மனசுல! ஒசந்துட்டீங்க



எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கதை, கட்டுரைகளின் பக்கங்களை மட்டுமே படித்துவந்த எமக்கு, அவரின் அகம் சார்ந்த பக்கங்களையும் அறிய நேர்ந்த டவுண்லோட் மனசு பகுதி மிக சுவாரஸ்யம்!
- கோ.பகவான், பொம்மராஜுப்பேட்டை.

ஊருக்கென ஒரு குளிர்பதனப் பெட்டியை ஒதுக்கி, அதற்கு ‘நன்மை மரம்’ என்றும் பெயரிட்டிருக்கும் கேரளப் பெண் மினுவுக்கு ஒரு சபாஷ்! எல்லா ஊர்களிலும் இப்படிப்பட்ட நன்மை மரங்கள் தேவைப்படுகின்றன.
- எம்.ரெஜினா பிரகாஷ், தூத்துக்குடி.



நிறுவனப்படுத்தாமல் நகரத்தில் ஊர்ச்சந்தையாகவே தொடர நினைக்கும் ‘செம்மை சமூகம்’ அமைப்பின் செயல்பாடுகள் போற்றத்தக்கவை!
- செ.மோகன்ராஜ், சென்னை-78.

தன்னம்பிக்கை இருக்க வேண்டியதுதான்... அதற்காக ஷங்கர் படங்களைப் பார்த்துவிட்டு, அதே மாதிரி நானும் முதல்வராவேன் என அடம்
பிடிக்கும் சக்திவேல், செம காமெடி பீஸ்!
- வி.முருகன், மதுரை.

பக்கத்து வீட்டுப் பையனின் லுக்கோடு தனக்குத் தெரியாத விஷயங்களை ஒப்புக்கொண்டு அதை கற்றுக்கொள்கிற நேர்மை இருக்கிறதே... உதயநிதி சார்... ஒசந்துட்டீங்க எங்க மனசுல!
- பி.வி. சிவசண்முகம், வேலூர்.

பணியில் பிறழும், கணக்கில் தவறும் நீதிபதிகளின் காலகட்டத்தில் நீதிபதி ஹரிபரந்தாமன் குறித்த பதிவு, நேர்மையாகப் பணியாற்றுபவர்களுக்கு பெரும் உத்வேகம்!
- பி.பர்வதம்மாள், புதுச்சேரி.

பாடங்களில் பேதங்கள், பிற்போக்குத்தனங்கள் எனப் புகுத்தி வரும் மத்திய அரசு, அடுத்து கை வைத்திருப்பது அகில இந்திய பொதுத் தேர்வில் என்பது ஆச்சரியமில்லை... ஆபத்து!
- ஜே.கருப்பையன், திருவள்ளூர்.

ஹப்பா... ஹீரோயின் ஸ்டில்லே இல்லாமல் ஒரு சினிமா நேர்காணல்! அரிதான இந்த நிகழ்வுக்காக சமுத்திரக்கனிக்கும் ‘குங்கும’த்துக்கும் நன்றிகள்!
- கவிதா, மதுரை.

ஞாபகமறதி வரமோ அல்லது சாபமோ... ஆனால் ஃபேன்டசி கதைகளில் செல்வு எழுதும் சுவாரஸ்ய, சுயேச்சை எழுத்து நடைக்கு நிச்சயம் தரலாம் ஒரு பூங்கொத்து!
- ப.மணிவாசகம், கோவை.

சுபா எழுதும் ‘ரகசிய விதிகள்’ தொடரில் வாரா வாரம் திடுக், நறுக் திருப்பங்கள் அனல் பறக்கின்றன. அடுத்த வாரம் என்னவாகும் என எதிர்பார்க்கவும் வைத்துவிடுகின்றன!
- கே.ஆர்.கோகுலகிருஷ்ணன், சென்னை-4.

டீக்கடையில் இலக்கியம் வளர்க்கும் அப்துல் ஷுக்கூர் அசத்தி விட்டார். இப்படிப்பட்ட புதிய மனிதர்களை அழுத்தமாய் பதிவு செய்துவரும் ஜெயமோகனுக்கு நன்றிகள் பல!
- ஏ.சண்முகவேலன், ஈரோடு.