ஜோக்கூ





‘‘பாங்க்ல கொள்ளையடிச்சதும் இல்லாம, கேஷியரையும் எதுக்காகக் கடத்திட்டுப் போனீங்க..?’’
‘‘அத்தனை பணத்தையும் வேகமா எண்ண ஆள் வேணாமா எசமான்..?’’
- ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.

காமர்ஸ் தேர்வு
எழுதியிருந்தேன்.
கணக்கில் பாஸ் என்று
ரிசல்ட் வந்தது;
ரிசல்ட் போடுபவரும்
பக்கத்தில் அமர்ந்திருப்பவரைப்
பார்த்து எழுதியிருப்பாரோ?
- அ.ஜெயேந்திரன், தஞ்சாவூர்.


‘‘ஏன் கபாலி... ‘திருந்திட்டேன்’னு ஐயாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிடேன். ஏன் வீணா அடி வாங்கி சாகறே?’’
‘‘ஏட்டய்யா... அந்த ஒரு வார்த்தை சொன்னதுக்குத்தான் இம்புட்டு அடியும்!’’
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

என்னதான் டிசைன் எஞ்சினியரா இருந்தாலும், பத்திரத்தில ‘சைன்’தான் பண்ணணும்; ‘டிசைன்’ பண்ணக் கூடாது!
- எஞ்சினியர்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை கொடுப்போர் சங்கம்
- அனார்கலி, தஞ்சாவூர்.

‘‘எதுக்குதான் நில அபகரிப்பு வழக்கு போடறதுன்னு விவஸ்தையே இல்லாமப் போச்சு...’’
‘‘என்னய்யா ஆச்சு..?’’
‘‘இது என்னோட சொந்த ஊர்னு சொன்னதுக்கே, நம்ம தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம்..!’’
- ஜி.தாரணி, அரசரடி.

‘‘தொண்டை வலிக்கு நீங்க கொடுத்த மாத்திரையை எப்போ சாப்பிடணும் டாக்டர்..?’’
‘‘மருமகளோட சண்டை போட ஆரம்பிக்கறதுக்கு முன்னால முழுங்கிடுங்க...’’
- என்.பர்வதவர்த்தினி, சென்னை-75.

தத்துவம் மச்சி தத்துவம்

என்னைப் பார் யோகம் வரும்
- கழுதை
பிகரைப் பார் சோகம் வரும்
- கவிதை
- சி.பி.செந்தில்குமார், சென்னிமலை.