ஓர் இரவுக்கு ரூ.83 லட்சம்!



உயர்தரமான நான்கு படுக்கையறைகள், ஜொலிக்கும் வண்ண மின் விளக்குகள்,  நவீன வசதிகளுடன் கூடிய நான்கு குளியலறைகள் மற்றும் கழிப்பறைகள், 12 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய உணவு மேசை, உட்புற மற்றும் வெளிப்புற சமையலறை, லேசர் புரஜக்‌ஷனுடன் கூடிய திரையரங்கம், மினி நூலகம், அலுவலக வசதி, விளையாட்டு அறை, மதுபான வசதி, நீச்சல் குளம், கடலை ரசிப்பதற்கு தனி பால்கனி என சகல வசதிகளுடன் காட்சியளிக்கிறது அந்த சூட் ரூம்.

துபாயில் உள்ள அட்லாண்டிஸ் தி ராயல் எனும் நட்சத்திர ஹோட்டலில் அமைந்திருக்கிறது இந்த சூட் ரூம். இதில் ஓர் இரவு தங்குவதற்கு வாடகை ஒரு லட்சம் டாலர். 
அதாவது இந்திய மதிப்பில் 83 லட்ச ரூபாய். உலகிலேயே விலையுயர்ந்த ஹோட்டல் அறை என்ற பெருமையைத் தன்வசமாக்கியிருக்கிறது இந்த சூட் ரூம்.

த.சக்திவேல்