டோனி வாழ்த்திய தாண்டவம்...



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazine

             ‘யு&டிவி’க்காக விக்ரம் நடிக்கிற ‘தாண்டவம்’, டோனி வாழ்த்த தொடங்குச்சு. எப்படின்னா, டோனி நடிச்ச ஒரு விளம்பரத்துல இந்தப் பட ஸ்டன்ட் மாஸ்டர் மனோஜ் வர்மா பங்கெடுத்திருக்கார். படம் பற்றிக் கேள்விப்பட்டு வாழ்த்தை அனுப்பியிருக்கார் ‘கூல்’ கேப்டன். வெரி நைஸ்..!

பல வருடங்களுக்கு முன்னால ‘மய்யம்’ங்கிற பத்திரிகையை நடத்திக்கிட்டிருந்த கமல், இடையில அதை நிறுத்தியிருந்தார். இப்ப நெட் மேகஸின்களோட பயன்பாடு அதிகமாயிருக்கவே அதே ‘மய்யத்’தை ஆன்லைன்ல ஆரம்பிக்கவிருக்கார். ‘நெட் ப்ராஃபிட்’ கிடைக்கட்டும்..!

‘தபாங்’ ஒரிஜினல்ல ஐட்டம் நம்பருக்கு மலாய்கா அரோரா ஆட, தமிழ் ரீமேக் ‘ஒஸ்தி’யில மல்லிகா ஷெராவத் ஆடினாங்க. இப்ப தெலுங்கு ரீமேக்கான ‘கப்பர் சிங்’ல அந்த பாட்டுக்கு ஆடப்போறது யார் தெரியுமா..? அனுஷ்கா..!

சூர்யா நடிக்க விருக்க ‘சிங்கம் ரெண்டாம் பாகத்’துல அவர் கூட ஜோடியாகப் போறது அமலா பால்னாலும், படத்துக்குள்ள பால் மாறாம முதல் பார்ட் ஹீரோயின் அனுஷ்காவும் இருக்காங்க. இன்டர்வெல்லோட அக்காவை போட்டுத் தள்ளிடுவாங்களோ..?

ஏற்கனவே ஹீரோவாகிட்ட விவேக், இப்ப ‘வழிப்போக்கன்’ங்கிற படத்துல வில்லனாவும் ஆகறாராம். இந்தப்படம் தமிழ்லயும், கன்னடத்துலயும் ஒரே நேரத்துல தயாராகுது. காமெடியன்னா பயங்கரமா சிரிக்க வைக்கணும்; வில்லனானா பயங்கரமா சிரிக்கணும். அவ்வளவுதானே..?

இந்திய சினிமா முன்னோடி நாகி ரெட்டியோட நூற்றாண்டு விழாவை சீரும், சிறப்புமா கொண்டாடற விஜயா குழுமம், அவர் நினைவு தபால் தலை வெளியிடறதோட, அவர் பங்கெடுத்த மருத்துவம், சினிமாத் துறைல விருதுகளையும் அறிவிக்க இருக்காங்க. நல்ல விஷயம்..!

Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazineஜப்பான் சுனாமி பேரழிவுகளுக்கு நிதி திரட்ட ஜப்பானிய பாரம்பரிய ‘என்கா’ இசையில பாடற இசைக் கலைஞர் சதா இங்கே நடத்திய நிகழ்ச்சியில கலந்துக்கிட்ட விஜய் ஆன்டனி, ‘நாக்கு முக்க’வை ஜப்பான் இசைல பாட... அசந்து போனார் சதா. அவங்க மொழியில அர்த்தம் ஏதும் புரிஞ்சிருக்குமோ..?

ரொம்ப நாளா காணாமல் போய் ஒரு ஐட்டம் நம்பர்ல திரும்பி வந்த கஸ்தூரி, இப்ப செல்வா டைரக்ட் பண்ற ‘நாங்க’வில செம ஹாட்டான கேரக்டர்ல வர்றாங்க. பூங்காற்று திரும்புமா..?

வரிசை கட்டிய தன் படங்களை கிளியர் பண்ண ‘ஆயுதப்போராட்டத்’தை ரிலீஸ் செய்த  ஜெய் ஆகாஷ், அடுத்து தன் நம்பிக்கைப் படமான ‘காதலன் காதலி’யை ரிலீஸ் பண்ணவிருக்கார். அதுக்கடுத்தும் ‘ஒத்திகை’, ‘பறக்கும் படை’ன்னு இன்னொரு லிஸ்ட் இருக்கு அவர்கிட்ட...

சைலன்ஸ்

‘தீப’ இந்தி நடிகையைப் பார்த்தாலே எல்லா ஸ்டேட்டும் நடுநடுங்குதாம். பொண்ணை புக் பண்ணிய உடனேயே உச்ச ஸ்டாரை ‘படு’க்க வச்சு, கன்னட தொழிலதிபரோட பிராண்ட் அம்பாசிடராகி அவர் விமானத் தொழிலையும் ‘படு’க்க
வச்சதோட, கடைசியா நடிச்ச இந்திப்படங்களும் ‘படு’த்துக்க... ஆவி வராத நடிகை லிஸ்ட்ல பொண்ணை சேத்துடுச்சு சென்டிமென்ட் சினிமா. கோன் ஹை, கண்டுபிடிங்க..!

மேனன் சுறுசுறுப்பா இயங்கி மூணு மொழிகள்லயும் ஒரு படத்தை டைரக்ட் பண்ணிக்கிட்டிருந்த வேளையில திடீர்னு ஒரு செய்திப் ‘புயல்’ வீச... கொஞ்சம் தடுமாறிட்டார். அது அந்தப்படத்துக்கு இசையமைக்கிறதா இருந்த புயல் திசைமாறிப் போன செய்திதான். அதனால புயலைத் தன்பக்கம் வீச வைக்கிற முயற்சிகள்ல இறங்கியிருக்காராம் இயக்கம். இசையுமா புயல்..?
கோலிவுட் கோயிந்து