அட்புதம்ரொமான்ஸும், சயின்ஸ் ஃபிக்‌ஷனும் கலந்த கலவையாக வெளியாகியிருக்கிறது, ‘அட்புதம்’. ‘ஹாட் ஸ்டாரி’ல் பார்க்க கிடைக்கிறது இந்த தெலுங்குப் படம்.ஒரு தொலைக்காட்சி சேனலில் வேலை செய்கிறார் சூர்யா. அங்கே ஒரு பிரபலத்தை நேர்காணல் செய்யும்போது பிரச்னையாகிறது. அதனால் மேலதிகாரியால் அவமானத்துக்குள்ளாகிறார். அதே நேரத்தில், இறந்துபோன தந்தையைப் பற்றிய நினைவுகள் சூர்யாவை தொந்தரவு செய்கிறது.

அதனால் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று ஓர் உயரமான கட்டடத்தின் மீது ஏறி நிற்கிறார். கடைசியாக ஒரு தற்கொலை கடிதத்தை அனுப்பலாம் என்று போனில் டைப் செய்கிறார். யாருக்கு அனுப்பலாம் என்ற குழப்பம் ஏற்பட, தன்னுடைய எண்ணுக்கே அனுப்புகிறார் சூர்யா. ஆனால், அந்த மெசேஜ் வெண்ணிலாவுக்குப் போய்விடுகிறது.

ஜெர்மனி போய் படிக்க வேண்டும் என்ற கனவில் இருந்தவள் வெண்ணிலா. ஆனால், நுழைவுத்தேர்வில் கூட அவளால் தேர்ச்சியடைய முடியவில்லை. அதனால் அவளது தந்தை திருமண ஏற்பாடுகளைச் செய்துவந்தார். திருமணம் பிடிக்காமல் அவளும் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில்தான் சூர்யாவின் தற்கொலை கடிதம் அவளின் போனுக்கு மெசேஜாக வருகிறது. அந்த மெசேஜ் தற்கொலை செய்யவிருந்த இருவரின் வாழ்க்கையையும் எப்படி மாற்றுகிறது என்பதை சயின்ஸ் பிக்‌ஷனுடன் சொல்கிறது திரைக்கதை.வித்தியாசமான அனுபவத்தை தரும் இப்படத்தின் இயக்குனர் மாலிக் ராம்.

தொகுப்பு: த.சக்திவேல்