இது நியாயமா ராஷ்மிகா..?



‘நேஷனல் க்ரஷ்’ ஆக கொண்டாடப்பட்ட ராஷ்மிகாவுக்கு அடுத்தடுத்து ஃப்ளாப். ஆனாலும் ராஷ்மிகா கொஞ்சம் கூட அலறவில்லை. போகிற போக்கில் வெளியான ‘அனிமல்’ படம் கன்னாபின்னாவென சர்ச்சைகளைக் கிளப்பினாலும், வசூலையும் அள்ளியிருக்கிறது.
இந்நிலையில் தொடர் தோல்விகளுக்கு நடுவே, ராஷ்மிகா ஒப்புக்கொண்ட படம் ‘ரெயின்போ’. இது ராஷ்மிகாவை மையமாகக் கொண்ட கதை. நயன்தாரா மாதிரி நாமும் நடிக்கவேண்டுமென ராஷ்மிகா விரும்பி ஒப்புக்கொண்ட படம்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகும் இந்தப் படத்தை சாந்தரூபன் இயக்குகிறார்.இந்தப் படத்தின் ஷூட்டிங் பரபரவென ஆரம்பமானது. இரண்டு ஷெட்யூல்கள் முடிந்ததும் ஒரு பிரேக் விடப்பட்டது. அந்த பிரேக் அப்படியே இன்று வரை தொடர்கிறது. மீண்டும் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை என்கிறார்கள்.

ஏன் இந்த தடை என்று விசாரித்தால், தன்னுடைய முதல் ஷெட்யூல் முடிந்ததுமே ராஷ்மிகா கூடுதல் சம்பளம் கேட்டாராம். ராஷ்மிகா முகம் இன்று இந்தியா முழுவதும் ஓரளவிற்கு பரிச்சயம் என்பதால் தயாரிப்பு நிறுவனமும், அவரது சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க ஒப்புக்கொண்டதாம்.

சரி, சம்பளப் பிரச்னைதான் முடிந்துவிட்டதே, ஷூட்டிங் கிளம்பலாம் என இயக்குநர் யோசித்தபோது, ராஷ்மிகா தரப்பிலிருந்து ஒரு போன் கால். கதையில் கொஞ்சம் மாற்றங்கள் செய்ய வேண்டும். 

தன்னுடைய கதாபாத்திரத்திற்கு கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவம் வேண்டும். அதற்கேற்ற மாற்றங்களையும் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டதாம்.
சம்பளம் பேசி முடிவாகி, கதையைக் கேட்டு ஓகே சொன்ன பிறகு இப்படி ஒவ்வொன்றாக மாற்றிக்கொண்டே இருந்தால் என்ன செய்வது என தயாரிப்பு தரப்பு தளர்ந்துபோயிருக்கிறதாம்.

காம்ஸ் பாப்பா