வலைப்பேச்சு
@asaravanan21 - புது நோட்டே அச்சடிக்காமல் பழைய நோட்டை செல்லாதுன்னு சொன்னவர்களுக்கு, தடுப்பூசியே இல்லாமல் எல்லாருக்கும் தடுப்பூசின்னு சொல்றது பெரிய விசயமா?
@HariprabuGuru - கொட்டையோட பழத்தை சாப்பிட்டா வயித்துல மரம் வளர்ந்து ஆக்ஸிஜன் கிடைக்க ஆரம்பிச்சுடும்னு மட்டும்தான் இன்னும் சங்கிகள் உருட்டலை...
@HAJAMYDEENNKS - ஒரு செங்கல்லை வைத்து கோட்டையையே கட்டியிருக்கிறார் திராவிடத்தளபதி உதயநிதி ஸ்டாலின்!
@Paamaran_tweets - உலகத்துல எந்த ஒரு மூலைலயாவது ஸ்டாலின்னு பேரு வெச்ச ஒரு நாத்திகவாதி மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று ஆட்சி யமைக்க முடியுமா? பெரியார் மண் எங்கனு கேட்டா இனி உரக்க சொல்லலாம்.
@erasaravanan - உடைஞ்ச காலாலேயே எட்டி உதைச்சிட்டியே தாயி...
@tnrags - சபரிமலை அமைந்துள்ள சட்டமன்றத் தொகுதியில் BJP மாநிலத் தலைவர் சுரேந்திரனுக்கு மூன்றாவது இடம். உண்மையான பக்திக்கும், BJPக்கும் தொடர்பு இல்லை. Sorry.
@saravankavi - நட்டு வச்சா ஆக்சிஜனும் கொடுக்குது... வெட்டி வச்சா பிணத்தையும் எரிக்குது... என்னா மரம்யா...
@ksamhere - சொல்லி அடிக்கிறதுனா இதுதான்! திமுக தலைவரை ராயபுரத்தில் போட்டியிட சவால்விட்ட ஜெயக்குமார் பத்தொன்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!
@gpradeesh - குளித்தலை, சைதாப்பேட்டை, துறைமுகம், சேப்பாக்கம், திருவாரூர்ல திமுக வெற்றி... ஆண்டிப்பட்டி, பர்கூர், ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர் தொகுதிகளில் அதிமுக படுதோல்வி... That’s it. That’s the tweet...
@yaar_ni - விளக்கு பூஜை பண்ண வந்த ஆன்ட்டிகிட்ட எல்லாம் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டாம்ன்னு சத்தியம் எல்லாம் வாங்குன புரோகிதர் அவனை கண்டா வர சொல்லுங்க...
@Patham_tweets - இந்த துணை எதிர்க்கட்சித் தலைவர் பதவிலாம் கிடையாதா??
@Insomniac_911 - தலைவரே... சட்டசபை கேன்டின்ல பீஃப் பிரியாணி போட ஏற்பாடு செய்ங்க. அந்த நாலு பேரும் சட்டசபை பக்கமே தலை வச்சு படுக்க மாட்டானுங்க.
@dhayai - நான் எது செய்தாலும் எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்வதில்லை - பிரதமர் மோடி.எதுக்கும் ஒருதடவ ராஜினமா பண்ணிப் பாரு தெய்வமே!
@mahajournalist - Picture of the day!! #TNElections2021
@rmdkarthik - கலைஞரை அவமானப்படுத்த முக ஸ்டாலின்னு சொன்னாலே போதும்னு சொன்ன கமல்ஹாசன் நேற்று தோல்வியுற்று தலைகுனிந்து வரும் வீடியோவைப் பார்த்தபோது துளிக் கூட பரிதாபம் வரவில்லை.
@tparaval - மேற்கு வங்க நிலவரத்தைப் பார்க்கும்போது தமிழகத்திலும் மோடி, அமித் ஷா நாட்கணக்கில் பிரசாரம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது... என்கிறார் நண்பர்.
@Don_Updatez - நடிகர் விஜயகாந்தின் தேமுதிக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி.
@thoatta - படம் முடியுறப்ப, வழக்கம் போல பூரா ரவுடிகளும் தமிழக பிஜேபில போய்ச் சேர்ந்த மாதிரி காட்டியிருக்கலாம்... #சுல்தான்
@shivaas_twitz - வாஷிங் மெஷின் அமேசான்லதான் வாங்கணும் போல!
@Karl Max Ganapathy - Access to wealth என்பது நவீன அரசியலில் ஒரு முக்கிய அலகாக மாறியிருக்கிறது. ஓர் அரசியல் கட்சி மனித வளத்தை மட்டும் அல்லாது நாட்டின் சொத்தைக் கையாளும் வாய்ப்பை எந்த அளவுக்குப் பெற்றிருக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பேரம் பேசும் ஆற்றல் இருக்கிறது.
இந்த விஷயத்தில் பிஜேபியின் ஆற்றல் அபாரமாக வளர்ந்திருக்கிறது. தேசிய அளவில் காங்கிரஸ் எதிர்கொள்ளும் முக்கிய சவால் இது. பிராந்திய அளவில், ஆட்சியில் பங்கு என்பது, மக்கள் பிரதிநிதித்துவம் என்பதைத் தாண்டி, access to wealth என்ற அடிப்படையிலும் சிறிய கட்சிகளுக்கு மிக முக்கியமானது.
நவீன முதலாளித்துவ அரசியலில், தேர்தல் வெற்றிக்கும் ஒரு கட்சி வரித்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவ சுபாவத்திற்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது. திமுக, அதிமுக கொண்டிருக்கும் access to wealth அவர்களது தேர்தல் வெற்றியை எளிதாக்குகிறது. பாமக இதில் புத்திசாலித்தனமான கட்சி. மத்திய ஆட்சியில் பங்கு என்பதன் வழியாக அவர்கள் அடைந்த அனுகூலம் அது. அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் மிகவும் பின்தங்கியிருக்கும் இயக்கம். கம்யூனிஸ்ட்களுக்கு சித்தாந்தத் தடை.
தேர்தல் வெற்றிக்கு அவர்கள் கூட்டணியின் பெரிய கட்சியை சார்ந்திருக்கிறார்கள் என்றால் பெரிய கட்சியின் பொருளியல் வலுவை சார்ந்திருக்கிறார்கள் என்றுதானே பொருள். இந்த விஷயத்தில் கவனம் கொள்ளாத கட்சிகள் வரும் காலங்களில் தங்களது பேரம் பேசும் ஆற்றலை முற்றிலும் இழக்கும். அல்லது இரண்டு பெரிய கட்சிகளுக்கு நடுவே தந்திரமாக விளையாடி தனது இருப்பை தக்க வைக்கும். ஒரு புரிந்துணர்வின் கீழ் இரண்டு பெரிய கட்சிகளும் ஒருமித்து செயல்படும்போது இந்த சிறிய கட்சிகளின் அரசியல் இருப்பு இல்லாது போகும். முதலாளித்துவ அரசியலின் நுணுக்கமான பகுதி இது.
ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் சேர்ந்து ஒரு கட்டத்தில் பாமகவை இருட்டில் வைத்தார்கள். இனி தனித்துதான் ஆட்சி என்று சூளுரைத்து செயல்பட்டார் ராமதாஸ். அவருக்கு இருந்த Access to wealth அப்போது அவருக்கு உதவியது. மநகூ வழியாக கம்யூனிஸ்ட்களும் மதிமுகவும் விசிகேவும் திமுகவை சென்ற முறை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்ததன் வழியாக திமுகவுக்கு எதிரான தங்களது பேரம் பேசும் ஆற்றலை உறுதி செய்தார்கள்.அரசு - நிர்வாகம் - ஊழல் - சொத்து - சித்தாந்தம் என்ற கலவையின் வழியாகவே ஒரு நவீன அரசு நிலைக்க முடியும் என்று ஆகியிருக்கிறது.
எது எவ்வளவு விகிதம் என்பதே முக்கியம். அதில் ஒன்று கூடுதலாகும்போது ஆட்சிகள் மாறுகின்றன. வெறும் மனித வளத்தை மட்டுமே manipulate செய்து அதிகாரத்துக்கு வரும் கட்சி பாசிசமாக மட்டுமே பரிணாமம் அடைய முடியும். மேற்கு வங்க கம்யூனிசம் ஆவியானதற்குப் பின்னால் சில எளிய காரணிகளே இருக்கின்றன. அவர்கள் அங்கு நிரந்தரமாக பதிலீடு செய்யப்படுகிறார்கள்.
அதுவொரு தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவை. தூய்மைவாதம் என்பது குரூர அழகியல் கனவு. ஊழலே இல்லாத, பாரபட்சமே இல்லாத நிர்வாகம் என்பதும் அத்தகையதே. மனித மனதோடு நெருக்கமான தொடர்பு கொண்டது அரசியல். அதன் வசீகரமே அதுதான்!
@Sen Balan - மேடு பள்ளம் அற்ற தமிழ்நாடு அமைப்பதாக வாக்குறுதி கொடுத்த கமல் தோல்வி. ஜேசிபி உரிமையாளர்கள் அதிர்ச்சி
@robo_offl - என்னடா சிறுவானி தண்ணி இப்படி உப்புக் கரிக்குது..? அது சிறுவானி இல்லணே, கோமியம். கோயம்புத்தூர்ல இப்ப அதான் குடிக்குறோம்...
Ram Vasanth - போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினனோ தெரியல. இந்த பால், நான் பாக்காதப்பதான் பொங்குது.
@skpkaruna - பெண் ஊடகவியலாளர்கள், படுக்கையைப் பகிர்ந்துதான் முன்னுக்கு வருகிறார்கள் என ஒருத்தன் எழுதியதற்குப் பிறகும் எடப்பாடி பழனிச்சாமி வேணும்னா சுரணையற்று இருந்திருக்கலாம். மத்தவங்களும் அப்படி இருக்கணும்னு எதிர்பார்ப்பது பேராசை. அவதூறு, பொய்ச் செய்திகளுக்காகவே தனி சிறப்பு நீதிமன்றம் வரும்.
@Zenselvaa - ஜெயலலிதா மறைந்தபிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சந்தித்த அத்தனை தேர்தல்களிலும் தொடர் தோல்வியடைந்திருக்கிறது. விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்கள் மட்டுமே விதிவிலக்கு. உண்மை இப்படியிருக்க எதை வச்சு இந்த மூஞ்சை மிகப்பெரிய ஆளுமைன்னு சொன்னாங்கன்னு சத்தியமா புரியல!
@Devi Somasundaram - கோயமுத்தூரே ஒண்ணா சேந்து அதிமுகவிற்கு ஓட்டுப் போட்டுட்ட மாதிரி பேசுறவுங்க கவனத்திற்கு, 1000+ வாக்கு வித்தியாசம் - 2 தொகுதி, 4000க்குள் - 2 தொகுதி, 10000 வித்தியாசத்தில் - 3 7ல் தப்பித்தோம் பிழைத்தோம் என அதிமுக வெற்றிஇவ்வளவு பணம், அதிகாரத் துஷ்பிரயோகம், தேர்தல் கமிசன், பொய் பிரசாரம், மதவெறி, சாதிவெறி, எடிட்டட் வீடியோ, வாட்ஸ் அப் அவதூறு என எல்லாம் செய்தும் கூட 10ல் 2ல் மட்டுமே சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி...
திமுகவின் களப்பணி இன்னும் கொஞ்சம் சரியாக நடந்திருந்தால் கோவையும் நம் வசமே... உடனடித் தேவை திருச்சிக்கு நேரு, திருவண்ணாமலைக்கு வேலு, திண்டுக்கல்லுக்கு ஐபி, கரூருக்கு செந்தில் பாலாஜி, ராம்நாடு - சிவகங்கைக்கு பெரியகருப்பன் மாதிரி கொங்கு மண்டலத்தில் மாவட்டத்திற்கு சில செயல்வீரர்கள். அவ்வளவுதான்...
@Aazhi Senthil Nathan - ஒரு ஸ்டாலினால்தான் காங்கிரசையும் கம்யூனிஸ்ட்களையும் வழிநடத்த முடிகிறது. ஏனென்றால் யார் பூனைக்கு மணி கட்டுவது என்று நின்ற சமயத்தில், 2019ல், ஸ்டாலின்தான் முதன்முதலில் இந்தியாவில் பாஜகவுக்கு எதிரான பாதையைக் காட்டினார். இதை யாரும் மறைத்துவிடமுடியாது.மதச்சார்பின்மை, சமூகநீதி, மாநில உரிமை என்று மும்முனை ஆயுதமொன்றை பாஜகவின் இந்தி - இந்து - இந்துஸ்தான் என்கிற திரிசூலத்துக்கு எதிராகப் பயன்படுத்தினார். வென்றார்.
மே 2. இது மிக முக்கியமான நாள். தமிழ்நாட்டுக்கும் மேற்குவங்கத்துக்கும் கேரளாவுக்கும் இது மற்றுமொரு 1967. அறிஞர் அண்ணாவும் அஜய் முகர்ஜியும் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடும் 1967ல் பெற்ற சட்டப்பேரவை தேர்தல் வெற்றிகளால் உருவாக்கிய அரசியல் அடித்தளங்கள்தான் இன்று இந்த மாநிலங்களைக் காப்பாற்றியிருக்கின்றன. இந்தியாவையும் காப்பாற்றிவருகின்றன.
|