HOT கிசு கிசு



ஈவினிங் ரகளை!

அந்த மீடியம் ஹீரோவுக்கு நடித்து முடித்து ரிலீஸ் ஆக வேண்டிய படங்களே மூன்றைத் தாண்டுகிறது. நடிக்க வேண்டிய படங்களும் கையில் இருக்கிறது.  
ஆனால், மாலையானால் ‘ஓப்பன் த பாட்டில்’ என கச்சேரியை ஆரம்பித்துவிடுகிறார். ஷூட்டிங் பேக்கப் ஆகும் முன்னரே, உள்ளே தள்ள ஆரம்பித்து, முத்தெடுக்கிறாராம் அந்த நடிகர்.

கொட்டம் அடித்த 40 +!

பட வாய்ப்பில்லாத நடிகைகள் நான்கு பேர் ஒன்று சேர்ந்து ஃபெஸ்டிவல் ஹாலிடேவை விடிய விடிய ‘360 எம்.எல்.’ ஆக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். இதில் இருவரின் வயது நாற்பது ப்ளஸ்! ‘இளசுகளுக்கு புத்தி சொல்லாமல், இதுகளும் கும்மாளம் போடுதே’ என சைடு டிஷ் சப்ளையர்கள் வட்டத்தில் ஜாலி பேச்சாம்!

மாலத்தீவில் ஹேப்பி!

‘ஹேப்பி எண்டிங் ஸ்பெஷலிஸ்ட்ஸ்’ என பெயர் வாங்கித் திரும்பியிருக்கிறார்கள் அந்த டபுள் செக்கச் செவப்பு நடிகைகள். ஒருவர் மும்பை முந்திரிக்கொத்து, இன்னொருவர் ஹைதராபாத் பிரியாணி. இருவர் மீதும் நம்மூர் பெரும்புள்ளிக்கு செம கண். அப்புறமென்ன... மாலத்தீவுக்கு வரவழைத்து தீபாவளி ட்ரீட் கொடுத்து அசத்தியதில்தான் எண்டிங் ஹேப்பியாகியிருக்கிறது!

நடிகையின் ஃப்ளைட் சார்ஜை ஏற்ற நடிகர்!

கொஞ்ச நாளாக கெட்ட பெயர் வாங்காமல் இருந்ததில் அவருக்கே போர் அடித்திருக்கும் போலிருக்கிறது. மறுபடியும் ஃபார்முக்கு வந்துவிட்டார் அந்த ஹீரோ.  சமீபத்தில் அவர் நடிக்காத ஒரு படத்தில் அவரை ‘ஒரு பாடல் மட்டும் பாட' அழைத்திருக்கிறார்கள். அதில் ஹேப்பியான ஹீரோ, கூடவே லேடி வாய்ஸுக்கு ‘அந்த நடிகையை கூப்பிடுங்க...’ என சிபாரிசும் பண்ணினார்.  

‘அந்த நடிகையை கூப்பிடணும்னா, மும்பை டு சென்னை ஃப்ளைட் டிக்கெட் + ஹோட்டல் என செலவு எகிறுமே... அவ்ளோ பட்ஜெட் இல்லையே’ என இவர்கள் கையை விரித்திருக்கிறார்கள். ஹீரோ கூலாக தன் கைக் காசை  போட்டு நடிகைக்கு ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணி வரவழைத்து, டூயட் பாடியும் மகிழ்ந்திருக்கிறார்.

ஷியஸ்