யூனாசென்ற இதழ் தொடர்ச்சி...

‘‘வாட்...? அப்ப, மருந்து கண்டு
புடிச்சிட்டிங்களா?’’
‘‘ஹாய்...’’
‘‘என்னது?’’

‘‘ஆமான்னு சொன்னேன். மருந்து கண்டுபுடிச்சிட்டோம். ஆனா, எங்க கெட்டநேரம், எங்க முகாமை
பிரிட்டீஷ் ராணுவம் சுத்தி வளைச்சிட்டாங்க...’’
‘‘அய்யய்யோ...?’’‘‘நான் உள்பட எங்க குழுவில இருந்த 7 பேர் மேலயும் துரோக வழக்குப்பதிவு பண்ணி, தூக்குல போட பிரிட்டீஷ் ராணுவம் உத்தரவு போட்டிச்சி. தான், செத்தாலும் பரவாயில்லை... மகள் தப்பிக்கணும்னு எங்க அப்பா நெனச்சிருக்காரு. கடைசி முயற்சியா, கையில இருந்த சாம்பிள் மருந்தை, யாருக்கும் தெரியாம என்கிட்ட கொடுத்தார் என்னோட அப்பா. ‘ஒருவேளை தப்பிக்க முடியலைனா... இதை எப்படியாவது குடிச்சிடு யூனா. உனக்கு மரணமே வராது. ஜப்பான் அரசாங்கத்துக்கு இந்தத் தகவலையும், மருந்து பார்முலாவையும் கண்டிப்பா சேர்த்திடு’னு
சத்தியம் வாங்கினாரு...’’நான் பிரமித்தபடி, மவுனமாக இருந்தேன். அவளே தொடர்ந்தாள்.

‘‘ஆனா, அவர் திட்டப்படி எதுவும் நடக்கலை. என் கண்ணு முன்னாடியே என்னோட அப்பாவைத் தூக்குல போட்டாங்க. தூக்குக்கயிறுல துடி
துடிச்சு சாகுறதுக்கு முன்னாடி கடைசி கடைசியா என்னை அவர் பார்த்த பார்வையில, ‘எப்படியாச்சும் தப்பிச்சுடு யூனா...’ங்கிற கெஞ்சல் இருந்தது தெரிஞ்சது. அவர் அதிர்ஷ்டமில்லாத ஆளு. அவர் ஆசைப்பட்டபடி எதுவும் நடக்கலை.

தூக்குக்கயிறுல இருந்து அவர் உடலை கழட்டி எடுத்த கொஞ்ச நேரத்தில என்னையும் தூக்குமேடைக்கு கூட்டிட்டுப் போனாங்க. நடக்கிறது நடக்கட்டும்னு முடிவெடுத்து அந்த மருந்தைக் குடிச்சிட்டேன். அந்த மருந்து வேலை பார்க்கறதுக்குள்ள என்னை தூக்குல போட்டுட்டாங்க. என் உடம்பை விட்டு உயிர் பிரிஞ்சிடுச்சு. எங்க ஏழு பேர் உடல்களையும் எண்ணூர்ல, கடற்கரையோரமா பிரிட்டீஷ்காரங்க புதைச்சிட்டாங்க...’’‘‘யூனா...’’ என்றேன் பதற்றத்துடன்.

சில நிமிட மவுனத்துக்குப் பிறகு அவள் தொடர்ந்தாள். ‘‘தாஸ், நான் குடிச்ச மருந்து, உள்ள போன சில மணிநேரத்துக்குப் பிறகு வேலை பார்க்க ஆரம்பிச்சிடுச்சு...’’‘‘என்ன சொல்ற?’’‘‘ஆமா. அந்த மருந்து உள்ள போனதால என்னோட உடம்பு கெட்டுப் போகலை. என்னோட உயிரும் அழிஞ்சு போகலை. என் உடம்பும், உயிரும் இன்னும் பத்திரமா இருக்கு. ஆனா, தனித்தனியா!’’‘‘ப்பா... நம்பவே முடியல.’’

‘‘உண்மைதான் தாஸ். இது நடந்து ஆச்சு 70 வருஷம். இந்த எண்ணூர் கடற்கரை மண்ணுக்கடியில, என்னோட உடம்பு துளி சேதம் இல்லாம அப்படியே இருக்கு - ஆழ்ந்த உறக்கத்தில இருக்கிற மாதிரி. என்னைய தூக்குல போட்ட நிமிஷத்துல எப்படி இருந்துச்சோ... அதேமாதிரி இப்பவும் பத்திரமா இருக்கு. தாஸ், இங்கதான் எனக்கு உன்னோட உதவி தேவைப்படுது...’’‘‘என்ன உதவி ஜப்பான். உன் உயிரையும், உடம்பையும் சேர்த்து உன்னை திரும்பவும் பழைய நிலைமைக்கு கொண்டு வரணும். உன்னையும், உன் அப்பாவையும் தூக்குல போட்ட அந்த பிரிட்டீஷ் பக்கிகளை தேடிப்பிடிச்சு பழிக்குப்பழி வாங்கணும்.

அவ்வளவுதானே?’’
‘‘ஸ்ஸ்ஸ்ஸ்... தாங்கலை. உங்க ஊரு சினிமாலதான் அதெல்லாம். என்னைய தூக்குல போட்ட பிரிட்டீஷ்காரனுங்க எப்பவோ பரலோகம் போயிருப்பாங்க. எனக்கு வேண்டியது வேற மாதிரியான உதவி...’’‘‘கதை ஒரு ஆக்‌ஷன் மோடுக்கு திரும்பும்னு நெனச்சேன். சரி, ஓகே. என்ன மாதிரி உதவி செய்யணும்? சொல்லு!’’‘‘என்னோட உடம்பைத் தோண்டி எடுக்கணும். எடுத்து எரிக்கணும்...’’விடிவதற்கு இன்னும் 6 மணிநேரம் இருந்தது. எங்கள் கார் தாழாங்குப்பம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அங்கு தான் அவளது உடல் புதைக்கப்பட்டிருக்கிறதாம்.

 யூனாவின் கதையை, அந்த கடற்கரை மணலில் கேட்டுமுடித்த பத்தாவது நிமிடத்தில் முடிவெடுத்து விட்டேன் - அவளுக்கு உதவுவது என்று. நண்பனிடம் போனில் பேசி, அந்த இரவில் அவனது காரை இரவல் வாங்கினேன். கடப்பாரை, மண்வெட்டி தயார் செய்து கொண்டேன். யூனா எந்தப் பக்கம் இருக்கிறாள் என்று தெரியாததால் குத்துமதிப்பாக இடதுபக்கம் திரும்பி ‘‘போலாம் ரைட்...’’ என்றேன். ‘‘ரைட்,’’ என்று வலதுபக்கம் இருந்து குரல்
வந்தது.

தாழாங்குப்பம், ஊருக்கு படு ஒதுக்குப்புறத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் ஆள் நடமாட்டம் இருக்காது. சரியான இடம் யூனாவுக்குத்தான் தெரியும் என்பதால் அவளே காரை ஓட்டினாள். நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தேன். கார் ஸ்டீயரிங் இடதும், வலதுமாகத் திரும்பி, சீராகச் சென்று கொண்டிருந்ததே தவிர, அவள் அமர்ந்து ஓட்டுவது என் கண்களுக்குத் தெரியவில்லை. யாராவது பார்த்தால், டிரைவரே இல்லாமல் கார் தானாக வந்து கொண்டிருப்பதைப் பார்த்து அந்த அர்த்தராத்திரியில் ரத்தம் கக்கியிருப்பார்கள்.

‘‘உன்னோட அப்பா மாதிரியேதான் நானும் ஒரு ஆராய்ச்சியாளன் யூனா...’’ என்றேன் மவுனத்தைக் கலைத்து.‘‘தெரியும் தாஸ். நீ ஒரு கஷிகோய்...’’‘‘என்னது?’’‘‘நீ பயங்கர புத்திசாலி. அது தெரிஞ்சதாலதான், உதவி தேடி உன்கிட்ட நான் வந்தேன். ஆமா, உன் ஆராய்ச்சில என்ன பிரச்னை?’’சிறிதுநேரம் அமைதியாக இருந்தேன். எனது கடந்த நாட்களை நினைக்கவே பயமாக இருந்தது. யெஸ்... எனது கொடூரமான ஃப்ளாஷ்பேக்கை ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

‘‘ரொம்ப இழுத்திடாத தாஸ். பத்து, பதினைஞ்சு நிமிஷத்தில நாம அந்த இடத்துக்கு போயிடுவோம். அதுக்குள்ள சுருக்கமாச் சொல்லி முடிச்சிடு...’’
‘‘ஓகே. என்னோடது உங்க அப்பா மாதிரி உயிரைக் காப்பாத்துற ஆராய்ச்சி கிடையாது. நாட்டோட பொருளாதாரத்தைக் காப்பாத்துற கண்டுபிடிப்பு. அது மட்டும் சக்சஸ் ஆச்சுனா... உங்க ஜப்பான் எல்லாம் காலி. ஆளப் போறான் தமிழன்னு... ஒரு பாட்டு கேட்டிருக்கியா நீ?’’

‘‘ஓவர் பில்டப் வேண்டாம் தாஸ். நேரம் இல்லை. மேட்டருக்கு வா சீக்கிரம்...’’‘‘ரைட்டு. இன்ஜினியரிங் படிச்சிக்கிட்டு இருக்கிற டைம்லயே என்னோட மனசுக்குள்ள ஒரு ஸ்பார்க். எதிர்காலத்தில இந்த உலகத்துக்கு பெரிய தலைவலியா இருக்கப் போறது எரிபொருள் பிரச்னைதான். அதுக்கு ஒரு மாற்றுத்தீர்வு கண்டுபிடிக்கணும். நான் சொல்றது புரியுதா? பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கறதுதான் என்னோட லட்சியம்.

மத்த பசங்க கிளாஸை கட்டடிச்சிட்டு சினிமாவுக்கு போகும்போது, நான் லேபரட்டரிக்கு போவேன். லேப் இன்சார்ஜ் வந்து, ‘டைம் முடிஞ்சிடுச்சு. கதவைச் சாத்தணும், கிளம்புடா’னு சொல்ற வரைக்கும் அங்கேயே கிடப்பேன். காலேஜ் முடிச்சதும், கிடைச்ச பணத்தைப் புரட்டி, வீட்டிலயே ஒரு லேப் ரெடி பண்ணுனேன்...’’‘‘ததிமோ யோய்...’’‘‘அப்டீனா?’’‘‘வெரிகுட்!’’

‘‘ஓ! அந்த லேப்தான் எனக்கு எல்லாமே. என்னோட ஆராய்ச்சி கிட்டத்தட்ட ஃபைனல் ஸ்டேஜுக்கு வந்திடுச்சி. சக்சஸ் கட்டத்தை நெருங்கிட்டேன். அந்த நேரத்தில எனக்கு கடுமையான பணக்கஷ்டம். கொஞ்சம் பணம்
மட்டும் இருந்தா, சாதிச்சிடலாம்...’’‘‘அப்றம்...?’’
‘‘அப்பதான் என்னோட உதவிக்கு வந்தார் பெருமாள்...’’
‘‘யார் அவரு?’’

‘‘எங்க லேப் இன்சார்ஜ். தேசிய கட்சி ஒண்ணுல ரொம்ப செல்வாக்கானவர். எல்லாரும் அவரை ஒன்றியம் பெருமாள்னுதான் கூப்பிடுவாங்க. அவருக்கு என்னைத் தெரியும். என்னோட திறமை தெரியும். என் ஆராய்ச்சி யில கண்டிப்பா ஜெயிப்பேன்னும் தெரியும். அதனால எனக்கு உதவி செய்ய முன்வந்தாரு. ‘எவ்வளவு பணம் வேணும்’னு கேட்டாரு. ஆறு, ஏழு லட்சம் அப்ப தேவைப்பட்டுச்சு. அவர் சுத்திவளைச்செல்லாம் பேசலை. ‘பத்து லட்சம் தர்றேன். கண்டுபிடிப்பு உன்னோட பேர்ல இருக்கட்டும். ஆனா, வர்ற லாபத்துல எனக்கு 75 பர்சன்ட். டீல் ஓகேவா’ன்னு கேட்டாரு. அப்ப இருந்த நெருக் கடியில, எனக்கு வேற வழி தெரியல. ஓகேன்னு சொல்லிட்டேன்...’’‘‘அப்றம் என்னப்பா பிரச்னை உனக்கு?’’

‘‘பிரச்னையே அப்புறம்தான் நடந்துச்சு யூனா. சீக்கிரமா கண்டு பிடிச்சிடணும்னு ராத்திரி, பகல்னு ஓய்வில்லாம லேபரட்டரியில கிடந்தேன். அதான் நான் பண்ணுன தப்பு. தூக்கக் கலக்கத்தில ஹைட்ரோகுளோரிக் ஆசிட்டை கலக்கக்கூடாத ரேஷியோல நான் கலக்க...’’
‘‘அய்யய்யோ... என்ன ஆச்சு?’’‘‘முதல்ல கொஞ்சம்நுரையா வந்துச்சு. அப்புறம், மஞ்சள்கலர்ல புகை. ஏதோ தப்பு நடக்கப் போகு துனுசுதாரிச்சு மாற்று நடவடிக்கை எடுக்கறதுக்குள்ள, நான் அரும்பாடு பட்டு தயாரிச்சிருந்த என்னோட தயாரிப்பு என் கண்ணு முன்னாடியே வெடிச்சு சிதறுச்சு. லேபரட்டரி, உபகரணங்கள், எல்லாமே காலி. நான் தப்பிச்சதே பெரிய விஷயம்...’’

சில வினாடி அமைதிக்குப் பிறகு தொடர்ந்தேன். ‘‘விஷயம் பெருமாளுக்கு தெரிஞ்சது. மறுநாளே கிளம்பி வந்திட்டாரு. ‘தம்பி, உன்கிட்ட வட்டி, கிட்டி எல்லாம் கேக்கலை. நம்ம பணம் பத்து லட்சத்தை பத்திரமா எண்ணி எடுத்து வெச்சிடு. பத்து நாள் டைம். பணம் வரலை... 11வது நாள், வேற மாதிரி பண்ணிடு வேன். ஆமா...’னு மிரட்டிட்டுப் போனாரு. நாளைக்குத்தான் அவர் கெடு விதிச்ச 11வது நாள்...’’
என் தோளில் தட்டிக் கொடுத்தாள் யூனா. ‘‘கவலைப்படாத தாஸ். நான் உனக்கு உதவி பண்றேன்...’’

‘‘எப்படி உதவி பண்ணுவ?’’‘‘1942ல நாங்க இந்தியா வந்தப்ப, தேவையை சமாளிக்கிறதுக்காக அமெரிக்க டாலர்கள் நிறைய எடுத்துட்டு வந்திருந்தோம். அதையும், கொஞ்சம் தங்க பிஸ்கட்டையும் பத்திரமா ஒரு பெட்டியில வெச்சு, புதைச்சு வெச்சிருக்கோம். என் உடம்பு இருக்கிற இடத்துக்கு பக்கத்துலதான் அந்த பணப்பெட்டி இருக்கு. அதை எடுத்துக்கோ. அதை மாத்துனா, இன்னிக்கு மதிப்புல, உன்னோட தேவையை விட பல மடங்கு கிடைக்கும்...’’

‘‘அந்தப் பணம் எல்லாம் இன்னுமா புழக்கத்துல இருக்கும்? அமெரிக்காகாரன் அதை டீமானிடைசேஷன் பண்ணித் தொலைச்சிருக்க மாட்டானா?’’ உஷாராகி கேட்டேன்.‘‘பண்ணியிருந்தாலும் கவலையில்லை. அந்தப் பணத்துக்கு ஆன்டிக் வேல்யூ இருக்கும். அதுவும் உதவலைனா, இருக்கவே இருக்கு தங்க பிஸ்கட். எப்படினாலும் உன் கடன் தீர்ந்திடும். ஆராய்ச்சிக்கும் தேவையான பணம் கிடைச்சிடும். நிச்சயமா நீ சாதிக்கலாம்!’’

கியர் தானாக நான்கில் இருந்து இரண்டுக்கு மாற, ஸ்பீட் பிரேக்கரில் கார் ஏறி இறங்கியது. பணப்பிரச்னை தீர்ந்ததில், எனது கவலைகள் பறந்திருந்தன. மனதுக்குள் உற்சாகம் பரவியிருந்தது. யாருமற்று இருந்த டிரைவிங் சீட் பக்கம் திரும்பிக் கேட்டேன்,
அடுத்த இதழில் முடியும்...

சிறகடிக்கும் ஷ்ரத்தா!

மாதவனுடன் ‘மாறா’, விஷாலுடன் ‘சக்ரா’ என ரேஸில் நிற்கும் ஷ்ரத்தா நாத், இப்போது மல்லுவுட்டில் பளபளக்கிறார்.
‘‘கன்னடத்தில் ‘யூ டர்ன்’ படத்துக்கு முன்னாடியே நான் மலையாளத்துல ‘கோஹினூர்’னு ஒரு படம் பண்ணியிருக்கேன். அதன்பிறகு தமிழ், கன்னடம்னு பறந்தேன். தெலுங்கிலும் ஒரு படம் பண்றேன்.

மறுபடியும் ரொம்ப வருஷம் கழிச்சு, மலையாளத்துல ஒரு நல்ல ஆஃபர் வந்துச்சு. மோகன்லால் சார் படம்... ஐஏஎஸ் ஆபீசர் ரோல்... மிஸ் பண்ண மனசில்லாமல் கமிட் பண்ணிட்டேன்...’’ என கண்கள் மின்ன சொல்கிறார் ஷ்ரத்தா.

எனக்கு குழந்தைங்க வேணும்!

‘‘திருமண விஷயத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கு. நிறைய குழந்தைகள் பெத்துக்கணும்னு விரும்புறேன். குழந்தைகளை கொஞ்சவும் ஆசைப்படுறேன்.
ஆனா, கல்யாண விஷயத்தில் அவசரப்பட மாட்டேன். கண்களுக்கும் மனசுக்கும் பிடிச்சவராக அமையும் வரை காத்திருப்பேன்...’’ என மனம் திறந்திருப்பவர் யாரோ ஒரு புது ஹீரோயின் அல்ல.. நம்ம அனுஷ்காதான். அடுத்த ஆண்டில் தனது நாற்பதாவது பர்த் டேவை கொண்டாடப் போகிறார்.

நாய்க்கு பர்த் டே!

‘எனது ரோல் மாடல் என் அப்பாதான்’ என எப்போதும் சொல்லும் ராய்லட்சுமி, இப்போது கண் கலங்குகிறார். சமீபத்தில் அவரது அப்பா இறந்துவிட்டதால், கலங்கி நிற்கிறார். ‘‘உங்கள் இழப்பை ஈடுகட்ட எனக்கு வலிமை தேவை என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, நீங்க மேலிருந்து எனக்கு ஆசீர்வாதமாக அந்த வலிமையை தருவீர்கள் என வேண்டுகிறேன். I miss you dadda... love you the most’ என எமோஷனலாகிறார் ராய்லட்சுமி.

திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்