Must Watch



ஷபீக்கிண்டெ சந்தோஷம்

மலையாள சினிமாவுக்குரிய அத்தனை சிறப்புகளுடனும் மிளிர்கிற ஒரு படம் , ‘ஷபீக்கிண்டெ சந்தோஷம்’. ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. கேரளாவில் உள்ள அழகிய ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் வாழும் அனைவராலும் நேசிக்கப்படும் ஒருவன் ஷபீக்.
மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதுதான் ஷபீக்கின் மகிழ்ச்சி. அவனுக்கு வளைகுடா நாட்டில் வேலை கிடைக்கிறது. வேலைக்குச் செல்வதற்கு முன்பு மூலநோயால் பாதிக்கப்படுகிறான். பணம் வாங்காமலேயே ஷபீக்குக்கு சிகிச்சையளித்து குணப்படுத்துகிறார் ஒரு மருத்துவர்.  

மகிழ்ச்சியாக வளைகுடாவுக்குப் போய் வேலை செய்கிறான் ஷபீக். ஊரிலுள்ள ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகிறது. நிச்சயதார்த்த நிகழ்வுக்காக கேரளாவுக்கு வரும்போது தன் அன்புக்குரியவர்களுக்காக பல பரிசுப் பொருட்களை வாங்கி வருகிறான். குறிப்பாக அந்த மருத்துவருக்கு ஹூக்கா ஒன்றை வாங்கி வருகிறான்.

எல்லாமே மகிழ்ச்சியாகச் செல்கிறது. நிச்சயதார்த்தம் அன்று காவல்துறையினரால் ஷபீக் கைது செய்யப்படுகிறான். போலீஸ் ஷபீக்கை எதற்காக கைது செய்தது? ஷபீக் விடுதலை அடைந்தானா? ஷபீக்குக்குத் திருமணம் நடந்ததா... போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறது மீதிக்கதை. ரொம்பவே எதார்த்தமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அனுப் பண்டலம்.

தொகுப்பு: த.சக்திவேல்