WAR GAME மொபைல்ஃபுரூட் நிஞ்சா, ஆங்ரி பேர்ட்ஸ், கேண்டி க்ரஷ், போக்கிமன்... என ஆரம்பித்து கிளாஷ் ஆஃப் கிளான்ஸ், ஃப்ரண்ட் லைன் கமாண்டோ: டி-டே, ஆர்மா  டாக்டிக்ஸ்... என வார் கேம் வரை நம்மை ஆக்கிரமித்த மொபைல் விளையாட்டு உலகம் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. யெஸ். ‘PUBG:  Payer Unknown’s Battle Grounds’ என்ற புத்தம் புது விளையாட்டு அறிமுகமாகி இருக்கிறது.  கூகுள் ப்ளே ஸ்டோரில் PUBG என டைப்  செய்தால் இதற்கான app கிடைக்கும்.

முகநூல், ஜிமெயில், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் நுழைய என்ன செய்வோமோ அப்படி நமக்கென ஒரு கணக்கை தொடங்கி லாகின்  செய்ய வேண்டும். ஆச்சா? இப்போது ஒரு போர் வீரரின் பெயரை நமக்கு சூட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஸ்டார்ட் பட்டனை அழுத்தினால்  நிராயுதபாணி யாக நிற்போம்! உடைகள் இருக்காது! ஆண்களுக்கு டவுசர்; பெண்களுக்கு நீச்சல் உடை மட்டுமே கொடுக்கப்படும்!

விளையாட விளையாடத்தான் உடை முதல் புல்லட் புரூஃப் ஜாக்கெட், துப்பாக்கி, பிஸ்டல், ஏகே 47... வரை சகலத்தையும் பெற முடியும். அதாவது  ஸ்டார்ட் கொடுத்தவுடன் போர் விமானத்தில் குழுவாக ஏறி இன்னொரு இடத்தில் பாராசூட் மூலம் தரையில் இறங்க வேண்டும். பின்னர் அங்கிருக்கும்  பில்டிங்கில் சப்ளை கிடைக்கிறதா எனத் தேடி ஓட வேண்டும். உடைகள், துப்பாக்கி, பிஸ்டல், பிளாஸ்திரி, எனர்ஜி ட்ரிங்க், புல்லட்புரூஃப், ஹெல்மெட்,  பெயின் கில்லர்... அதிர்ஷ்டம் இருந்தால் பென்ஸ் கார் கூட கிடைக்கும்.

குழுவாக வேண்டாம் என்று நினைத்தால் தனியாக நாம் மட்டும் ஏதேனும் ஒரு பகுதியில் இறங்கி உயிர் தப்பித்தும் விளையாடலாம். வாய்ஸ் காலில்  பேசி திட்டமிட்டுக் கொண்டே விளையாட வேண்டும் என்பதே இதன் ஜாலி ஆப்ஷன். இதில் ஒரு கேங்காக களமிறங்கி ஆடினால் ஜாலியோ  ஜாலிதான். ஒரேயொரு அலர்ட். முடிந்தவரை பெர்சனல் டீடெயில்ஸை பகிர வேண்டாம். கேமின் ரூல்ஸிலும் இது கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில்,  இந்த விளையாட்டில் உலகின் பல மூலைகளில் இருந்தும் பலரால் நம்முடன் சுலபமாகப் பேச முடியும்.

ஒவ்வொரு லெவலைக் கடக்கும் போதும் இன்வென்டரி மெனுவில் உடைகள், காசுகள், எனர்ஜி; லெவல் முடிக்க XPக்கள் என அனைத்தும் கிடைக்கும்.  இறுதி வரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விளையாடி னால் மெடல்; அதிக எதிரிகளைச் சுட்டு வீழ்த்தி முன்னேறி யிருந்தால் அதற்கும்  மெடல் உண்டு. புளூஹோல் என்னும் தென்கொரிய வீடியோ கேம் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த விளையாட்டு சென்ற டிசம்பர் 2, 2017ல்  மைக்ரோசாஃப்ட் விண்டோஸிலும், டிசம்பர் 12ல் Xbox Oneலும், பிப்ரவரி 9, 2018ல் ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களிலும் வெளியானது.

இதுவரை ஐம்பது மில்லியன் ரசிகர்கள் தரவிறக்கம் செய்து விளையாடி வருகிறார்கள். போதாதா? இந்த வருடத்தின் சிறந்த மொபைல் கேம் உட்பட  பல விருதுப் பட்டியல்களில் முதலிடம் PUBG கேமுக்குத்தான். உங்கள் மொபைலில் தினமும் 1.5gb டேட்டா இருக்குமா, மொபைலில் 3gbக்கு  குறையாமல் இடம் இருக்கிறதா, சார்ஜ் நிற்குமா? இவை அனைத்துக்கும் ஆம் என பதில் அளித்தால்... நீங்களும் தெறிக்கவிடலாம்! போர்! ஆமாம்  போர்!!  

ஷாலினி நியூட்டன்