வயிற்றெரிச்சலை கிளப்பும் ஜோடிப் புறாக்கள்!ஆமாம். படத்தில் இருப்பவர் பிரியங்கா சோப்ராதான்.ஆனால், நீச்சல் குளத்தில் அவர் இருப்பதல்ல மேட்டர். இந்த போட்டோஸ்தான் செய்தியே! இதுவேதான் ஈரேழு உலகில் வசிப்பவர்களின் நவதுவாரங்களில் இருந்தும் புகை வரக் காரணம்!
தன்னை விட பெருமளவு வயது குறைந்த நிக் ஜோனஸை காதலித்து பிரியங்கா சோப்ரா திருமணம் செய்துகொண்டபோதே பொறாமை காரணமாக பாலிவுட் முழுக்க அனல் காற்று வீசியது! ‘எத்தனை நாட்கள் இந்த உறவு தாங்குதுனு பார்க்கலாம்...’ என சவால்விட்டவர்கள் அநேகம்.

ஆனால், அவர்களது எதிர்பார்ப்புக்கு மாறாகத்தான் சகலமும் அரங்கேறி வருகிறது!யெஸ். உலகின் மிகச்சிறந்த காதலர்களின் வரிசையில் இப்போது பிரியங்காவும் நிக் ஜோனஸும் இணைந்திருக்கிறார்கள். பிரபஞ்சம் முழுக்க இவர்களது காதல் / இன்ப உலா குறித்துதான் பேச்சு!

‘நல்லா வயிறு எரியுங்க...’ என தன் பங்குக்கு அவ்வப்போது ஜோடியாக தாங்கள் இருக்கும் படங்களை இணையதளங்களில் வெளியிட்டு தன் எதிரிகளின் வயிற்றெரிச்சலை சின்சியராக பிரியங்கா கொட்டிக் கொள்கிறார்.அதில் லேட்டஸ்ட் இந்தப் படங்கள்!
இப்பொழுது இந்த காதல் ஜோடி இத்தாலியில் ‘சும்மா ஜாலியாக’ ஊர் சுற்றி வருகிறார்கள்.

அப்பொழுது தன் காதல் மனைவியை இந்தப் போஸில் புகைப்படம் எடுத்திருக்கிறார் நிக் ஜோனஸ்.தன் கணவர் எடுத்த இப்படங்களை கருமமே கண்ணாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.போதாதா..? வயிற்றெரிச்சல் பார்ட்டிகள் நெருப்பின் மீது நிற்பது போல் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்! நல்லா இருங்க!        

காம்ஸ் பாப்பா