மக்களுக்கு மது! பசுவுக்கு வாழ்க்கை!



ராஜஸ்தானில் எவ்வளவு மது குடிக்கிறீர்களோ அந்தளவுக்கு பசுக்கள் நலமாக வாழும். அங்குள்ள மதுக்கடைகளில் குடிமகன்கள் வாங்கும் மதுவுக்கு  போடும் வரியில் பசு நல வரியும் அடக்கம்!

இப்போது மதுவகைகளில் வசூலிக்கும் 10 சதவிகித பசுநேச வரியில் இன்னும் 10% அதிகரிக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது. கடந்த 2016 - 17ம் ஆண்டில்  மட்டும் பசு சேவைக்கான வரியாக வசூலிக்கப்பட்ட தொகை 151.60 கோடி. தவிர இந்தியாவில், ஏன் உலகிலேயே பசுவுக்கென தனி அமைச்சகம்,  அதற்கென அமைச்சர் நியமித்து கின்னஸ் புக்கில் பிரசுரிக்கப்படாத சாதனையைச் செய்துள்ள ஒரே மாநிலம் ராஜஸ்தான்தான்!  

ரோனி