காவிரியின் கதை



குறிப்பிட்ட தலைப்பில் பக்கம் பக்கமாக எழுதப்படும் கட்டுரைகளை விட அதே தலைப்பில் எடுக்கப்படும் ஆவணப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.  காட்சி ஊடகத்தின் தன்மை அது.இதைப் புரிந்து, மூத்த பத்திரிகையாளர்களான ரூபன் ஜேவும், வீ.கே.சுந்தரும் இணைந்து ‘கரைபுரண்டோடிய காவிரியின் அவலநிலை’யைப் படம் பிடித்து வருகிறார்கள்.சங்க காலம் முதல் இக்காலம் வரை காவிரியின் நிலையைப் பதிவு செய்வதே இந்த ஆவணப்படத்தின் நோக்கம். புகாரில் இருந்து கல்லணை வரை முதல் கட்டமாக ஷூட் செய்து முடித்திருக்கிறார்கள். இப்போது ‘ஃபேஸ் 2’ (ஒகனேக்கல் வரை) படப்பிடிப்பு மும்முரமாக  நடந்து வருகிறது.

ஒக்கி புயலும் மூன்று ஆவணப் படங்களும்


அரசின் மெத்தனமும் ஒக்கி புயலும் இணைந்து குமரி மீனவர்களின் வாழ்க்கையைச் சூறையாடிய நிகழ்வை ‘வினவு’ தோழர்கள் ‘கண்ணீர்க் கடல்’ என்ற தலைப்பில் ஆவணப் படமாக எடுத்துஅதை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்கள்.இந்நிலையில் பத்திரிகையாளர் அருள் எழிலன் ‘பெருங்கடல் வேட்டத்து’ என்ற பெயரிலும், வழக்கறிஞர் திவ்யபாரதி ‘ஒருத்தரும் வரல’ என்ற பெயரிலும் தங்கள் பங்குக்கு தனித்தனியே அதே பிரச்னையை இப்போது ஆவணப் படங்களாக எடுத்திருக்கிறார்கள். எத்தனை முறை எடுக்கப்பட்டாலும் மீன்வர்களின் வேதனை சொல்லி மாளாது.

- நோட்டீஸ் போர்டு