jokes



‘‘ஜெயிலுக்குள்ள போகாம ஏன் தலைவர் வாசல்லயே நின்னுட்டார்?’’
‘‘ரிப்பன் கட்டுங்க. அதை வெட்டிட்டு உள்ள போறேன்னு சொல்றார்!’’
- எஸ்.ராமன், சென்னை - 17.

‘‘வாட்ச்மேன் வேலை கேட்கறியே... உனக்கு என்ன தெரியும்?’’
‘‘மணி பார்க்கத் தெரியும் சார்!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை - 5.

‘‘கவர்னரை சந்திக்க ஏன் தலைவர் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்காரு?’’
‘‘ரிசார்ட்ல வசதி குறைவா இருக்குனு புகார் கொடுக்கணுமாம்!’’
- அஜித், சென்னை - 126.