மம்முட்டியின் ஃபிட்னஸ் ரகசியம்!



“காலையில் ஓட்ஸ் கூழ், பப்பாளித் துண்டுகள், முட்டையின் வெள்ளைக்கரு, முந்தைய நாள் ஊறவைத்த பத்து பாதாம்கள்.மதியம் சாதம் சாப்பிடுவதில்லை. வறுத்த பொருட்களையும் எடுப்பதில்லை. ஓட்ஸ் பொடியால் செய்யப்பட்ட அரை புட்டு முக்கிய உணவு. தேங்காய் துருவல் கொண்ட மீன் குழம்பு. 
மீன் வகைகளில் பச்சை குரோமைடு (கரிமீன்), கிரே முல்லட் (கனாம்பு), தட்டையான சாம்பல் முல்லட் (திருத்தா) போன்றவை அவருக்கு மிகவும் பிடிக்கும். சிறிய மீன்கள் மற்றும் தேங்காய் துருவலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கொழுவா போன்றவையும் அவருக்கு பிடிக்கும். இதனுடன் பீன்ஸ் வறுவல், மிளகுப் பொடியுடன் கூடிய வெஜிடபிள் சாலட் எடுத்துக்கொள்வார்.மாலையில் அடிக்கடி பிளாக் டீ குடிப்பார்.

இரவு உணவை 7 மணிக்கு முன் முடித்துவிடுவார். கோதுமை அல்லது ஓட்ஸ் தோசை சாப்பிடுவார். மூன்று தோசைகள் தான். தோசையுடன், நாட்டு (நாடன்) கோழிக் கறி. மசாலா இல்லாமல் தேங்காய்ப் பால் சேர்த்துக் கொள்வார். அது கிடைக்கவில்லை என்றால், சட்னி அவருக்கு போதுமானது. அதன் பிறகு காளான் சூப் எடுத்துக்கொள்வார்...” என்கிறார் மம்முட்டியின் தனிப்பட்ட சமையல்காரர் லனேஷ். மம்முட்டிக்கு வயது அதிகமில்லை... ஜஸ்ட் 72தான்!

காம்ஸ் பாப்பா