வலைப்பேச்சு



@மணி ஜி - காசியில் எந்த படித்துறைக்குப் போனாலும் ஒரு பத்து பதினைஞ்சு தெவசம் நடந்துகிட்டே இருக்கும். கலவையா மந்திரம் ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கும். நீங்க காசிக்கு போனா கேக்கலாம். இல்லன்னா அமேசான் பிரைமில் நிசப்தம் பாருங்க...

@Pa Raghavan - இந்த சானிடைசர்களை எல்லாம் வாழ்வில் தொட்டுப் பார்த்ததுகூட இல்லை. இந்த வருடம்தான் இதெல்லாம் அறிமுகமானது.
கையில் உள்ள கிருமிகளை இவை எப்படிக் கொல்கின்றன என்றெல்லாம் தெரியாது. ஒரு நம்பிக்கைதான். பயன்படுத்த ஆரம்பித்த பிறகு மிகவும் பிடித்துவிட்டது. சுத்தம் என்பதைவிட, கைகள் எப்போதும் வாசனையாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அனைவருமே தவறாமல் 99% கிருமிகளைக் கொல்லும் என்று போடுகிறார்கள். அவர்கள் சாய்ஸில் விடும் ஒரு சதவீதம்தான் இந்த விளையாட்டில் உள்ள சுவாரசியம்.இருக்கட்டும். வாசனையாக இருப்பது எனக்குப் பிடிக்கும். சுத்தமாகவும் இருப்பதாக எண்ணிக்கொள்வது நல்லது
தானே? இனி கொரோனா முழுவதுமாக ஒழிந்தாலும் சானிடைசர் பழக்கம் என்னை விடாது என்று தோன்றுகிறது.

@Bogan Sankar - சினிமாவில் பொதுவாகவும் தமிழ் சினிமாவில் மிகப் பொதுவாகவும் சயிண்டிஸ்டுகள் எல்லாம் குறுந்தாடி வைத்துக்கொள்கிறார்கள். அதாவது ஆண் சயிண்டிஸ்டுகள். பெண் சயிண்டிஸ்டுகள் இனி வரும் காலங்களில் தமிழ் சினிமாவில் வரலாம். அவர்கள் என்ன வைத்துக்கொள்வார்கள்?

@mekalapugazh - ஒரு சட்டம் பஞ்சாப் விவசாயி களுக்கு எதிராகவும்... தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இருக்க முடியும் என்பதை இப்பொழுதுதான் அறிய முடிகிறது.

@niranjan2428 - கதை சொல்வது என்பது மிக அற்புதமான ஒரு கலை; ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு!

@Aakashkannan96 - சோறு சிந்தாமல் சாப்பிடுபவர்களை அதிகம் பிடித்துப் போகிறது டேபிள் துடைக்கும் சிறுவனுக்கு...

@pachaiperuma... - உன்னை நன்கு உணர்ந்தவர்கள் உன் செயல்பாடுகள் எதிலும் குற்றம் காண முயல்வதில்லை...

@Saravanakarthikeyan Chinna durai - ‘பொண்ணுங்க கிட்ட பேசறது எப்படின்னு தெரில, ப்ரோ. கொஞ்சம் அட்வைஸ் ப்ளீஸ்...’
‘முதல்ல மூளையைக் கழட்டி வைக்கணும்...’
‘ஓகே, அடுத்து எதைக் கழட்டணும், ப்ரோ?!’

@Karthikeyan Maddy - ஊறுகாய் பாக்கெட், கடலைமிட்டாய், காரபருப்பு பாக்கெட்,  எலந்தஜூஸ் யாவாரத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்தது நபாட்டி.அடேய் இதெல்லாம் கொழந்தைங்க தின்ன கண்டுபுடிச்சது... சைட்டிஷ் ஆக்கி வெச்சிருக்கீங்
களேடா...!

@manipmp - கடினமாக உழைத்தவர்கள் முன்னேறவில்லை... கவனமாக உழைத்தவர்களே முன்னேறியுள்ளனர்.

@Gokul Prasad - இன்பாக்ஸில் மட்டுமல்ல, இன்ஸ்டாகிராமிலும் தமிழ் எழுத்தாளர்களின் செயலூக்கத்தை விஞ்சுவதற்கு ஆட்கள் இல்லை. எல்லா கதாநாயகிகளின் படங்களுக்கும் எனக்கு முன்னரே ஹார்ட்டினை பறக்கவிட்டிருக்கிறார்கள்.

@அ. பாரி - பசியெடுத்ததும் வழக்கம்போல ஸ்விக்கியில் தலப்பாக்கட்டி ப்ரியாணி, சிக்கன் லாலிபாப், கே.எஃப்.சி இத்யாதிகளை வலம் வந்துவிட்டு நேரில் வாங்குவதற்கும் இதற்குமான விலை வித்தியாசங்களை ஒப்பிட்டு, ‘அட போங்கப்பா’ என அரிசியைக் களைந்து உலையில் போட்டார் அந்த நடுத்தர வர்க்கம்.

@Lakshmi Saravanakumar - ‘ப்ரோ, ஒரு எக்ஸ்பரிமெண்ட்டல் ஃபிலிம் ட்ரை பண்ணிட்டு இருக்கேன், ஸ்க்ரிப்ட் பண்ணித் தர்றீங்களா?’
‘புரியுது என்ன சொல்ல வர்றீங்கன்னு... சம்பளம் இப்ப தரமுடியாது, நாம அடுத்த படம் சேந்து பண்ணலாம்... அதான?!’

@Riyas Qurana - நிலம் மக்கள் மூலமாக கனவு காண்கிறது. நிலம் என்ன செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறதோ அதை மக்கள் மிகச் சிறப்பாக செய்கிறார்கள்.

@Karunakaran Karthikeyan - நியு நார்மல் எனப்படுவது சட்டைக்கு மேட்ச்சாக சாக்சும் பேன்ட் கலரில் மாஸ்க்கும் அணிவது.

@Lakshmanasamy Odiyen Rangasamy - காலையில் ஒரு பயணம். வழியில் ஒரு ஹோட்டல்... பேரு ‘விருந்தாவனம்’. அது ‘பிருந்தாவன’மாத்தான் இருக்கும்  என்று வண்டியைத் திருப்பி வந்து பார்த்தேன். பிருந்தாவனம் இல்லை. ‘விருந்தாவனமே'தான். விருந்தை மனதில் வைத்து பெயர் சூட்டியிருக்கிறார்.கொஞ்சதூரம் கடந்தபின் ஒரு கறிக்கடை கண்ணில்பட்டது. பேரு... ‘ஸ்ரீ மயில் சிக்கன்’. நம்மாளுக ரசனையே தனி ரகம்!

@jay_archu - பொய்க்குத்தான் விளக்கங்கள் தேவை... ‘நீ நம்பு நம்பாமல் போ எனக்கென்ன...’ என்னும் உண்மையின் அலட்சிய போதை அலாதியானது...

@Aravindan Kannaiyan - கம்பனை மட்டும் படித்து ஷெல்லியை படித்திராவிட்டால் பாரதி சுப்ரமணியனாகவே இருந்திருப்பான். கீதையை மட்டும் படித்து டால்ஸ்டாயை படித்திராவிட்டால் மகாத்மா காந்தி மோகன்தாஸாகவே இருந்திருப்பார்.

@pencil_tweets - ஒரு பொண்ணை அவளோட அனுமதி இல்லாம தொடக்கூடாதுன்னு உத்திரப் பிரதேச பீடாவாயனுங்களுக்கு பாடம் எடுக்கணும்ன்னா அவனுங்களுக்கு கட்ட வேண்டியது ராமர் கோயில் அல்ல... ‘இராவணன் கோயில்!’

@erode_kathir - ‘உங்களுக்கான நாள் இதுவல்ல!’ என்று ஒரு தினம் அவ்வப்போது அமையத்தான் செய்யும். அப்படியான தினங்களில் ‘அது நமக்கானது அல்ல!’ என அவ்வளவு எளிதில் புரியாமல் இருப்பதுதான் அந்த தினத்தின் பெரும் சாபமாக இருக்கும்!

@vijaypnpa_ips - Saying ‘i don’t know’ is part of normal life. No shame in that. கல்லாதது கடலளவு.