சினிமாவில் கபில்தேவ்!படத்தைப் பார்த்ததும் சட்டென்று கபில்தேவ்தானே என்கிறீர்கள் அல்லவா..?

இந்த ஒரு வாக்கியம்தான் ‘83’ இந்திப் படத்துக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது!யெஸ்.
இங்குள்ள புகைப்படத்தில் இருப்பவர் கபில்தேவ் அல்ல! ரன்வீர் சிங்! 1983ம் ஆண்டு இந்தியாவுக்கும் ஜிம்பாப்வேவுக்கும் இடையிலான உலகக் கோப்பை செமி ஃபைனலில் கபில்தேவ் 175 ரன்கள் எடுத்தது இன்றுவரை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேச்சாக இருக்கிறது.

அப்போது கபில்தேவின் இந்த போஸ் அனைத்து நாளிதழ்களின் முதல் பக்கத்தையும் அலங்கரித்தது.அச்சு அசலாக அதே போஸை இன்று திரையில் கொண்டு வந்திருக்கிறார் ரன்வீர் சிங். அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் இப்படத்தை கபீர் கான் இயக்கியிருக்கிறார்.நான்கு பேர் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். அதில் ஒருவர் ரன்வீர் சிங்கின் மனைவியான தீபிகா படுகோனே!

காம்ஸ் பாப்பா