காதலில் விழுந்த ஸ்ரீதேவியின் வாரிசு!



ஸ்ரீதேவியின் வசீகரமும், திறமையும் அவரது வாரிசுகள் ஜான்வி, குஷி இருவருக்கும் இருக்கிறதோ இல்லையோ... ஆனால், ஸ்ரீதேவியை விட தங்களைத் தாங்களே பிரபலப்படுத்திக் கொள்வதில் வாரிசுகள் முந்தியிருக்கிறார்கள்.

இதனால்தான் ஜான்வி பெரிய படங்களிலோ அல்லது முன்னணி ஹீரோக்களுடனோ நடிக்காவிட்டாலும், இணையத்தில் பலரது இதயங்களைக் கலவரப்படுத்தும் கவர்ச்சி சுனாமியாக இருக்கிறார்.இப்போது விஷயம் என்னவென்றால், ஜான்வி காதலில் விழுந்துவிட்டார் என்கிறார்கள். ஜான்வியின் மனதைக் கொள்ளை கொண்டவர் ஷிகர் பஹரியா என்ற இளைஞர் என கிசுகிசு வெளியாகி இருக்கிறது.

இளம் வயது என்பதால் தோழிகள், தோழர்களுடன் பார்ட்டிக்கு போகும் ஜான்வி இதுவரையில் தனது காதலைப் பற்றி சொன்னது இல்லை. ஆனால், அவரது சமூக ஊடக பதிவுகளில் அதிகம் தென்பட்டவர்தான் இந்த ஷிகர் பஹரியா.
விஜய் தேவரகொண்டா நடித்த ‘லைகர்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அனன்யா பாண்டே பிரபல பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேயின் மகள். இவரும் ஆதித்யா ராய் கபூரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள் என்று உறுதிப்படுத்துவது போல் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அதனால் இந்த இருவரைப் போல் கிசுகிசுக்களில் அடிபடாமல் இருக்க வேண்டுமென ஜான்வி உஷாராக இருக்கிறாராம்.

ஆனாலும் மாங்கனிகள் பழுத்தால், டிப்பார்ட்மெண்டல் ஸ்டோருக்கு வந்துதானே ஆகவேண்டும். அதைப் போலத்தான் இப்போது இவர்களது ரிலேஷன்ஷிப் வெளியே வந்திருக்கிறதாம்.

ஜான்வி, ஷிகர் இருவரின் நண்பர் ஒரி என்பவர் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அதில் ஷாரூக்கானின் மகள் சுஹானா கான், சைஃப் அலி கானின் மகள் சாரா அலி கான், ஜான்வி மற்றும் அவரது தங்கை குஷி கபூர் கூடவே ஷிகர் பஹரியாவும் இருந்திருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ஜான்வி ஒரு கமெண்ட்டை போட்டுவிட, உணர்ச்சி வசப்பட்ட ஷிகர், ‘ஐயம் ஆல் யுவர்ஸ்’ என்று பதில் போட்டுவிட்டார். எங்கிருந்து பிரச்னை கிளம்பியதோ தெரியவில்லை, உடனடியாக அந்த கமெண்ட்டை நீக்கிவிட்டார் ஷிகர்.

இதை சரியாக கவனித்துக் கொண்ட நெட்டிசன்கள் இப்போது ஜான்வி - ஷிகர் ரிலேஷன்ஷிப்பை வைத்து சமூக ஊடகங்களைக் கலவரப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.ஜான்விக்கு நெருக்கமாக இருக்கும் ஷிகர் லேசுப்பட்ட ஆள் இல்லை. இவர் மஹாராஷ்ட்ராவின் முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேயின் பேரன்.

காம்ஸ் பாப்பா