து ஓரளவுக்கு பணப்புழக்கம், கௌரவம்னு தந்து, கூடவே அலைக்கழிப்பையும் தந்த குரு பகவான் இப்ப 21.11.2010 முதல் ராசிக்கு 3ம் வீட்ல மறைஞ்சு, 7.5.2011 வரை நீடிக்கறாருங்க. 21.11.2010 முதல் 2.1.2011 வரை: உங்க சேவக, விரயாதிபதியான குரு பகவான், தன்னோட பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதத்துல போறதால வீடு கட்டறது, வாங்கறதெல்லாம் நல்லபடி முடியுமுங்க. 3.1.2011 முதல் 13.3.2011 வரை: உங்க ராசிநாதனும், தனாதிபதியுமான சனி பகவானோட உத்திரட்டாதி நட்சத்திரத்துல குரு பகவான் போறதால பணவரவு அதிகரிக்கும்; ஆனா கூடவே செலவும் துரத்தும். வயிற்றுவலி, முதுகுவலின்னு உபாதை வரும். 14.3.2011 முதல் 7.5.2011 வரை: குரு பகவான் உங்களோட ரோக, பாக்யாதிபதியான புதனோட ரேவதி நட்சத்திரத்துல போறதால தந்தையார்கிட்ட இருந்த மோதல் போக்கு நீங்கிடுமுங்க.
பூர்வீக சொத்துகள் வந்து சேரும். வியாபாரத்துல பற்று&வரவு உயரும்னாலும் அடுத்தவங்க சொல்றதைக் கேட்டு நஷ்டப்படாதீங்க. மார்ச், ஏப்ரல்ல வசூல் அதிகரிக்கும். கூட்டுத்தொழில்ல பங்குதாரர் நடவடிக்கையில கவனம் வையுங்க. மருந்து, ரியல் எஸ்டேட், ஹோட்டல் வகைகள்ல லாபம் உண்டுங்க.உத்யோகத்துல கோபத்தை வெளிக்காட்டாதீங்க. மேலதிகாரியோட வீண் விவாதங்கள் வந்தாலும், உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை அவர் ஒப்படைப்பாருங்க. மார்ச், ஏப்ரல்ல வேலைச்சுமை குறையும். வேற நல்ல வாய்ப்புகளும் வரும். கன்னிப்பெண்கள் காதல் விவகாரங்கள்ல அவசரப்படாதீங்க. திருமணத் தடை நீங்கும். மாணவர்கள் விளையாட்டை ஓரம் கட்டிவிட்டு படிப்பிலே அக்கறை காட்டுங்க. கலைஞர்கள் கிடைக்கிற வாய்ப்பை முழுமையா பயன்படுத்திக்கோங்க.இந்த குருப் பெயர்ச்சி, தைரியமாக முடிவெடுக்கற சக்தியைத் தர்றதோட, வெற்றிப் பாதைக்கும் அழைத்துச் செல்லுமுங்க.
பரிகாரம்: காஞ்சிபுரத்துல அருள்பாலிக்கும் ஏகாம்பரநாதேஸ்வரரையும், அங்குள்ள தட்சணாமூர்த்தியையும் புனர்பூசம் நட்சத்திர நாள்ல வணங்குங்க; மனவளம் குன்றியோருக்கு உதவுங்க. தடைகள் நீங்கும். கும்பம்இதுவரைக்கும் உங்க ராசிக்குள்ள ஜன்ம குருவாகவும், கொஞ்ச காலம் 2ம் வீட்லேயும் அமர்ந்து நல்லதையும், கெட்டதையும் கலந்து கொடுத்த குரு பகவான், இப்ப 21.11.2010 முதல் 7.5.2011 வரைக்கும் 2ம் வீட்ல நீடிக்கறாருங்க. 21.11.2010 முதல் 2.1.2011 வரை: உங்களோட தன, லாபாதிபதியான குரு பகவான், தன்னோட பூரட்டாதி நட்சத்திர 4ம் பாதத்துல போறதால பணவரவுக்குப் பஞ்சமில்லீங்க. குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளோட பிடிவாதம் குறையுமுங்க. 3.1.2011 முதல் 13.3.2011 வரை: உங்க ராசிநாதனும், விரயாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்துல குரு பகவான் போறதால சகோதர வகையில் அலைச்சல், செலவுகள்னு ஏற்படுமுங்க. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவைப் பரிசோதிச்சுக்கோங்க. 14.3.2011 முதல் 7.5.2011 வரை: குரு பகவான் உங்க பூர்வ புண்யாதிபதியும், அஷ்டமாதிபதியுமான புதனோட ரேவதி நட்சத்திரத்துல போறதால மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் சுமுகமாகத் தீருமுங்க.
வியாபாரத்துல தடுமாற்ற நிலை மாறுமுங்க. விளம்பரம், சலுகைகளால பழைய வாடிக்கையாளர்கள் மறுபடி வருவாங்க. டிசம்பர், ஜனவரி, ஏப்ரல்ல லாபம் அதிகரிக்கும். மருந்து, கமிஷன், மரவகைகளால லாபமடைவீங்க. உத்யோகத்துல இருந்த போராட்டம் நீங்கிடும். எப்ப பார்த்தாலும் குறை சொல்லிக்கிட்டிருந்த மேலதிகாரி, இனிமே பணிஞ்சு போயிடுவாருங்க. டிசம்பர், ஜனவரி, ஏப்ரல்ல வேற சில வாய்ப்புகள், கூடுதல் சம்பளத்தோட தேடி வருமுங்க. கன்னிப்பெண்களுக்கு தடைபட்டுவந்த கல்யாணம், மனம்போல முடியும். மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிக்க ஆரம்பிக்கணுமுங்க. கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வருதுங்க. இந்த குருப் பெயர்ச்சி எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து, புது முயற்சிகள்ல வெற்றியைத் தருமுங்க.
பரிகாரம்: சென்னைக்குப் பக்கத்துல இருக்கற மாங்காடு வெள்ளீஸ்வரரையும் அங்குள்ள தட்சணாமூர்த்தியையும் பூசம் நட்சத்திர நாள்ல வணங்குங்க; வாரிசு இல்லாத வயதான தம்பதிக்கு உதவுங்க. நிம்மதி நிலைக்கும்.மீனம் உங்க ராசிக்கு 12வது வீட்டிலும், ராசிக்குள்ளேயும் அமர்ந்து வீண்பழி, விரயச் செலவுன்னு படுத்தி எடுத்த குரு பகவான், இப்ப 21.11.2010 முதல் 7.5.2011 வரை ராசிக்குள்ளேயே ஜன்மகுருவாக அமர்ந்திருக்காருங்க. 21.11.2010 முதல் 2.1.2011 வரை: உங்க ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குரு பகவான், தன்னோட பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதத்துல போறதால சுறுசுறுப்பாவீங்க. வயிற்றுவலி, சைனஸ் தொந்தரவு குறையும். உத்யோகத்துல கூடுதல் பதவி வரும். சம்பளம் உயரும். 3.1.2011 முதல் 13.3.2011 வரை: உங்க லாப, விரயாதிபதியான சனி பகவானோட உத்திரட்டாதி நட்சத்திரத்துல குரு பகவான் போறதால தடைகள் நீங்கிடும். வீடு வாங்க, கட்ட லோன் கிடைக்கும். நீண்டகால சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்குமுங்க. குடும்பத்துல மகிழ்ச்சி பொங்கும்.
14.3.2011 முதல் 7.5.2011 வரை: குரு பகவான் உங்க சுக, சப்தமாதிபதியான புதனோட ரேவதி நட்சத்திரத்துல போறதால நண்பர், உறவினரோட மனத்தாங்கல் வருமுங்க.புதன் பாதகாதிபதியாக இருக்கறதால தாயார் உடல்நலத்துல கவனம் வையுங்க. சிறு சிறு விபத்துகள், வீண் செலவுன்னு வருமுங்க.வியாபாரத்துல போட்டியாளர்களை சமாளிக்கறதா நினைச்சுக்கிட்டு பெரிய முதலீடுகளைப் போடாதீங்க. ஜனவரி, பிப்ரவரியில லாபம் அதிகரிக்கும். உணவு, கமிஷன் வகைகள்ல ஆதாயம் உண்டுங்க. கூட்டுத்தொழில்ல பங்குதாரர்கள் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவாங்க. உத்யோகத்துல சாதனை படைப்பீங்க. சம்பளம், சலுகைகள் உயரும். ஜனவரி, பிப்ரவரி, மார்ச்ல அலுவலக சூழ்நிலை சுமுகமாயிடுமுங்க. கன்னிப் பெண்கள் அவசர முடிவு எடுக்காதீங்க. மாணவர்கள் பாடத்துல கூடுதல் நேரம் கவனம் செலுத்துங்க. கலைஞர்களுக்கு விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும்; விரக்தி அடையாதீங்க.இந்த குருப் பெயர்ச்சி வாழ்க்கையில் சில நெளிவு சுளிவுகளை சொல்லித் தந்து வெற்றியையும் தருமுங்க.
பரிகாரம்: தஞ்சாவூருக்குப் பக்கத்துல இருக்கற திருக்கருகாவூரில் அருள்பாலிக்கும் முல்லைவனேஸ்வரரையும், அங்குள்ள தட்சணாமூர்த்தியையும் மகம் நட்சத்திர நாளன்று வணங்குங்க; ரத்த தானம் செய்ங்க. அந்தஸ்து உயரும்.