தத்துவம் மச்சி தத்துவம்





‘‘வீட்ல போய் உடைச்சுப் பார்க்கும்போது தேங்கா அழுகலா இருக்குமா..?’’

‘‘சொல்ல முடியாதுங்க. வாங்கும்போதே அழுகலா வாங்கிட்டுப் போயிடுங்க. உடைச்ச பின்னாடி நல்லாருக்குன்னு கொண்டு வந்தா திருப்பி வாங்க மாட்டேன்...’’

- என்.பர்வதவர்த்தினி, சென்னை-75.

என்னதான் பெரிய நகைக்கடை அதிபரா இருந்தாலும், அவங்க வீட்டு நாய்க்கு ‘திங்க பிஸ்கெட்’ போடலாம்; ‘தங்க பிஸ்கெட்’ எல்லாம் போட முடியாது!

- நாய்க்கு பிஸ்கெட் போடும்போது டேஸ்ட்  பார்ப்போர் சங்கம்

- மதுரைமதி, துவரிமான்.


‘‘பேஷன்ட்கிட்ட, ‘உங்க வீட்ல இனி 24 மணி நேரமும் கரன்ட் இருக்கும்’னு டாக்டர் சொல்றாரே... ஏன்?’’
‘‘பேஷன்ட்டுக்கு அதிர்ச்சி வைத்தியம் தர்றாராம்..!’’

- ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.


‘‘தலைவர் பென் டிரைவர் கேட்கறாரே... ஏன்?’’
‘‘எல்லாரும் பென் டிரைவ் வச்சிருக்கறதை தப்பா புரிஞ்சுக்கிட்டார்..!’’
- அம்பை தேவா, சேரன்மகாதேவி.


‘‘தலைவர் இன்னும் சினிமா ஞாபகமாகவே இருக்கார்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘ஜெயிலுக்குப் போறப்பகூட ‘எனக்கு ஜோடியா வரப்போறது யாரு’ன்னு கேட்கறாரே..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

நம்ம வீட்டுக்கு ‘மீனா’ வந்தா சந்தோஷப்படலாம்; ‘அமீனா’ வந்தா சந்தோஷப்பட முடியுமா..?
- கடி தத்துவத்தைக் கூட ‘மீனிங்’கோடு சொல்வோர் சங்கம்

- உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.


என்னதான் நம்ம தலைவர்னாலும் செத்த பிணத்துக்கு அவரு மாலை போடும்போது கை தட்டலாமா?
- தலைவர் எது சொன்னாலும் தலையாட்டும்
தொண்டர்கள் சங்கம்
- அனார்கலி,தஞ்சாவூர்.