கார்டியாலஜியில் முதல் மாணவனாகச் சேர்ந்து, ரேங்க்கிலும் முதல் மாணவனாகி, எட்டாவது மாடிக்கு லிஃப்டில் செல்லாமல் படியில் ஏறுகிறார் டாக்டர் சொக்கலிங்கம். இவர் இதய நோய் டாக்டர்களுக்கு மட்டுமல்ல... இதயம் உள்ள எல்லோருக்கும் ரோல் மாடல்தான்!
-எம்.சுரேந்தர், திண்டுக்கல்.
சாகறதுக்குப் பயிற்சியா? என்னிக்கோ வரக்கூடிய நிகழ்வை முன்னாடியே ஒத்திகை பார்த்துக் கொள்வதில் ஒரு திருப்தி!
- எஸ்.மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்.
ஊனமுற்றோருக்கு உதவும் டாக்டர் சந்திரசேகரின் முயற்சி பாராட்டத் தகுந்தது!
- ஜி.பிரேமா, சென்னை-59.
‘பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்’ பகுதியில் கன்னி ராசிக்காரர்களின் இல்லக் கனவை நனவாக்கும் இறைவன் கட்டுரை எனக்குப் பயனுள்ளதாக இருந்தது.
- டி.வெங்கடேஷ்பாபு, காரமடை.
‘ஒஸ்தி’ படத்தில் பின்னணிப் பாடகியாக செகண்ட் இன்னிங்¬ஸ் ஆரம்பித்திருக்கிறார் காந்தக் குரலழகி எல்.ஆர்.ஈஸ்வரி. இனி தமிழகம் ஜர்தா பீடா போல அவங்க பெயரைத்தான் மெல்லும்!
- இரா.வளையாபதி, கரூர்.
‘கவிதைக்காரர்கள் வீதி’ கலகலப்பும் நெகிழ்ச்சியும் கலந்த கலவை!
- இரா.வளையாபதி, கரூர்.
கல்வி சம்பந்தமான பொருட்களாக நாம் பார்க்கின்ற ஒயிட்னர் போன்றவை பிள்ளைகளை போதையின் பாதையில் தள்ளிச் சூறையாடும் மேட்டரைப் படித்து நெஞ்சம் படபடத்தது.
- சி.டி.சிவகுரு, புதுச்சேரி.
‘மெட்டி ஒலி’ புகழ் திருமுருகனின் ‘விஜயா டீச்சர்’ தொடர்கதை எடுத்த எடுப்பிலேயே ஜெட் வேகத்தில் பறக்கிறது!
- டிஜி.சங்கர், கிருஷ்ணகிரி.
சொல்ல நினைப்பதை விட்டுவிட்டு வேறு விஷயங்களை பேசக்கூடாது என்ற நல்ல சிந்தனையைத் தூண்டியது ‘சுட்ட கதை சுடாத நீதி’.
- ஆர்.சரளா ரகுநாதன், கன்னியாகுமரி.
கமல், சூர்யா, விஜய், த்ரிஷா போன்ற முன்னணி ஸ்டார்களின் ஃபிட்னஸ் ரகசியங்களை அம்பலப்படுத்தி அசத்திட்டீங்க போங்க!
-வி.கஜேந்திரன், தேனி.