காதல்



-த.சக்திவேல்

காதல் எந்த வயதில் அவசியம்? அழகும், துடிப்பும் நிறைந்த இளம் பருவத்திலா அல்லது உடலும் மனமும் நலிவடைந்த முதிர்ந்த வயதிலா? அமெரிக்காவில் டிரெண்டும், அவரின்
மனைவி டோலரஸும் நகரத்தைத் தாண்டி அமைதியான ஓர் இடத்தில் மிகுந்த காதலுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வந்தனர். இருவரும் எண்பது வயதைக் கடந்தவர்கள். இன்னும் சில மாதங்களில் தங்களின் 64வது திருமண நாளைக் கொண்டாடும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்த நேரத்தில் டரெண்டின் இரண்டு கிட்னியும் செயலிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கணவரின் நிலை டோலரஸை பாதித்தது. இவரது உடல்நிலையும் மோசமானது. இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் ஒரே அறையில் அனுமதிக்கப்பட்டனர். வயது முதிர்வும், உடல் உபாதைகளும் டோலரஸை வலியின் உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது. டிரெண்டால் இதை தாங்க முடியவில்லை. மனதுக்குள் கதறி அழுகிறார். ஒருநாள் டோலரஸின் உயிர் பிரிகிறது. சில நிமிடங்களில் டிரெண்டும் இறக்கிறார்... அதுவும் மனைவியின் கரத்தைக் கோர்த்தபடி. இதுதான் காதல் என்பதா..?