நட்பு மொழி
ஆய்வைச் சிறப்பாக முடித்துவிட்டு வா என்று வானூர்தி நிலையத்தில் வழியனுப்புகிறான் கணவன் வரவேற்கக் காத்திருக்கிறான் அங்கே நண்பன் பறக்கிறேன் நான்.
பொங்கலுக்கு வருவது அண்ணன் தம்பிச் சீர் வரிசை பிறந்த நாளுக்கு வருவது நட்பின் சீர் வரிசை
மார்பில் கிடந்த கணவனின் கையை எடுக்கச் சொல்லிவிட்டு நண்பனுக்குக் கைபேசியில் இரவு வணக்கம் சொன்னேன்.
கைகூப்பும் வணக்கத்தில் காமம் பதுக்கலாம் கைகுலுக்கலில் முடியாது.
பிரச்னையை நண்பர்களிடம் ஒப்படையுங்கள் குடும்பநல நீதிமன்றத்திற்குத் தேவையிருக்காது.
அறிவுமதி ஓவியம்: ப்ரத்யூஷ்
|