ஜூனியரைக் காப்பாற்றிய சீனியர்!



என்கவுண்டரில் சமூக விரோதிகளைக் கொல்லத்தயாராகும் போலீஸ் உயிரைத் தியாகம் செய்யவும் ரெடியாக இருக்கவேண்டும் என்பதை தில்லி சீனியர் போலீஸ் தன் செயலின் மூலம் உணர்த்தியிருக்கிறார்.

தில்லியில் நடந்த என்கவுண்டரில் சப் இன்ஸ்பெக்டர் பிஜேந்தர்சிங் தேஸ்வால் தன் உடலைக் கவசமாக்கி, சீறிய தோட்டாக்களைத் தடுத்து தன்  ஜூனியர் கான்ஸ்டபிள் குர்தீப் சிங்கின் உயிரைக் காத்துள்ளார். 25 வயதான குர்தீப்சிங்குக்கு குழந்தை பிறந்து மூன்று மாதமாகியுள்ளது. ராஜேஷ் பார்தி  உள்ளிட்ட ரவுடிக் குழுவினர் நான்கு பேர் ஸ்பாட்டில் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலில் சிறப்பு பிரிவைச் சேர்ந்த எட்டுபேர் காயமுற்றனர். போலீசின் சிறப்பு பிரிவில் பதினைந்து ஆண்டுகளாக பணியாற்றிவரும் பிஜேந்தர்  சிங் தேஸ்வால் இதுவரை இருமுறை குண்டடி பட்டுள்ளார். நட்புக்காக தன் உயிரையும் கொடுக்கத் துணிந்த பிஜேந்தரின் வீரச்செயலை போலீஸ்  வட்டாரம் புகழ்ந்து பேசிவருகிறது.

ரோனி