கவிதை வனம்
 
 
வானாகி...மண்ணாகி!
  என் வானத்தில் தேம்பித் தேம்பி  அழுகின்றன நீ விரல் நீட்டி எண்ணாத நட்சத்திரங்கள்.
   * வீச்சரிவாளைக்  கொண்டிருக்கின்றன உன் கண்கள் உள்ளமோ  மெத்மெத்தென  நினைவூட்டும் பரம்படித்த வயலை. * வந்தாய் தந்தாய் விரிந்தன சிறகுகள் சுருங்கின எல்லைகள் அவ்வளவுதான்  வேறென்ன நீயின்றி அமையாது உலகு.
  - பொன்.இரவீந்திரன்
   பாரம்
  லேசான சுமையை மிகுந்த பாரமுடன்  தூக்கிச்செல்கிறான் பஞ்சு மிட்டாய் விற்பவன் குழந்தைகளைக்  காணவில்லை.
 - பா.ரமேஷ் 
  
 |