Coffee table



கிளாமர் குயின்

மீண்டும் கிளாமரில் இறங்கி அடிக்க ஆரம்பித்திருக்கிறார் இடுப்பழகி இலியானா. அவரது இன்ஸ்டா பக்கத்தில் குளுகுளு போஸ்களில் புன்னகைக்கிறார் இலி. சமீபத்தில்  ரிலாக்ஸ் ட்ரிப்பாக ஃபிஜித்தீவுக்குப் போய் வந்திருக்கிறார். ஸ்கை டைவிங், ஸர்ஃபிங், படகுப் பயணம் என, தான் ரசித்துச் செய்த சாகசங்கள்  அனைத்தையும் இன்ஸ்டாவில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார். அப்புறமென்ன, லைக்குகளும் ஹார்ட்டின்களும் பறக்கின்றன.

செல்லங்கள்

வெளிநாடுகளில் மனிதர்களைவிட செல்லப் பிராணிகளின் மீது மக்கள் அதிகமாக பிரியம் காட்டத் தொடங்கிவிட்டனர். இதற்கு உதாரணமான இந்த வீடியோவில்  நாய்க்குட்டிகள், தங்களின் எஜமானர்களை ஆசை ஆசையாகக் கொஞ்சி மகிழ்வது கண்கொள்ளாக் காட்சியாக மிளிர்கிறது. இதை ஃபேஸ்புக்கின் ‘Try not to Laugh’ பக்கத்தில் ‘Welcome to Home Pets’ என்ற தலைப்பில் பதிவிட, 17 லட்சம் பேர் பார்த்து  வியந்துள்ளனர்.

விர்ச்சுவல் ஆஃபர்

இந்தியாவில் உள்ள கேம் பிரியர்களுக்காக அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது ‘சோனி’ நிறுவனம். கடந்த வருடத்தில் சந்தைக்கு வந்த சில நாட்களிலேயே ‘சோனி’யின் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் 20 லட்சம் யூனிட்டுகள் விற்றுத் தீர்ந்தன. அப்போது அதன் விலை ரூ.41,990. இந்தியாவில் விர்ச்சுவல் ரியாலிட்டி விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு ரூ.30,990க்கு இந்த ஹெட்செட்டை ஆன்லைனில் விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறது ‘சோனி’. இந்த ஆஃபர் நிரந்தரம் என்பதுதான் ஹைலைட்.

மேஜிக்

ஓர் அதிகாலையில் சான்டியாகோ நகருக்கு அருகிலிருக்கும் மலையிலிருந்து ஒரு எலுமிச்சைப் பழம், டென்னிஸ் பந்தைப் போல அடிவாரத்துக்கு உருண்டு வந்து  அப்படியே சாலையில் ஓடியிருக்கிறது. இந்த மேஜிக் மூவ்மென்ட்ஸ் புகைப்படக் கலைஞர் மைக்கின் கண்ணில் பட, உடனே அதை வீடியோவாக்கி இணையத்தில் பகிர்ந்துவிட்டார். ‘இதெல்லாமா வைரலாகும்..?’ என்கிற அளவுக்கு 30 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்திருக்கின்றனர்.

உலகக் கோப்பை கால்பந்தாட்டமும் குடும்ப வன்முறையும்!

‘‘உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கும், குடும்ப வன்முறைக்கும் இடையே நெருங்கிய தொடர்பிருக்கிறது...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது ஓர் ஆய்வு. இது  இந்தியாவில் அல்ல; இங்கிலாந்தில் என்பது சற்று ஆறுதல்.‘‘இங்கிலாந்து அணி தோல்வியடையும் நாட்களில் இந்த வன்முறை 38% அதிகமாக இருக்கும்...’’ என்கிறது அந்த ஆய்வு. ‘‘கால்பந்துப் போட்டி நடைபெறும் நாட்களில் ‘எந்த சேனலைப் பார்க்கலாம்’ என்று கணவன் - மனைவிக்கு இடையே ஆரம்பிக்கும் வாக்குவாதம் பெரும்பாலும் வன்முறையில்தான் முடிகிறது...’’ என்கின்றனர் இங்கிலாந்துப் பெண்கள். இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடக்கும்போது  இதுமாதிரி ஆய்வு செய்யலாமே பாஸ்.   
                                                                  l

- குங்குமம் டீம்