ஜனதா இந்தியா!



இந்திய அரசு அலுவலகப் பணிகளில் நடைபெறும் ஊழல் மற்றும் தாமதத்தைத் தடுக்க அனைத்தையும் இணையம் வழியே இணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் மக்களும் கைகோர்த்தால்தான் பூரண வெற்றி கிடைக்கும் என்கிறார் கார்த்திகேய சுந்தரம். அரியானாவைச் சேர்ந்த இவர், தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்!

தகவல்தொடர்பு படிப்பில் கேம்ப்ரிட்ஜ் தேர்வில் நெ.1 மாணவராக தேறிய கார்த்திகேயா, மக்களுக்கு தகவல் தொடர்பின் அவசியத்தை புரியவைக்க நினைத்தார். குர்கானிலுள்ள ‘உத்சவ்’ என்ஜிஓவுடன் இணைந்து டிஜிட்டல் லேர்னிங் என்ற நூலை மக்களுக்கான மொழியில் எழுதினார். 60 பக்கங்களில் படங்கள், இணைய லிங்க்குகள் என அனைத்தும் இதில் உண்டு. ரைசிங் தலைவன்!

- ரோனி