உலகின் துணிச்சலான மாடல்!



-த.சக்திவேல்

‘‘நம்பவே முடியல. நானா இதை செஞ்சது? ஒவ்வொரு முறையும் இந்த வீடியோ க்ளிப்பை பார்க்கிறப்ப உள்ளங்கை அப்படியே சில்லுனு வேர்க்குது...’’ பதற்றம் கலந்த மகிழ்ச்சியில் சொல்கிறார் ரஷ்யாவின் மாடல் விக்டோரியா ஒடின்ட்ஷோவா. ரஷ்ய இளசுகளின் தூக்கத்தைக் கெடுத்து காதல் போதையில் அலையவிடும் கனவுக் கன்னி. ‘ப்ளேபாய்’ முதல் உலகப் புகழ்பெற்ற பல பத்திரிகைகளின் முன் அட்டையை 23 வயதுக்குள் அலங்கரித்த அழகி. சமூக வலைத்தளங்களில் 30 லட்சத்துக்கும் மேல் ஃபாளோயர்ஸ்.

இத்தனை ‘பெருமை’களையும் தூக்கி சாப்பிட்டு விட்டது சமீபத்திய அவரது போட்டோ ஷூட். உலகிலேயே உயரமான கட்டடங்களில் ஒன்று, துபாயிலுள்ள கேயான் டவர். அதில் ஆயிரம் அடி உயரத்திலுள்ள ஒரு சுவரின் விளிம்பில் உதவியாளர் நிற்க - இவரது கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு அந்தரத்தில் தொங்கியபடியே விக்டோரியா ஒடின்ட்ஷோவா போஸ் கொடுத்திருக்கிறார். பாதுகாப்பு கருவிகள் எதையும் பொருத்திக் கொள்ளவில்லை. கரணம் தப்பினால் மரணம்! ‘லைக்ஸ் ஷேருக்காக இப்படியெல்லாமா ரிஸ்க் எடுக்கறது..?’ என ஒருசிலர் விக்டோரியா ஒடின்ட்ஷோவாவை கடிந்து கொள்கிறார்கள்!