தனுஷ் + ஹெச்.வினோத்?
ஆசைகாட்டி, காக்க வைத்து கமல் கண்டுகொள்ளாமல் கைவிட்ட ஹெச்.வினோத்துடன் பட்டென்று ஒட்டிக்கொண்டிருக்கிறார் தனுஷ்.கமலுடன் படம் என்றதால் சில மாதங்கள் ஒன்றும் செய்ய முடியாமல், விலகவும் முடியாமல் தவித்த ஹெச்.வினோத், இப்போதுதான் கமல் வட்டாரத்திலிருந்து வெளிவந்திருக்கிறார். அடுத்து யாருடன் சேர்ந்து படம் பண்ணலாம் என்று யோசித்தபோதுதான் தனுஷுடன் படம் பண்ணும் யோசனை வந்திருக்கிறது.தனுஷின் 50வது படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அவரே இயக்கி நடிக்கிறார். இப்படத்தின் வேலைகள் முடிவடைந்துவிட்டன. இதற்கு அடுத்து, இப்போது தெலுங்கு இயக்குநர் சேகர் கமுலா இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இந்தப் படத்தில் நாகார்ஜுனாவும் நடிக்கிறார். இதற்கு அடுத்துதான் ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறாராம். விஜய்யின் ‘லியோ’ படத்தைத் தயாரித்த செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார், ஹெச்.வினோத் + தனுஷ் கூட்டணியில் படம் தயாரிக்க முன்வந்திருக்கிறார்.
காம்ஸ் பாப்பா
|