சிரிங்க பாஸ்!



“என்னது? இவர் உன் பென் ஃப்ரெண்டா? இப்பவும் பென் ஃப்ரெண்ட்ஸ் உண்டா என்ன?’’
“எப்பவுமே இவன்கிட்டதான் பேனா ஓசியடிப்பேன்!”

“இந்த கேமரால போட்டோ எடுத்தா மட்டும் ஏன் எப்பவும் ஷேக் ஆகுது?”
“துபாய்ல வாங்கினதாச்சே!”

“வீட்டு வேலை செய்யவர்றேன்னு சொல்றியே... முன் அனுபவம் இருக்காம்மா?”
“செய்தி ஒலிபரப்புத் துறைல கூட்டிப் பெருக்கியிருக்கேங்க!”

‘‘இந்த வயசிலும் உங்க மாமியார் குளத்துல தூர் வாற இறங்கிட்டாங்களே... யார்
அவங்களுக்கு
இன்ஸ்பிரேஷன்..?’’
‘‘நான்தான்!’’
‘‘அட... எப்படி?’’
‘‘தள்ளிவிட்டேன்!’’

“அவர் அப்பாவினு எப்படி சொல்ற..?’’
“கிரிக்கெட் மேட்ச் ‘டை’ ஆயிடுச்சுன்னு சொன்னேன்... அதை யாரு கட்டிப்பாங்கன்னு கேட்கறாரு!”

“எதுக்கு ஆதார் அட்டை எடுத்துக்கிட்டுப் போற?”
“தண்ணி லாரி வந்திருக்கு. இதைக் காட்டினாதான் ஒரு குடம் தண்ணி கொடுப்பாங்க!”

சினிமா டைரக்டர் : “என்னங்க
ஸ்க்ரிப்ட் இவ்ளோ சூடா இருக்கு?”
அஸிஸ்டென்ட்: ‘‘கதையை
சுட்டுட்டேன் சார்!’’

நிருபர்: ‘‘பஞ்ச பாண்டவர்களில் உங்களுக்கு மிகவும் பிடிச்சது பீமனா..?’’
சினிமா தயாரிப்பாளர்: ‘‘ஆமா... அவர்கிட்டதானே எப்பவும் ‘கதை’ இருக்கும்?’’

‘‘தல மாடில இருந்து இறங்கி வந்துட்டாரு...’’
‘‘அப்ப ‘தலகீழா’ இருக்காருன்னு சொல்லுங்க!’’

டைரக்டர்: ‘‘ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஏன் ஒட்டகத்தை இழுத்து வந்திருக்க?’’
அஸிஸ்டென்ட்: ‘‘நடிகைதான் சார் ஸ்பெஷல் கேரவான் கேட்டாங்க!’’  

வேமாஜி