வாசகர் கடிதங்கள்



Untitled DocumentUntitled DocumentUntitled DocumentUntitled Document



சிலைவடிவத்தில் இருக்கும் கடவுளிடம் குறை தீரப் பிரார்த்திப்பது வழக்கம். புதுப்புதுச் சிலைகளையே வைப்பது அதிசயம்தான். கிராமத்து மக்களின் நம்பிக்கையே தனிதான் போங்க!
- அனன்யா, திருச்சி.

வரவர அலர்ட் ஆறுமுகமாயிட்டு வர்ற தலைவரே! சந்தோஷம்தான். அப்ப, நுரையீரலுக்கு வேட்டு வைக்கிற பாப்கார்னுக்கு இனி ஆப்புதானா?
- எஸ்.பி.டி.பிரியரஞ்சன், சிவகங்கை.
 
அட்டைப்படம் பார்த்ததும், 'அட... யார்ரா இது'ன்னு நினைக்க வச்சிட்டார் ராதா மகள் கார்த்திகா. அம்மாவைப்போல இவரையும் அரவணைக்குமா கோடம்பாக்கம்?
  - உமா மோகன்தாஸ், திண்டுக்கல்.

பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாகி விட்டது. அரசு, பெற்றோர், பள்ளி மூவரும் சேர்ந்து நல்லதொரு முடிவு எடுக்க வேண்டும்.
- அ.முரளிதரன், மதுரை-3.

காந்தி நமக்கு நினைவுக்கு வருவது அக்டோபர் 2 அன்று மட்டும்தான். அதுகூட சம்பிரதாயத்துக்குத்தான். வெளிநாட்டவர்கள் காந்திக்குத் தரும் மரியாதையைப் பார்த்து உள்ளபடியே பூரித்துப் போனேன். 'காந்தி கலெக்டர்' ராஜேஷுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

பஞ்ச் டயலாக் பேசுவதில் நம்மூர் சினிமா நடிகர்களை மிஞ்சி விட்டார்கள் ஆந்திர, கர்நாடக, பீகார் முதல்வர்கள். கடைசிப் பக்கம் பார்த்துவிட்டு இப்படித்தான் சொல்லத் தோணுது!
- ஏ.எஸ்.எம்.ஜோசப், சென்னை-21.

வெள்ளித்திரையில் பறக்காத வெற்றிக்கொடியை வியாபாரத்துறையில் பறக்கவிட்ட ராஜாவுக்கு இன்னும் சினிமா ஆசை இருப்பதில் வியப்பில்லை. அதைத் தயாரிப்புடன் நிறுத்திக் கொண்டால் நல்லது!
- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

பெண்களுக்கு சிறிய முதலீட்டில் பெரிய லாபம் சம்பாதிக்க வழிகாட்டுகிற 'வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம்' பகுதி பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.
- ராமலட்சுமி, அறந்தாங்கி.

சாலமன் பாப்பையாவின் வாழ்க்கைத்தொடர் மூலம் மதுரை வட்டாரப் பழக்க வழக்கங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. மைசூர் பாகாக நாக்கில் கரைகிறது 'பட்டிமன்றமும் பாப்பையாவும்' தொடர்.
 
- யோக அக்ஷயா, கோவை-14.

நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகளின் முக்கியத்துவத்தை அறிய வைத்தது, பங்குச்சந்தைத் தொடர். தொடரைத் தொடர்ந்து படித்தால், பள்ளி செல்லாதவர்கூட பங்குச்சந்தையில் இறங்கி விடலாம்.
 
- ரா.முருகேசன், சாயல்குடி.

'ரீடர்ஸ்பேட்டை' குறும்புகள் ஒவ்வொண்ணும் ச்சோ ஸ்வீட். 9&ம் எண்ணுக்குரிய சிறப்பை எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்கப்பா!
 
- செந்தமிழ்ச்செல்வன், சோழவந்தான்.

வாசகர் கவிதைகளில் காணாமல் போன கதை சொல்லும் பாட்டிகள் பற்றிய கவிதை நெகிழ வைத்து விட்டது.

- ரூபேஷ், சென்னை-28.