DATA CORNER



19.73 கோடி இந்திய மக்கள் - ஏழில் ஒருவர் - மனநோயுடன் வாழ்கின்றனர் என்று 2019 குளோபல் பார்டன் ஆஃப் டிசீஸ் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

2,061 பெண் குழந்தைகள் உள்பட 3,531 குழந்தைகள் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த ஓராண்டில் இந்தியாவில் தத்தெடுக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

2,800 க்கும் மேற்பட்ட வீட்டு / குடும்ப வன்முறை புகார்கள் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை கேரளாவில் அதிகரித்துள்ளதாக அம்மாநில காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

22,792 கைதிகளை அடைப்பதற்கான இடவசதி உள்ள தமிழக சிறைகளில் 13,999 கைதிகளே உள்ளனர். அதில் 601 பெண் கைதிகள், 112 வெளிநாட்டுக் கைதிகள். தூக்கு தண்டனைக் கைதிகள் 6. ஆயுள் கைதிகள் 2,495.

61.3% கைதிகளே தமிழக சிறைகளில் அவற்றின் கொள்ளளவில் இருப்பதாக சிறைக் கைதிகள் தொடர்பாக  தேசிய குற்ற ஆவணக் காப்பகம்
வெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

4,49,002 சாலை விபத்துகளில் 1,51,113 பேர் 2019ம் ஆண்டில் இந்தியாவில் இறந்துள்ளனர். 4,51,361 பேர் காயமடைந்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகள், இறப்புகள் அதிவேக வாகனப் பயணத்தால் நிகழ்கிறது. இந்தக் காரணங்களால் 67.3% அல்லது 1,01,699 இறப்புகளும்; 71% விபத்துகளும், 72.4 % பேர் காயமடைவதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சரியான லைசென்ஸ் இல்லாமல் அல்லது டிரைவிங் கற்பவரின் லைசென்ஸுடன் வாகனம் ஓட்டுவது மொத்த விபத்துகளில் 15% ஆக உள்ளது. மொத்தத்தில் 6.2%, சாலைகளில் உள்ள குழிகள் காரணமாக ஏற்படும் விபத்துகளால் உயிரிழக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் 41%க்கும் மேலான இறப்புகள் வாகன விபத்துகளால் ஏற்பட்டுள்ளன.