வலைப்பேச்சு



@star_nakshatra - மனது உடைந்து சிதறி நொறுங்கும் தருணங்களில் ஒன்று... வெயிட் மிஷினில் ஏறி எடை பார்க்கும் பொழுதே!

@kannan_twitz - அவளின் கோபம் பழகிவிட்டது... மவுனம் பயமுறுத்துகிறது!

@செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன் - குழந்தையாக இருக்கும்போது டாக்டராக வேண்டும், கலெக்டராக வேண்டும் என ஆசைப்படுகிறோம். வயதானபிறகு குழந்தையாகவே இருந்திருக்கலாம் என எண்ணுகிறோம்!

@ItsJokker - ஆறுதல் தேடுவதை விட முக்கியமானது, அதை சரியான நபரிடம் தேடுவது. இல்லையேல் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் கேலிக்கு உள்ளாகும் அல்லது ரகசியங்கள் அம்பலமாகும்.

@TRAMESH21548526 - வருத்தங்களில் உடன் இருப்பவர்களிடம் தாய்மையின் சாயலைக் காணலாம்!

@Imavud daiappan - இதே ஆணாதிக்க உலகத்தில்தான், ஓர் ஆண் பொதுவெளியில் எல்லோர் முன்பும் அழுவதை ஒரு கோழையின் வெளிப்பாடாக குறிப்பிடுகிறார்கள்...

@thecommonman - ஸ்கூல் லீவ் விட்டா மழை நிக்கும்னு ஒரு ஐதீகம் இருக்கு... இந்த வருஷம் அதுக்கும் வாய்ப்பில்ல... அடியே கொரானா...

@rparthiepan - ஊசி வெடி சத்தத்தின் அளவில் இடிச் சத்தம் கேட்டாலும், சித்தம் கலங்கி, அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு காரிலேயே ஓடிப் போவேன். அடுத்த இடியில் இந்த லோகம் அழிந்துவிட்டால் மனைவி மக்களுடனே மடிந்துவிடவேண்டும். சாவிலும் பிரிந்திருக்கக் கூடாது என்ற அறிவு + அர்த்தங்கெட்ட வேகமது.

இன்று நாலு மணிக்கு எழுந்து வாசலில் வந்தமர்ந்தேன். நாலா பக்கமும் இடிச் சத்தம். ஒவ்வொருவரும் வெவ்வேறு நாலா திசையில். எந்த பதற்றமும் இல்லை.என் மகள் கீர்த்தனாவுடன் குறுஞ்செய்தி பகிர்வு. காத்திருந்த கன்று ஒன்று கயிற்றிலிருந்து விடுபட்டு, தாயின் வயிற்றில் முட்டுவது போல என் விரல்கள் தட்ட, அடுத்த முனையில் கீர்த்தனா.

ஒரு நாயும் மூன்று பூனைகளும் இடிச் சத்தத்தில் பயந்து ஒளிந்து கொள்வதாக வருந்தினார். (அன்றைய என் நிலையில் இன்று இன்னொருவர்)
மரக்கிளைகளில் படும் மழைத்துளிகளின் சப்த பின்னணியில் மனம் + ரணம் இல்லா மரணம் வரை பேசினோம்.

அந்நேரம் முதியவர் குளிர் நடுங்க பால் போட வந்தார். பேச்சை நிறுத்தி “டீ குடிச்சிட்டுப் போங்க” என்றேன். குனிந்து பாக்கட்டை வைக்காமல் (கூன் இருந்ததால்) நின்ற நிலையிலேயே வைத்தார். ‘‘முடியாத வயசுலேயும் சம்பாதிக்க வேண்டியிருக்கு”; ‘‘ஏன் ஐயா! பசங்க யாருமில்லையா?”
அவர்- “நான் கல்யாணமே பண்ணிக்கலையே!”

@amuduarattai - ஒரு வீடு என்பது சுவர்களாலும் சில பல EMIகளாலும் கட்டப்படுகிறது...

@முத்துசெல்வன் - சீரியலுக்கு வசனம் எழுதுவதை கள்ளச் சாராயம் காய்ச்சுவது போல் அத்தனை ரகசியமாய் செய்ய வேண்டாம் இலக்கியவாதிகளே!

@skpkaruna - புயலின் கண் 450 கிமீ தொலைவில் இருக்கும்போதே கரைப்பகுதிகளில் கனமழை எனில், அதன் அருகில் எப்படி இருக்கும்! ‘புயலில் ஒரு தோணி’ எப்படி எதிர்கொண்டிருக்கும்! எத்தனை எத்தனை துணிச்சல்மிகு கடலோடிகள் உயிர் தந்து கடல் வழிப் பாதைகளை உருவாக்கி இருப்பார்கள்! மனிதகுலம் வெகுதூரம் பயணித்திருக்கு.

@Vinayaga Murugan - மெரினா பீச்சில் சுந்தரி அக்கா கடைன்னு ஒண்ணு இருக்கு. இந்த யூ டியூப்காரனுங்க பேசியே அவங்களை பெரியாள் ஆக்கிட்டாங்க. அதுபோல யூ டியூபில் ஆயிரம் மோசடி இருக்கு. கூரைக் கடைன்னு சொல்றானுங்க. பாட்டி கடைன்னு சொல்றானுங்க. அன்பான ஆயா கடைன்னு சொல்றாங்க. போனா நம்ம வாழ்க்கையே வெறுக்கறமாதிரி இருக்கு.

@Krishna Dvaipayana - இருபது வருடங்கள் முன்பு இதுபோன்று நான்கு வருடங்களுக்கு ஒரு அதிபயங்கர புயல் தமிழ்நாட்டு கடற்கரையை அடித்துக்கொண்டிருந்ததா? இது புவி வெப்ப மயமாதலின் அறிகுறியா இல்லை ஓர் அரிய நிகழ்வா..?

@Sen Balan - பிரதமர் பறக்க வேதிக் சயின்ஸ் புஷ்பக விமானத்தை வாங்கமாட்டார்கள். அதற்கு மட்டும் போயிங் 777-300 இஆர் உயர் ரக விமானங்கள்.
ஆனால், பொது மக்கள் கண்ணில் கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்ய வேதிக் சயின்ஸ். ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுபவனுக்கு ஏமாற்றத் தோன்றுமாம்.

@Saravanakarthikeyan Chinnadurai - உங்கள் வயதைக் காட்டிக் கொடுக்கும் முக்கியத் துரோகிகளில் ஒன்று நாஸ்டால்ஜியா பதிவுகள். உதாரணமாக, இதுவரை இளம் பெண் என நான் நம்பி ரசித்து வந்த ஒருவர் எழுதுகிறார்: ‘‘நான் சடங்கான போது அந்த ஓலைக் குடிசை ஓட்டை வழியே அதுவரை கேட்டிராத ஒரு புது வித இசை என் செவியில் புகுந்து என்னவோ செய்கிறது. அது மச்சானப் பாத்தீங்களா...’’

@Railganesan - வழக்கமா மழை, புயல் சமயங்களில் டிஷ்ல இருந்து டிவிக்கு சிக்னல் கிடைக்காது. இன்னைக்கு இந்த மாதிரி பண்ணியதில் இருந்து தடையில்லாம டிவிக்கு சிக்னல் வருது!

@Bogan Sankar - வாட்ஸ்அப்பில் என் பதிவுகள், கவிதைகள் வேறு பெயர்களில் எனக்கே அனுப்பப்பட்டதுண்டு. பொதுவாக எனது அலுவலக நண்பர்கள், ‘‘எவ்வளவு அறிவா எழுதிருக்கார்.... படிச்சி திருந்துங்க சார்...’’ என்பார்கள்! டுவிட்டரில் வேறுவிதம். நான் எழுதாத ‘காதல்’ கவிதைகள் எல்லாம் என் பெயரில் சுற்றிக் கொண்டிருக்கின்றன! யாரோ மெஸ்ல என் கணக்கில சாப்பிட்டுக்கிட்டு இருக்கான்!

@Ramanujam Govindan - ஆண் என்றால் சிக்ஸ் பேக் காட்டுபவனோ, பஞ்ச் டயலாக் பேசுபவனோ, ஐந்து பேரை அடிப்பவனோ அல்ல. மனைவியின் மென்மையான உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் மோகன், அதற்கு இதமாக இசையமைத்த ராஜா, உணர்வுகளால் உயிரளித்த எஸ்பிபி, அழகுணர்வுடன் படம்பிடித்த பி.சி.ஸ்ரீ ராம், இயல்பாக இயக்கிய மணிரத்னம்- இவர்கள் யாருமே சிக்ஸ் பேக் ஆணழகன் அல்ல! ஆனால், பெண்கள் விரும்பும் ஆண்கள்! காதலிக்க நல்ல கலைஞர்கள்!

@Meenakshisundarm Nataraajn - யப்பா... மழையோ புயலோ சீக்கிரம் வந்துட்டு போயிடு... முகநூல் பூரா நிறையா நிறையா predictions... தாங்கவே முடியலே!

@Annogen Balakrishnan - Zoom சந்திப்பில்... மொபைலை கிடையாக வைத்துவிட்டுப் பேசுகிறீர்களா? மியூட்டில் வைக்காமல், வரும் அலைபேசி அழைப்புகளுக்கு “அலோ! அலோ! நான் ஒரு மீட்டிங்கில் இருக்கேன் சார், அப்புறம் கூப்பிடுறேன்” என்று கத்திச் சொல்லத் தோன்றுகிறதா? பேசிக் கொண்டிருக்கும்போதே மீயூட்டுக்கு சென்று விடுகிறீர்களா? நிகழ்ச்சித் தொகுப்பாளர் பதறியடித்து “சார் சார் அன்மியூட் பண்ணுங்க...” என்று கதறு வதையும் காதில் வாங்காமல் பேசிக்கொண்டு செல்கிறீர்களா? பேசிக் கொண்டிருக்கும் போது அணைந்த வீடியோவை மீண்டும் கொண்டுவரத் தெரியாமல் தடுமாறுகிறீர்களா? ஒரேயொரு டியூப்லைட் வெளிச்சத்தில் இருட்டில் அமர்ந்துகொண்டு பேசுகிறீர்
களா? கையைக் கொடுங்கள், நீங்கள் மூத்த எழுத்தாளர் ஆகிவிட்டீர்கள்!

@Parthiban Gowthamaraj - காட்டு மொக்கை படம்னாலும் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் மாதிரி வருமான்னு கதறிட்டு இருந்தானுகளே, இவனுக எல்லாம் தியேட்டர் போய் ‘பிஸ்கோத்’, ‘இரண்டாம் குத்’தெல்லாம் பாத்தாங்களா?!