உடைந்த சாலைகளுக்கு பலி!



பராமரிக்கப்படாத உடைந்த சாலைகளால் 2017ம் ஆண்டு மட்டும் இந்தியா முழுவதும் 3 ஆயிரத்து 597 பேர் பலியாகியுள்ளனர். தோராயமாக தினசரி பத்து பேர் சாலைகளில் மரணித்துள்ளனர். கடந்தாண்டு தீவிரவாதத் தாக்குதல்களால் 803 பேர் பலியாகியுள்ள நிலையில் மோசமான சாலைகள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை பலிவாங்கியது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சாலைப்பணிகளில் லஞ்சம், மூலப்பொருட்களின் தரமின்மை, சாலை விதிகளைக் கடைப்பிடிக்காதது ஆகியவை இவற்றுக்கு முக்கிய காரணம்.
சாலைவிபத்துகளில் உத்தரப்பிரதேசம் (987) முதலிடத்திலும் அடுத்தடுத்த இடங்களில் அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களும் இடம்பிடித்துள்ளன. ‘‘சாலைகளை சரியானபடி பராமரிக்காத அதிகாரிகளின்மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக, இறந்தவர்களின் உயிருக்கு விலையாக ரூ.2 லட்சம் முதல் 5 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது. இது எப்படி?’’ என கேள்வி எழுப்புகிறார் பாதுகாப்பு ஆலோசகர் ரோஹித் பலுஜா.  

- தொகுப்பு: ரோனி