பசங்க சந்தோஷமா இருக்கத்தான் ஹாட் போட்டோஸை நெட்ல போடறேன்!
அரிசில் மூர்த்தி இயக்கத்தில், 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ பட போஸ்டரில் தெரியும் ரம்யா பாண்டியனின் கெட்டப்தான் டாக் ஆஃப் த டவுன். காரணம், சமூக வலைத்தளங்களில் யோகா போஸ், ஸ்டைலிஷ் லுக் என ஹாட் ரசகுல்லாவாக வலம் வருபவர், வெள்ளித்திரையில் பழைய புடவை, ரவிக்கை, மேக்கப் இல்லா முகத்துடன் ஆடு, மாடு, கன்னுக்குட்டியைக் கொஞ்சியபடி காட்சியளிக்கிறார்.
‘‘விட்டா என்னை கிராமத்து நாயகியாவே முத்திரை குத்திடுவாங்க போல...’’ அரிசிப் பற்கள் பளீரிட புன்னகைக்கிறார். ‘‘எனக்கும் நிறைய கேரக்டர்ஸ், லுக்குல நடிக்க ஆசை. ஆனா, என்னவோ கிராமத்து பைங்கிளியாவே அமையுது. ஸோ வாட்... இந்தக் கதைகள்தான் நான் யாரு, என் நடிப்பு என்னனு உலகுக்கு அறிவிக்குது... ஸோ, ஐ லைக் திஸ்...’’ கண் சிமிட்டுகிறார் ரம்யா பாண்டியன். ஊரடங்கு நாட்கள் எப்படிப் போச்சு?ஜாலியா குடும்பத்தோடு போச்சு. நானே நிறைய சமைச்சேன், வீட்டை பராமரிச்சேன். ஃபேமிலி கூடவே இருந்தேன். ரெண்டாவது லாக்டவுன்ல ரொம்ப நாட்கள் வீட்ல இல்ல. கேப்ல ஷூட்டிங் ஆரம்பமாகி பிசியாகிட்டேன்.வாழ்க்கை - புரொஃபஷன்... இது ரெண்டும் ஒரே மாதிரி இருக்காது. என்ன வாய்ப்பு கிடைக்குதோ அதை அப்படியே அக்சப்ட் செய்துக்கணும். இதைத்தான் இந்த லாக்டவுன் கத்துக் கொடுத்திருக்கு. ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ என்ன மாதிரியான கதை..?
சொல்லக் கூடாதே! ஆனாலும் சொல்லலாம்! டைட்டில்தான் படத்தின் ஒன்லைன். யார் ஆட்சி செய்தாலும் ஒரு பகுதி மக்களோட வாழ்க்கைல எந்த மாற்றமும் ஏற்படாது. இதைத்தான் படமா எடுத்திருக்காங்க. நான் ‘வீராயி’ என்கிற கேரக்டர்ல நடிச்சிருக்கேன். 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் இயக்குநர் அரிசில் மூர்த்தி பற்றி சொல்லுங்களேன்?
பக்கா பிளானிங்.
என்ன திட்டமிடுறாரோ அதை சரியா செய்திடுவார். யார் கிட்ட என்ன வேலை வாங்க முடியுமோ அதை சரியா கேட்டு வாங்குவார். இந்தக் கதையிலே எனக்கு வாய்ப்பு கொடுத்த அரிசில் மூர்த்தி சார், மற்றும் 2டி டீம் & சூர்யா சாருக்கு தேங்க்ஸ். நிச்சயம் வெள்ளித்திரைல நாம் கம் பேக் வர இந்தப் படம் காரணமா அமையும். உங்க அடுத்த படம்..?
சி.வி.குமார் சார் தயாரிப்பிலே ‘இடும்பன்காரி’ல நானும் ஷிவதாவும் நடிச்சிருக்கோம். இது ஒரு செம திரில்லர். இணையத்தில் யோகா போட்டோக்கள் செம ஹாட் மோடில் இருக்கே?பார்க்க அழகா இருக்கணும், ஃபிட்டா இருக்கணும், ஆரோக்கியமா இருக்கணும்... இதுதான் என் பாலிசி. அதனால யோகா, கூடவே ஜிம்மில் ஒர்க்அவுட். ஒரு வருஷமாதான் யோகா கத்துக்கிட்டு இருக்கேன். அப்படியே அதை போட் டோ எடுத்து போடறேன்... பசங்க சந்தோஷமா இருக்கட்டுமே!
ஷாலினி நியூட்டன்
|