chat with ஸ்ருதி ஹாசன்
ஸ்வீட் பொங்கல் போல இனிக்கிறார் ஸ்ருதிஹாசன். டோலிவுட்டில் மீண்டும் ரிட்டர்ன் ஆன குஷி அது. அங்கே ரவி தேஜாவுடன் நடித்த ‘க்ராக்’ சங்கராந்தி ட்ரீட்டாக ரிலீஸ் ஆகியிருக்கிறது. பவன்கல்யாண் படத்திலும் பரபரக்கிறார். இங்கே விஜய் சேதுபதியின் ‘லாப’த்திலும் ஜொலிப்பவரிடம் ‘chat’டினோம். ஸ்ருதியின் அச்சு வெல்ல பதில்கள் இனி...
 *ஃபிட்னஸ்ல உங்களைக் கவர்ந்த நடிகை..? ஹாலிவுட் Halle Berry.
* ஃபேவரிட் ரெஸ்டாரன்ட்? லண்டன்ல இருக்கும் bone daddies.
* எதுக்கெல்லாம் பயப்படுவீங்க? பல்லி... பாம்பு...
*ஆண்களிடம் உங்களுக்கு பிடித்தது? Beard. தாடியோட இருக்கறவங்க தனி அழகுதான்!
*பர்சனல்ல மாற்றங்கள் இருக்கா? இல்ல. இன்னும் சிங்கிள்தான்.
* நீங்க ஆணாக இருந்தா, உங்களை கவர்பவர் யாரா இருக்கும்? ஐ லவ் தமன்னா. அழகும், செக்ஸியுமான மிக்ஸிங் கேர்ள் அவங்க!
*உங்களோட இன்ஸ்பிரேஷன்? அப்பாவும், என் ஃப்ரெண்ட்ஸும்.
*தெலுங்கில் யாரோட ஒர்க் பண்ண விரும்புறீங்க? பிரபாஸ்.
*நீங்க அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை? அய்யோ!
*பிடிச்ச ஹேங்அவுட் ஸ்பாட்? என் வீடுதான்!
மை.பாரதிராஜா
|