கல்வி கற்பிக்க நீண்ட பயணம்!



குர்கானில் பணிபுரியும் ஆசிஷ் தப்ரல், உத்தரகாண்டுக்கு வார இறுதியில் பயணித்து தன் சொந்த கிராமத்து சிறுவர்களுக்கு கல்வி அறிவு ஊட்டி  வருகிறார்.

‘‘உத்தரகாண்டிலுள்ள பாரி கார்வால் மாவட்டத்திலுள்ள திம்லி என்ற கிராமத்தில் எனது தாத்தா 1882ம் ஆண்டு முதல் சமஸ்கிருதப் பள்ளி நடத்தி  வந்தார். அந்தத் தொடர்ச்சி விட்டுப்போகக் கூடாது என்பதற்காகவே இந்தக் கல்வி முயற்சி...’’ என புன்னகைக்கிறார் ஆசிஷ். 1969ம் ஆண்டு அரசு  கையகப்படுத்திய இப்பாடசாலை மாணவர்களின்றி இப்போது மூடப்பட்டுவிட்டது.

சென்னை, மும்பை, சவுதி என வேலை பார்த்து சேர்த்த பணத்தில் 2014ம் ஆண்டு ஒரு தொடக்கப் பள்ளியையும், ஆறு இலவச கணினி  மையங்களையும் மாணவர்களுக்கென தொடங்கியுள்ளார் ஆசிஷ். 23 கிராமங்களைச் சேர்ந்த 36 மாணவர்களின் கல்விக்காக வாரந்தோறும் இந்த நீண்ட  பயணத்தை மேற்கொள்கிறார் ஆசிஷ்.

ரோனி