எனக்கு மாஸ்க் அவசியமில்ல... லாக்டவுன் எனக்கு நன்மையை செய்திருக்கு ! ஓவியா Returns!



‘களவாணி 2’க்குப் பிறகு தன் சொந்த தேசத்துக்கு சென்ற ஓவியா, இப்போது மீண்டும் சென்னை வந்திருக்கிறார். முன்பை விட கூடுதல் பொலிவுடனும் எக்ஸ்ட்ரா எனர்ஜியுடனும் புன்னகையுடனும். ‘‘எல்லாரும் தீபாவளிக்கு என்ன பண்ணுனீங்கனு கேட்கறாங்க.
ஒரே ஒருநாள் மட்டும் தீபாவளி கொண்டாடுறத ஸ்பெஷல் டேவா நினைக்கல. ஒவ்வொரு நாளுமே எனக்கு தீபாவளிதான். எல்லா நாளையுமே நான் செலிபிரேட் பண்ணுவேன். ஏன்னா, ஒவ்வொரு நாளுமே கடவுளோட கிஃப்ட்தான்...’’ மகிழ்ச்சியில் சிறகடிக்கிறார் ஓவியா.

மறுபடியும் சென்னை..?

யெஸ். ஒரு வருஷ இடைவெளிக்குப் பிறகு சென்னைக்கு வந்திருக்கேன். எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் இது. இந்த லாக்டவுன் எல்லாரையும் ஸ்தம்பிக்க வச்சிடுச்சு. எல்லாரையுமே கொரோனா பயமுறுத்திடுச்சு. இதை ஒரு வைரல் ஃபீவர் மாதிரிதான் பாக்கறேன். லாக்டவுன்ல எல்லாரும் கஷ்டப்பட்டாலும் அது எனக்கு நன்மையைத்தான் செய்திருக்கு. கேரளாவுல எங்க வீட்ல இருந்தேன். அப்பாவோட நிறைய டைம் செலவழிச்சேன். என் செல்ல நாய்க்குட்டியை நல்லா கொஞ்ச முடிஞ்சது.

எனக்கு மாஸ்க் தேவையில்ல. அதுல நம்பிக்கையும் இல்ல. கேரளா எனக்கு போர் அடிச்சதும், நான் லொகேஷனை மாத்திட்டேன். சில மாதங்கள் கொடைக்கானல்ல ஒரு சின்ன வில்லேஜ்ல இருந்தேன். அங்க மொபைல் சிக்னல், டவர் எதுவுமில்ல. எந்த டென்ஷனும் இல்லாம கிராம மக்களோட மக்களா பழகினேன். சொல்லப்போனா, நான் ஒரு நடிகை என்பதையே மறந்துட்டேன்!

ஸ்லிம் ஆகிட்டீங்களே..?

அப்படியா தெரியுது..?! முன்னாடி என் இஷ்டத்துக்கு சாப்பிடுவேன். மொறுமொறுன்னு நெய் தோசை எல்லாம் ஒரு கட்டு கட்டுவேன். ஆனா, சமீபமா சாப்பாட்டுல கண்ட்ரோலா இருக்கேன். யோகா பண்ண ஆரம்பிச்சிருக்கேன். அதெல்லாம் சேர்த்து ஸ்லிம்மா காட்டுதோ என்னவோ!
எல்லாருமே என்னை நீங்க ‘களவாணி’ ஓவியாவா, இல்ல ‘90 எம்.எல்.’ ஓவியாவானு கேட்குறாங்க. அதெல்லாம் நான் நடிச்ச கேரக்டர்ஸ். அவ்ளோதான்.

அது ரெண்டுமே எனக்கு எக்ஸ்ட்ரீம் லெவல். அது ரெண்டும் என் நிஜ கேரக்டர்களுமில்ல. என்னோட கேரக்டர் ரொம்ப பெக்யூலியர்.
கைலதான் ஒரு டாட்டூ இருக்கே... இப்ப கால்லயும் ஒரு டாட்டூ எதுக்கு..?

இது ஸ்பெஷல் டாட்டூ. கைல, கால்லனு சதைப்பகுதிகள்ல டாட்டூ வரைஞ்சிக்கறது கஷ்டமா இருக்காது. எளிதா டாட்டூ போட்டுக்க முடியும். ஆனா, கால் பாதத்துக்கு மேல மணிக்கட்டை ஒரு பாம்பு சுத்தியிருக்கற டாட்டூ வரைஞ்சிருக்கேன். அதுவும் இடது கால் மணிக்கட்டுல...

எலும்புகள் அதிகம் இருக்கற பகுதி இது. ஸோ, டாட்டூ வரையும் போது பெயின் இருந்தது. அந்த வலியை கம்பேர் பண்ணும் போது, வாழ்க்கைல நாம சந்திக்கற... சந்திக்கப்போற வலிகள் பெருசா தெரியாதுனு எனக்குள் ஒரு நம்பிக்கையை விதைச்சது.

கிட்டத்தட்ட இது என் பர்சனல் சைக்காலஜி ட்ரீட்மென்ட் மாதிரிதான். பயத்தை கடந்து வரணும்னா, அதை நேர்ல சந்திச்சாதான் முடியும்னு நினைச்சேன். பயத்தை கடந்து வந்துட்டேன்!உங்க ஆர்மிக்கு சொல்ல விரும்புவது என்ன?ஃபேன்ஸுக்கா?! மெசேஜ் சொல்ல மாட்டேன்.

அட்வைஸும் பண்ணமாட்டேன். சந்தோஷமா இருங்க. ஒரு கன்சர்ட்டை நினைச்சு இப்படித்தான் இருக்கணும்... அப்படித்தான் இருக்கணும்னு கனவு காணாம நிகழ்காலத்தை கொண்டாடுங்க. அன்றைய நாளை அர்த்தமுள்ளதாக்குங்க. ஸ்டே ஹேப்பி!

மை.பாரதிராஜா