Data corner



*24 லட்சம் காச நோயாளிகளுடன் இந்தியா, உலகிலேயே அதிக எண்ணிக்கையில் (27%) உள்ளது.

*80 யானைகள் இந்திய அளவில் ஆண்டுக்கு மின்வேலி பாதிப்பால் உயிரிழப்பதாக மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை தெரிவிக்கிறது.

*1.05 கோடி தேசிய ஊரடங்கிற்குப் பிறகு கிராமங்களுக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை. இதில் கட்டுமானம், உற்பத்தி, தினசரி ஊதியம், விருந்தோம்பல் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 13,00,000.

*2.4% தொகையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து ராணுவத்துக்கு இந்தியா செலவிடுகிறது

*25,000 முறை நாம் ஒரு நாளைக்கு சுவாசிக்கிறோம். 10,000 லிட்டர் காற்றை 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட உள்ளிழுக்கிறோம். இதில் குழந்தைகள் மிக வேகமாக சுவாசிக்கிறார்கள். உடல் மேற்பரப்பு அடிப்படையில் அவர்கள் பெரியவர்களை விட அதிக காற்றை சுவாசிக்கிறார்கள்.

*9 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க குடும்பங்கள் ஒரு பெண்ணால் வழி நடத்தப்படுகின்றன.  

*25% இந்தியப் பெண்கள், 25 வயதுக்குள் சுயதொழில் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.

அன்னம் அரசு