மேரேஜ் சர்டிஃபிகேட் வேண்டாம்!அண்மையில் லக்னோவில் காதலித்து மணம் புரிந்த இந்து - முஸ்லீம் தம்பதியர் பாஸ்போர்ட் வாங்கச் சென்றபோது, அலுவலக அதிகாரியால்  அவமானப்படுத்தப்பட்டது உலகளவில் இந்தியாவுக்கு தலைகுனிவானது.

இப்பிரச்னை தந்த அனுபவத்தால் இனி பாஸ்போர்ட் வாங்க திருமணச்  சான்றிதழைக் காட்டத் தேவையில்லை என சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான வெளியுறவு அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. விவாகரத்து பெற்ற பெண்கள் தங்களது முன்னாள் கணவர் பெயரையும், அவரின் குழந்தைகளைப் பற்றிய தகவல்களையும் அளிக்க வேண்டியதில்லை  என புதிய விதிகளை இயற்றியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்தினரோடு வெளியுறவுத்துறை மேற்கொண்ட  கலந்துரையாடல் இதிலுள்ள பிரச்னைகளைத் தீர்க்க உதவியுள்ளது.

ரோனி