Bio Data - பொங்கல்
 பெயர்கள்: பொங்கல், மகர சங்ராந்தி, லோகிரி, போகலி பிஹி, தில் மகர சங்கராந்தி, காசாகர் மேளா. பழைய பெயர் : தை நீராடல்.
செல்லப்பெயர்கள் : தமிழர் திருநாள், உழவர் திருநாள்.
சோழர்கள் காலத்துப் பெயர் : புதியீடு.
பிறந்த இடம்: வேளாண்மை தோன்றிய இடம்.
வயது: இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேல்...
தந்தை: சூரியன்.
தாய்: பசு.
 தந்தையின் தொழில்: விவசாயத்தை செழிப்பாக்குவது உட்பட ஏராளமான வேலைகளைச் செய்து உலகை காக்கிறார்.
முகவரி: தமிழர்களின் இதயம்.
உடன்பிறப்புகள்: போகிப்பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு...
வளர்ந்த இடங்கள்: தென்னிந்தியா, மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ் என தமிழர்கள் வாழும் ஐம்பதுக்கும் மேலான நாடுகள்.
கொண்டாட்ட வழிமுறை: மஞ்சள் தோரணங்கள் கட்டி, புதுப்பானையில், புது அரிசியில் பொங்கல் பொங்கி, புத்தாடை உடுத்தி, கரும்பு உண்டு கொண்டாடப்படுகிறது.
சங்க இலக்கியங்களில்...: ‘தைஇத் திங்கள் தண்கயம் படியும்...’ என்று நற்றிணையிலும், ‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்...’ என்று குறுந்தொகையிலும், ‘தைஇத் திங்கள் தண்கயம் போல்...’ என்று புறநானூறிலும், ‘தைஇத் திங்கள் தண்கயம் போல...’ என்று ஐங்குறுநூறிலும், ‘தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ...’ என்று கலித்தொகையிலும் இடம் பிடித்துள்ளார்.
நினைவுகளும், நிகழ்வுகளும்: வாழ்த்து அட்டைகள், கிராமத்தில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள், பல ஊர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் சொந்த ஊரில் ஒன்று சேர்தல், குடும்பத்துடன் சேர்ந்து முறுக்கு சுடுதல், புது திரைப்படங்கள் வெளியாகி திரையரங்கை திருவிழாவாக மாற்றுவது, மஞ்சள் நீராடுதல்.
காணும் பொங்கலுக்கு மறுபெயர்கள்: கன்னிப்பொங்கல், காளையர் பொங்கல், மாரியம்மன் பொங்கல்.
பழமொழி: தைப்பிறந்தால் வழி பிறக்கும்.
த.சக்திவேல்
|