Hot kisu kisu



மேனேஜரின் மேஜிக்!

டாப் ஹீரோவின் மேனேஜர் அவர். தொடர்ந்த அவரது பணிவான கனிவான சேவைகளால் மனம் குளிர்ந்த ஹீரோ, மேனேஜரை தன் அடுத்த படத்தில் புரொட்யூசராக உயர்த்தினார். அப்புறமென்ன? தலைகால் தெரியாமல் குஷியான மேனேஜர், ஹீரோ வட்டாரத்திலேயே தன் வேலையைக் காட்டியதில் கடுப்பானார் ஹீரோ. அதே கொதிப்புடன் அவரை தன் ‘குட் புக்’கில் இருந்தே தூக்கி வீசினார்.

சட்டென மாறும் வானிலை போல, இப்போது ஹீரோவுடன் மீண்டும் ஒட்டிக்கொண்டுள்ளார் அந்த மேனேஜர். என்ன மேஜிக்கோ?

இன்ஸ்டாவில் மட்டும் நடிகை!

மீண்டும் டும்டும்டும் செய்த நடிகை, இப்போது கணவருடன் சொந்த தேசத்தில் இருக்கிறார். சமீபத்தில் அவரிடம் புது இயக்குநர் ஒருவர் கதை சொல்ல டைம் கேட்டு அணுகியிருக்கிறார். ஆனால், நடிகையிடம் இருந்து ‘யெஸ்... நோ’ என எந்த ரியாக்‌ஷனும் வரவில்லையாம்.  

இதுபற்றி ஏற்கெனவே அவரை வைத்து இயக்கியவரிடம் கேட்டால்... ‘மேடத்துக்கு சினிமா ஆசை இல்லை...’ என சொல்லியிருக்கிறார்கள்.
‘அப்புறம் எதற்காக இன்ஸ்டாவில் க்ளாமர் போட்டாக்களை தெறிக்க விட வேண்டும்’ எனக் கேட்டு திரும்பியிருக்கிறார் அந்த பு.இ.

நடிகை விட்ட குத்து!

‘இது டபுள் மீனிங் இல்ல.. ஒன்லி ஸ்டிரைட் மீனிங்’ என சொல்லும் இயக்குநர், தன் முதல் பட நாயகியிடம் கால்ஷீட் கேட்டுப் போனார். ‘இதுவும் டபுள் மீனிங் படம்தானா’ எனக் கேட்டுவிட்டு, ஓகே சொல்வதற்கு முன்னர், ‘ஹீரோவும் அவரேதானா’ எனக் கேட்டிருக்கிறார்.
இயக்குநர் கூச்சத்துடன் ‘அவருக்கு மார்க்கெட் இல்லீங்க... நீங்க எனக்குத்தான் ஜோடியா நடிக்கப் போறீங்க’ என பதில் சொல்ல, ஷாக் ஆன நடிகை ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு ‘ஹீரோவா ஹிட் குடுத்துட்டு வாங்க... அடுத்த படத்துல நடிக்கறேன்’ என குத்து விட்டிருக்கிறார்!

சும்மா இருந்தாலும் 5C!

பட வாய்ப்புகள் இல்லாததால் குறைவாக சம்பளம் கொடுத்தால் போதும் என நினைத்த தயாரிப்பாளர் ஒருவர், அந்த சீனியர் காமெடியரை அணுகியிருக்கிறார். அந்த நடிகருக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் ரெட் கார்டு கொடுத்திருக்கும் விபரம் இவருக்கு தெரியாது!

வாய் நிறைய சிரிப்புடன் வரவேற்ற நடிகர், ஐந்து விரல்களை நீட்டியதுடன், இயக்குநராக தனக்கு வேண்டப்பட்டவரை ஒப்பந்தம் செய்யும்படி சொல்லி யிருக்கிறார்.தலை சுத்திப்போன தயாரிப்பாளர், இதுவரை அதிர்ச்சியில் இருந்து மீளவேயில்லை!

இயக்குநரும் இளம் நடிகையும்!

ஹிட்டுகள் கொடுத்த இயக்குநர் அவர். கல்யாணமானவர் என்றாலும், பார்க்க இளவட்டமாக இருப்பார். இப்போது, தான் அறிமுகப்படுத்தும் நாயகியுடனே, பின்னிப் பிணைந்திருக்கிறார். இயக்குநரைப் பார்க்க, ஃபிளைட் பிடித்து வந்துவிடும் நடிகை, இங்கே செவன் ஸ்டார் ரேஞ்ஜ் பார்ட்டிகளில் அவருடன் ஜோடியாக வலம் வருகிறார். இதைப் பார்த்து ‘வாழ்த்துக்கள்’ என கோரஸ் குரல்கள் ஒலிக்க... கூச்சத்தில் நெளிகிறார் டைரக்டர்.

ஷியஸ்