சித்திரை மாத ராசி பலன்கள்:14-4-2024 முதல் 13-5-2024 வரை



ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

மேஷம்

(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)

குடும்பம்:   லாப ஸ்தானத்தில் சனி, செவ்வாய் கூட்டு சேர்க்கை ஏற்பட்டுள்ளது. மேலும், சித்திரை 18-ம் தேதி குரு பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுவதும், மிகச் சிறந்த கிரக மாறுதலாகும். சுக்கிரனாலும் நன்மையே! இம்மாதம் முழுவதும் பணப் பிரச்னை இல்லாமல் இவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!! சற்று தாராளமாகவே செலவு செய்யலாம். 

இருப்பினும், கிரகங்கள் கொடுக்கும்போது, செலவு செய்வதை விடச் சேமித்து வைத்துக் கொள்வதே விவேகமாகும். ஜென்ம ராசியில், சூரியனும், விரயத்தில் ராகுவும் நிலை கொண்டுள்ளதால், உஷ்ண சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்பட்டு, மருத்துவ சிகிச்சையினால் குணமாகும். ஆதலால், மருத்துவச் செலவுகளும் உண்டு. ருண ஸ்தானத்தில் கேது நிலைகொண்டிருப்பதால், பழைய கடன்களை அடைத்து, நிம்மதி பெறலாம்.  திருமண முயற்சிகளுக்கு மிகவும் ஏற்ற மாதமாகும் இந்தச் சித்திரை.

ஒரு சிலருக்கு, வீடுமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. ெவளிநாட்டில் வேலை பார்க்கும் பிள்ளை அல்லது பெண் விடுப்பில் வருகை தருவது மகிழ்ச்சியை அளிக்கும். குடும்பத்தில் சிறு சுப காரியமொன்று நிகழும்.

உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு அதிபதியான சனி பகவான், லாப ஸ்தானத்தில் நல்ல சுப பலத்துடன் சஞ்சரிப்பதால், மேலதிகாரிகளின் ஆதரவும், உதவியும் கிடைக்கும். அலுவலகச் சூழ்நிலை, நிம்மதியைத் தரும். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், ஊதிய உயர்வு அல்லது பதவியுயர்வு கிடைப்பதற்குச் சாத்தியக்கூறு உள்ளது. 

சனி பகவானுடன் செவ்வாய் இணைந்திருப்பதால், வேலைச் சுமையும், பொறுப்புகளும் உங்கள் பொறுமைக்கு சோதனையாக அமையும். ஒருசிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. புதிய வேலைக்கு முயற்சித்து வரும் மேஷ ராசியினருக்கு, வெற்றி கிட்டும். குறிப்பாக, வெளிநாடு செல்ல வேண்டுமென்ற விருப்பமிருப்பின், முயற்சிக்கலாம்.

தொழில், வியாபாரம்: போட்டிகள் கடுமையாக இருப்பினும், அவையனைத்தையும் சமாளித்து விற்பனையை அதிகரிக்கும் திறனை சனிபகவானும், செவ்வாயும் தந்தருள்கிறார்கள்.  புதிய முதலீடுகளிலும், விஸ்தரிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவதற்கு இம்மாதம் ஏற்றதாக இல்லை. ஏனெனில், விரய ஸ்தானத்தில் பலம் வாய்ந்த ராகு அமர்ந்திருக்கிறார். சில்லரை வியாபாரிகள் கடன் வாங்குவதை இம்மாதம் தவிர்ப்பது நல்லது. விரய ராகு, கடனை விருத்தி செய்வார் என புராதன ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன. வெளிமாநிலப் பயணங்களும், தொடர்புகளும் லாபகரமாக இருக்கும். நிதி நிறுவனங்கள் தக்க தருணங்களில் உதவும்.

கலைத் துறையினர்: கலைத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள சுக்கிரன், இம்மாதம் முழுவதும் உங்களுக்கு ஆதரவாகவே சஞ்சரிப்பதால், வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். உங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர ஏற்ற மாதமிது என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. மக்களிடையே புகழ் அதிகரிக்கும். உங்கள் நிதி நிலைமையை சரி செய்துகெள்ள ஏற்ற தருணமிது. பரத நாட்டியம், சங்கீதம் ஆகியவற்றைப் பயிற்பிக்கும் பள்ளிகள் திறப்பதற்கு கிரக நிலைகள் மிகவும் அனுகூலமாக அமைந்துள்ளன. லாப கரமாக நடக்கும்.

அரசியல்துறையினர்:  சுக்கிரன், செவ்வாய் ஆகிய இரு கிரகங்களுமே சுபத்துவப் பார்வையில் சஞ்சரிப்பதால், கட்சியில் ஆதரவு பெருகும். செல்வாக்கு ஓங்கும். பெரிய அரசியல் கட்சிகளிடமிருந்து போட்டி போட்டுக்கொண்டு அழைப்பு வரும். தீர சிந்தித்து, சரியான முடிவெடுப்பதற்கு கிரக நிலைகள் சாதகமாக உள்ளன.

மாணவ - மாணவியர்: புதனும் மற்ற கிரகங்களும் உங்களுக்கு ஆதரவாகவே நிலைகொண்டுள்ளனர், இம்மாதம் முழுவதும்! கல்வி முன்னேற்றம் நிச்சயம்!! தேர்வுகளில் சரியான விடைகள் எழுதுவதற்கு, புதனின் சஞ்சார நிலை ெபருமளவில் உதவுகிறது. நினைவாற்றலைத் தந்தருளும் மற்ற கிரகங்களின் நிலைகளும் சுபபலம் பெற்றிருப்பதால், நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் திகழ சரியான மாதமிது.

விவசாயத் துறையினர்: பூமி காரகரான செவ்வாயின் சஞ்சார நிலையே, விவசாயத் துறையினரின் நன்மை - தீமைகளை நிர்ணயிக்கிறது. அத்தகைய பலத்தைப் பெற்றுள்ள செவ்வாய், இம்மாதம் முழுவதும் உங்களுக்கு ஆதரவாக நிைலகொண்டிருப்பதால், தண்ணீர், உரம் போன்ற அடிப்படை வசதிகளுக்குக் குறையிராது. 

வானம் பொய்க்காது, குறித்த காலகட்டங்களில் மழை பொழியும். அதுவும், அளவோடு நிற்கும். பயிர்கள் சேதமடையாமல், சந்தையில் நல்ல விலையையும் லாபத்தையும் பெற்றுத் தரும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து நிம்மதிபெற ஏற்ற தருணம், இந்தச் சித்திரை!

பெண்மணிகள்: நன்மை செய்யும் கிரகங்கள் அதிக சுப பலம் பெற்றுள்ளன. ஆதலால், மகிழ்ச்சியையும், மனநிறைவையும் சற்று தாராளமாக உங்களுக்கு அளிக்கக்கூடிய மாதமாகும். குடும்பத்தில், ஒற்றுமை நிலவும். உறவினர்களிடையே பரஸ்பர அந்நியோன்யம்  அதிகரிக்கும். குடும்பத்துடன் தீர்த்த - தலயாத்திரை சென்று வரும் யோகம் அமைந்துள்ளதையும் இம்மாத கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

அறிவுரை: சிக்கனமாகச் செலவு செய்து, எதிர்காலத்திற்கென்று இன்றே சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.பரிகாரம்:  அருகிலுள்ள, திருக்கோயில் ஒன்றில், வெள்ளிக்கிழமைகள்தோறும், தீபத்தில் சிறிது பசு நெய் சேர்த்துவரவும். ஈடிணையற்ற பரிகாரம் இது. விரய ஸ்தானத்தில் நிலைகெண்டுள்ள ராகுவின் தோஷத்தை இது அடியோடு போக்கவல்லது.

அனுகூல தினங்கள்

சித்திரை: 1-3, 8-11, 15-15, 22-24, 29, 30.

சந்திராஷ்டம தினங்கள்

சித்திரை: 12 இரவு முதல், 14 வரை.

ரிஷபம்

(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)

குடும்பம்: சித்திரை 18-ம் தேதி குரு பகவான் ஜென்ம ராசிக்கு மாறுகிறார். அந்தத் தேதியிலிருந்து, பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய  கன்னியையும், களத்திர ஸ்தானமாகிய விருச்சிகத்தையும், பாக்கிய ஸ்தானமாகிய மகரத்தையும்  தனது சுபப் பார்வையினால், பலப்படுத்துகிறார். மாதம் முழுவதும் சுக்கிரனும், ராகுவும் உங்களுக்கு ஆதரவாக நிலைகொண்டுள்ளனர். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி மற்றும் செவ்வாயின் கூட்டுச் சேர்க்கை உள்ளது. வருமானம் திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் குறையும்.

மாதத்தின் மூன்றாவது வாரத்திலிருந்து, வீண் அலைச்சலும், உழைப்பும். ேதவையற்ற செலவுகளும் அதிகமாக இருக்கும். சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், ஆரோக்கியத்தில் சிறிது பின்னடைவு ஏற்படக்கூடும். ஜென்ம ராசி குருவினால், கணவர் - மனைவியரிடையே அந்நியோன்யம் குைறயும். வெளியூர்ப் பயணங்களில் சென்ற காரியம், நிறைவேறாது.  திருமண முயற்சிகளில், தடங்கல் ஏற்படும்.

உத்தியோகம்: உத்தியோகத்தைக் குறிப்பிடும் கும்ப ராசியில் செவ்வாய், சனி பகவானின் கூட்டுச் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. வேலை பார்க்குமிடத்தில் உழைப்பு கடினமாக இருக்கும். கும்பம், சனிபகவானின் ஆட்சி வீடாக இருப்பதாலும், லாப ஸ்தானத்தில், சுக்கிரன் - ராகு சேர்க்கை ஏற்பட்டுள்ளதாலும், நிர்வாகத்தினரின் பாராட்டுதல்களும், ஆதரவும் கிட்டும். ஜெனனகால தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின்,  பதவியுயர்வும், ஊதிய உயர்வும், கூடுதல் சலுகைகளும் கிட்டும். ஒருசிலருக்கு, வெளியூர் மாற்றமும் ஏற்படக்கூடும். வெளிநாடு சென்று,  பணியாற்ற விருப்பமிருப்பின், முயற்சிக்கலாம், வெற்றி கிட்டும். புதிய வேலைக்கு முயற்சிக்க கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன.  

தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறைக்குத் தொடர்புள்ள அனைத்து கிரகங்களும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிப்பதால், நல்ல அபிவிருத்தி ஏற்படும். போட்டிகளும், வெளியூர்ப் பயணங்களும், அலைச்சலும் அதிகமாக இருந்தாலும், அதற்கேற்ற நல்ல லாபம் கிட்டும்.   புதிய வர்த்தகத் துறையில் ஈடுபட விருப்பமிருப்பின், முயற்சிக்கலாம். ஆயத்த ஆடைகள், இரும்பு, பெட்ரோலியம், வெள்ளி ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கு, நல்ல லாபம் கிட்டும். வெளியூர்ப் பயணங்கள்  லாபகரமாக இருக்கும். கூட்டாளிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

கலைத்துறையினர்: கலைத்துறைக்கு அதிபதியான கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால், வாய்ப்புகள் அதிகரிக்கும். வருமானம் சென்ற மாதத்தைவிட, சிறிது அதிகரிக்கும். திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும்.  இயக்குநர்கள், நடிகர் - நடிகைகள் ஆகியோருக்கு, புதிய வாய்ப்புகள் கைகொடுக்கும். பல மாதங்களாக, வருமானம் நின்றுபோன நிலையில், வாடி, வதங்கும் கடைநிலை ஊழியர்களுக்கு மீண்டும்  வருமானம் துளிர்க்கும்.

அரசியல்துறையினர்:  சுக்கிரன் மற்றும் செவ்வாய், ராகு ஆகிய மூவருக்கும் அரசியலில் தொடர்பு உண்டு. மூவரும் அனுகூலமாக நிலைகொண்டிருப்பதால், அரசியல் துறையினருக்கு, உற்சாகத்தையளிக்கும் மாதமாகும். ஒருசிலருக்குக் கட்சிமாற்றம் ஏற்படவிருப்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. பல ரிஷப ராசி அரசியல் துறையினருக்கு, ஓர் திருப்பு முனையாக அமையவுள்ளது, இம்மாதம்.

மாணவ - மாணவியர்: கல்வித் துறையைத் தங்கள் பிடியில் வைத்துக்கொண்டுள்ள கிரகங்கள், அனுகூலமான நிலைகளில் சஞ்சரிக்கின்றன. மனதில் ஏற்பட்ட சஞ்சலங்கள், சபலங்கள் குறையும். படிப்பில், ஆர்வம் மேலிடும். உயர் கல்விக்கு உதவிகள் தேடி வரும். நீட் தேர்வு எழுதியிருந்தால், வெற்றி வாய்ப்பு மிக, மிகச் சிறப்பாக உள்ளது. விளையாட்டுகள், இதர போட்டிகள் ஆகியவற்றிலும் எளிதில் வெற்றி கிட்டும்.

விவசாயத் துறையினர்: செவ்வாய் மற்றும் சனி பகவானின் கூட்டுச் சேர்க்கை உங்களுக்கு அதிக நன்மைகளை அளிக்கக்கூடிய கிரகக் கூட்டணியாகும்! வயல்கள் செழித்து வளரும். தண்ணீர் வசதிக்குக் குறைவிராது. சந்தைகளில், உங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். பழைய கடன்கள் கவலையை அளிக்கும். கால்நடைகள் சிறந்த அபிவிருத்தியை அடையும். கைப் பணத்தை எண்ணி, எண்ணிச் செலவழிக்கவும்.

பெண்மணிகள்: குடும்பப் பொறுப்பிலுள்ள பெண்மணிகளுக்கு, நன்மையும், சிரமங்களும்  கிட்டத்தட்ட சமமாகவே இருக்கும். பணப் பற்றாக்குறை இராது. மூன்றாம் வாரத்தில் உறவினர்களிடையே ஏற்படும் கருத்துவேறுபாடு கவலையை அளிக்கும். குழந்தைகளின் கல்வி பற்றிய பிரச்னை ஒன்று மன நிம்மதியை பாதிக்கும்.அறிவுரை: பெண்மணிகளுக்கு அலைச்சலும், உழைப்பும் கடினமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள்.

 பரிகாரம்:   திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கோடகநல்லுர் (திருநேல்வேலி மாவட்டம்) தரிசனம் மிகச் சிறந்த பரிகாரங்களாகும்.
2. குருவாயூர் திருத்தல தரிசனமும்,  தினமும் ஒரு தசகம் மந் நாராயணீயம்  பாராயணம் செய்துவந்தால் பலன் கைேமல்.
3. வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மாலையில் தீபத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து வந்தால் போதும். சிறந்த பலன் கிடைக்கும்.

அனுகூல தினங்கள்

சித்திரை: 4-7, 12-14, 18-20, 23-26, 30.

சந்திராஷ்டம தினங்கள்

சித்திரை: 15 முதல், 17 காலை வரை.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)

குடும்பம்: சித்திரை 12-ம் தேதியிலிருந்து, சுக்கிரன் அனுகூலமாக மாறுகிறார். சித்திரை 17ம் தேதி வரை குரு பகவான் லாப ஸ்தானத்தில், உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றார்.  அதன் பிறகு, அவரால் நன்மை எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. வரவும், செலவும் சமமாக இருக்கும். மூன்றாம் வாரத்திலிருந்து குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமங்கள் ஏற்படும். குடும்பத்திலும், உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்களும், ஒற்றுமைக் குறைவும் உண்டாவதால், மனதில் நிம்மதி குறையும். திருமண முயற்சிகள் தோல்வியடையும்.

நல்ல வரன்கள் கைநழுவிப் போகும். மாதக் கடைசியில் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக்கூடும். முயற்சிகளில், தேவையற்ற அலைச்சலும், உழைப்பும் மேலிடும். நண்பர்களே பகைவர்களாவார்கள். பிறருடன் பழகுவதில் சற்று விட்டுக் கொடுத்தும், அனுசரித்தும் நடந்துகொள்வது, எதிர்காலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அடிக்கடி ஏதாவதொரு சிறு உடல் உபாதை ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணமாகும். சொத்து சம்பந்தமான பிரச்னைகள், நீதிமன்றம் வரை செல்லக்கூடும்.  எந்நிலையிலும், முன்கோபம், அவசர முடிவுகள், உணர்ச்சிவசப்படுதல் ஆகியவற்றைத் தவிர்த்தல் அவசியம்.

உத்தியோகம்: பாக்கிய ஸ்தானத்தில் ஜீவன காரகரான சனி பகவானும், செவ்வாயுடன் இணைந்திருப்பது, அன்றாடப் பணிகளில் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.  நீங்கள் செய்யும் சிறு தவறும், மிகப் பெரிது போல்  நிர்வாகத்தினரிடம் புகார் செய்யப்படும். இதற்குக் காரணம், உங்கள் சக-ஊழியர்களே!  பொறுமை, நிதானம், சாதுர்யம் மிக, மிக அவசியம்.

தொழில், வியாபாரம்: கோள்சார விதிகளின்படி,  பாக்கிய ஸ்தானத்தில் ஏற்படும் சனி - செவ்வாய் சேர்க்கை, நன்மை செய்வது சற்று சிரமமே! இருப்பினும், சனி பகவான் தற்போது நிலைகொண்டுள்ள கும்பம், அவருடைய ஆட்சி வீடாகத் திகழ்வதால், அதிக சிரமத்தை ஏற்படுத்த மாட்டார் என மிகப் புராதனமான “ஜோதிட அலங்காரம்”, “பூர்வ பாராசர்யம்” என்னும் நூல்கள் கூறுகின்றன. தொழிலில் கடுமையான போட்டிகள் இருப்பினும், அவற்றை முறியடிக்கும் திறனைக் கொடுத்தருள்வார், சனி பகவான். ஆதலால், லாபம் திருப்திகரமாக இருக்கும். அலைச்சல் மற்றும் உழைப்பு ஆகியவை சற்று கடுமையாக இருக்கும்.

கலைத் துறையினர்: புதிய வாய்ப்புகள் வர ஆரம்பிக்கும். இருப்பினும், இதுவரை இருந்துவந்தது போல், வருமானம் இராது. படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு வழக்கத்தைவிட, வருமானம் சற்று குறைவாகவே இருக்கும். இருப்பினும், அடியோடு வருமானம் நின்றுபோன நிலை மாறி, மனதிற்கு நம்பிக்கையையும், மனோதைரியத்தையும் ஏற்படுத்தும். ஆன்மிக உபன்யாசகர்கள், பரதநாட்டியக் கலைஞர்கள், ஓதுவாமூர்த்திகள், தேவார, திருவாசகப் பாடகர்கள் ஆகியோருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். இதுவரை இருந்ததுபோல், இல்லாமல், இனி வருமானம் சீராக இருக்கப்போவதை, கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

அரசியல்துறையினர்:  சித்திரை 12-ம் தேதி முதல், சுக்கிரன் மேஷ ராசிக்கு மாறுவதால், அதுவரை உங்களைப் புறக்கணித்துவந்த கட்சித் தலைவர்கள், உங்களைத் தேடி வந்து, உங்களைப் புகழ்ந்து, வரும் தேர்தலில் பயன்படுத்திக் கொள்வார்கள். அரசியலில் சமய-சந்தர்ப்பங்களுக்கேற்ப தற்காலிகப் பச்சோந்தியாக இருப்பது, தவிர்க்க இயலாதது என்பதை சாணக்கியரின் “அர்த்த சாஸ்திரம்” விவரித்துள்ளது. அரசியல் வெற்றிக்கு இந்தச் சாமர்த்தியம் அவசியம் என்பதையும் அந்நூல் விவரித்துள்ளது. அரிய இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

மாணவ - மாணவியர்: வித்யாகாரகரான புதன் மட்டுமின்றி, கல்வித் துறைக்கு ஆதிபத்யம் கொண்ட மற்ற கிரகங்கள்கூட, மாதம் முழுவதும் உங்களுக்கு சிறந்த சுபபலம் பெற்று சஞ்சரிப்பதால், பல நன்மைகள் உங்களுக்குக் காத்துள்ளன. தேர்வுகளில் உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்று, உயர் கல்விக்கு உங்கள் விருப்பத்திற்கேற்ப நல்ல கல்லூரியில், விருப்பப்பட்ட பாடத் துறையில் இடம் கிடைக்கும். சொல்லிக் கொடுக்கும் திறமை நிறைந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் அமைவார்கள்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு தலைவரான செவ்வாய், சனி பகவானுடன் சேர்ந்து, பாக்கிய ஸ்தானத்தில் நிலைகொண்டிருப்பதால், நல்ல விளைச்சலும், வருமானமும் கிட்டும். ஆயினும், வயல் பணிகளில் உழைப்பு மிகவும் கடினமாக இருக்கும். குறிப்பாக, இரவு நேரப் பணிகளில் சற்று கூடுதல் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். சிறு விபத்து அல்லது விஷ ஜந்துக்களால் பாதிப்பு ஏற்படக்கூடும். எத்தகைய தருணங்களிலெல்லாம் எதனால், நமக்கு ஆபத்து ஏற்பட சாத்தியக்கூறு இருக்கிறதோ அவற்றை நமக்கு முன் கூட்டியே தெரிவித்து, எச்சரிக்கை செய்வதில் ஜோதிடம் என்ற விஞ்ஞானப்பூர்வமான கலைக்கு ஈடான வேறு கலை உலகத்தில் இல்லை.

பெண்மணிகள்: சித்திரை 18-ல் குரு பகவானும், 12-ல் சுக்கிரனும் அனுகூலமற்று மாறுவதால், மாதத்தின் முதல் 12 நாட்கள் பெண்மணிகளுக்கு பல அம்சங்களிலும் நல்லதே நடக்கும். பலருக்கு, வரன் அமையும். சிலருக்கு, மனத்திற்கு உகந்த வேலை கிடைக்கும். அதன் பிறகு, கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை. ஆதலால், மிதுனராசி சகோதரிகளுக்கு, இம்மாதம் நன்மையும், சோதனைகளும் மாறி, மாறி வரும்.

அறிவுரை: வேலை பார்க்குமிடத்தில், கடின உழைப்பு இருப்பினும், ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். எவரிடமும், எந்த உதவியையும் எதிர்பார்த்தால், பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள நேரிடும். பரிகாரம்:  மூன்று வியாழக் கிழமைகளில் மூன்று மண் அகலில் மாலை நேரத்தில் , நேய் தீபங்களும்,  மூன்று சனிக்கிழமைகளில்   நல்லெண்ணெய்   தீபங்களும் ஏற்றிவரவும். நல்ல பலன் கிடைப்பதைக் கண்கூடாகக் காண்பீர்கள்.
2. வியாழன்,வெள்ளி , சனி ஆகிய மூன்று தினங்களிலும், ஓர் தினத்திலாவது அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று தீபத்தில் சிறிதளவு நெய் சேர்த்துவிட்டு, தரிசித்துவிட்டு வரவும்.

அனுகூல தினங்கள்

சித்திரை: 1-4, 9-12, 16, 20-22, 26-28.

 சந்திராஷ்டம தினங்கள்

சித்திரை:17 காலை முதல், 19 முற்பகல் வரை.

கடகம்

(புனர்பூசம் 4ம் பாதம் முதல் சம், ஆயில்யம் வரை)

குடும்பம்: இம்மாதத்தின் மிக முக்கிய, அனுகூலமான கிரக மாறுதல்  குரு பகவான் சித்திரை 18-ம் தேதி (1-5-2024) உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய ரிஷப ராசிக்கு மாறுவ
தேயாகும்!  அந்தத் தேதியிலிருந்து, குடும்பத்தில் சுபீட்சம் பெருகும். உறவினர்களிடையே ஒற்றுமை ஓங்கும். லாப ஸ்தானம் பலம் பெறுவதால், பணக் கஷ்டம் படிப்படியாக நீங்கும். சுப நிகழ்ச்சிகளையும் எதிர்பார்க்கலாம். திருமண முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

சித்திரை 12-ம் தேதி (25-4-2024)யன்று சுக்கிரன் மேஷ ராசிக்கு மாறுவதால், குடும்பத்தில் ஒற்றுமை குறையும். சிறு, சிறு பிரச்னைகள் கவலையை அளிக்கும். இவையனைத்திற்கும் மேலாக, நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது, அஷ்டம (8) ஸ்தானத்தில் ஏற்பட்டுள்ள சனி - ெசவ்வாய் கூட்டுச் சேர்க்கையே ஆகும். இத்தகைய கிரக நிலை, விபத்துகளை ஏற்படுத்தக் கூடும் எனக் கூறுகின்றது, ஜோதிடக் கலை! இருப்பினும், கும்ப ராசி, சனி பகவானின் ஆட்சி வீடாகவும், உங்களுக்கு அவரே அஷ்டமாதிபதியாகவும் அமைந்திருப்பதால், தோஷம் மிகவும் குறைகிறது. இருப்பினும், வாகனங்களை ஓட்டும்போது, கவனமாக இருங்கள். பிறருடன் பகை வேண்டாம்.

  உத்தியோகம்: வேலை பார்க்கும் இடத்தில், அனைவருடனும் சற்று விட்டுக்கொடுத்து, அனுசரித்து நடந்துகொள்வது மிகவும் அவசியம். பொறுப்புகளில் கவனமாக இருத்தல் வேண்டும். ஏனெனில், கிரக நிலைகளின்படி, உங்கள் பொறுப்புகளில் கவனக் குறைவாக இருப்பதற்கும், அதன் காரணமாக, தவறுகள் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. சக-ஊழியர்களுடன் நெருங்கிப் பழகுவதையும், அவர்களது சொந்த - தனிப்பட்ட பிரச்னைகளில்  தலையிடுவதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

தொழில், வியாபாரம்: பல பிரச்னைகளை நீங்கள் சமாளிக்கவேண்டிய மாதமிது! தொழிலதிபர்களுக்கு, உற்பத்தி பாதிக்கப்படும். மிகக் கடுமையான போட்டிகளையும், பணப் பிரச்னையும் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். இத்தகைய தருணத்தில், சகக் கூட்டாளிகளும் ஏற்க இயலாத கோரிக்கைகளை வற்புறுத்துவார்கள். உடல்நலனும், மன நலனும் பாதிக்கப்படும். சனி பகவானின் ஆட்சிவீடாக இருப்பதால், தக்க தருணத்தில் பிரச்னைகள் தீர அவரே வழிவகுத்தருள்வார்.

கலைத் துறையினர்: சற்று சிரமமான மாதம்தான் இது. பணப் பிரச்னை கவலையளிப்பதுடன், ஆரோக்கியக் குறைவும் அதன்காரணமாக, மருத்துவச் செலவுகளும் சற்று அதிகமாகவே இருக்கும். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் கடைசி நேரத்தில் கைநழுவிப்போகும். சேர்த்து வைத்திருந்த செல்வம் சிறிது, சிறிதாகக் கரையும். திரைப்படத்துறையினர், மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய தருணமிது. ஆபத்தான பாத்திரங்களில் நடிக்கும் “ஸ்டண்ட்” நடிகர்கள் மிக, மிக எச்சரிக்கையாக இல்லாவிடில், விபத்துகளில் சிக்கிக்கொள்ள நேரிடும். இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பதும் அவசியமாகும்.

அரசியல்துறையினர்:  பேச்சிலும், அறிக்கைகள் விடும்போதும்,   வார்த்தைகளை அளந்து உபயோகிப்பது மிகவும் அவசியம் என்பதை அஷ்டம ஸ்தான கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. சிறு தவறும் சமூகத்தில் உங்களுக்கு உள்ள நற்பெயரைப் பாதிக்கும். சிலருக்கு, மேலிடத் தலைவர்்களின் ஆதரவு குறையும். கட்சித் தொண்டர்களின் மறைமுகப் பேச்சுகளில் ஆளாக நேரிடும். தசா, புக்திகள் சாதகமாக இல்லவிடில், நீதிமன்றம் செல்ல நேரிடும்.

மாணவ - மாணவியர்: வித்யா காரகரான புதன் அனுகூலமாக இல்லை! வீரியம் நிறைந்த மற்ற கிரகங்கள் பெரும்பாலும், சாதகமற்ற நிலைகளில்தான் சஞ்சரிக்கின்றன. சித்திரை
23-ம் தேதி வரை புதன் சாதகமாக இல்லை. அஷ்டம ஸ்தானமும் பாதிக்கப்பட்டுள்ளது. பாடங்களில் மனதைச் செலுத்த இயலாமல், ஆரோக்கியம் பாதிக்கப்படும். பிற மாணவ - மாணவியருடன் நெருங்கிப் பழகாமலிருப்பது மிகவும் அவசியம். இல்லாவிடில், உங்கள் நற்பெயருக்குக் களங்கம் நேரிடும். சக மாணவர்களினால் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

விவசாயத் துறையினர்: பூமி காரகரான செவ்வாய், சனி பகவானுடன், அஷ்டம ஸ்தானத்தில் வலம் வருவது, நன்மை தராது. அதற்குப் பதில், சிரமங்களை ஏற்படுத்தும். கால்நடைகள் நோய்வாய்ப்படுவதனால், பணம் சக்திக்கு மீறி செலவழியும். உழைப்பிற்கேற்ற விளைச்சல் கிடைப்பதும் சற்று கடினமே! சந்தை நிலவரம், சாதகமாக இல்லை, இம்மாதம் முழுவதும். உங்கள் பொருட்களுக்குக் குறைந்த விலையே கிடைக்கும். அதன் காரணமாக, லாபமும் குறையும். வரவேண்டிய பாக்கிகள் மேலும் தாமதமாகும். கடின உழைப்பினால், ஆரோக்கியம் கெடும். பணப் பிரச்னையும் கவலையளிக்கும்.

பெண்மணிகள்: சற்று சிரமமான மாதமாகும், இந்தச் சித்திரை! குடும்பப் பொறுப்புகள், குழந்தைகளின் கல்வி பற்றிய கவலை, தேவைக்குக் குறைவான பணவரவு, கணவரின் உடல் நலன் பாதிப்பு ஆகியவை மன நிம்மதியைப் பாதிக்கும். திருமணத்திற்குக் காத்துள்ள கடக ராசிக் கன்னியருக்கு, வரன் அமைவது, மேலும் தாமதமாகும். கருவுற்றிருக்கும் பெண்மணிகள் அதிகம் அலையாமல், எச்சரிக்கையுடன் இருப்பதும், அவ்வப்போது ஓய்வெடுப்பதும் மிக, மிக அவசியம் என்பதை கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

அறிவுரை: அதிக அலைச்சல், உடல் உழைப்பு, இரவு நேரப் பயணங்கள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். கைப் பணத்தை எண்ணி, எண்ணிச் செலவழிக்கவும்.  பரிகாரம்:   சக்தியுள்ளவர்கள், திருநள்ளாறு, திருக்ெகாள்ளிக்காடு, வைத்தீஸ்வரர் கோயில் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும். முடியாதவர்கள், சனிக் கிழமைகளில் மாலை நேரத்தில், திருக்கோயில் ஒன்றில் நல்லெண்ணெய் தீபமும், செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபமும் ஏற்றிவருவது, கண்கண்ட பரிகாரங்களாகும். உடனுக்குடன் பலனளிக்கும்.

அனுகூல தினங்கள்

சித்திரை: 2-4, 8-12, 16-18, 22-25, 30.

சந்திராஷ்டம தினங்கள்

சித்திரை:19 முற்பகல் முதல், 21 பிற்பகல் வரை.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

குடும்பம்: சித்திரை 17-ம் தேதி வரை, குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் நிலைகொண்டிருக்கிறார்! அதன் பிறகு, அவரால் அதிக நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. களத்திர ஸ்தானத்தில், செவ்வாய் மற்றும் சனி இணைந்திருப்பதால், மனைவியின் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் வேண்டும்.  உங்கள் ராசிக்கு அதிபதியான சூரியனும், அனுகூலமாக இல்லை! சுக்கிரன், இம்மாதம் முழுவதும் அனுகூலமாக உள்ளார்.

 பண வசதி திருப்திகரமாக இருப்பினும், அதற்கேற்ற செலவுகளும் சற்று அதிகமாகவே இருக்கும்.  எந்தச் செலவையும் குறைத்துக் கொள்ள இயலாது. மருத்துவச் செலவுகள் தவிர்க்க இயலாதவை. வயோதிகர்கள், குளியலறைக்குச் செல்லும்போது, மிகவும் அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், கிரகநிலைகளின்படி, கீழே விழுந்து, அடிபடுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது.

இரவு நேரங்களில்தான், ராகுவின் தோஷம் அதிகரிக்கும் என ஜோதிடக் கிரந்தங்கள் விளக்கியுள்ளன. ஆதலால், இரவில் கண்விழித்து,   கழிவறைக்குச் செல்லும்போது, தூக்கக் கலக்கத்தில், வழுக்கி விழுவதற்கு வாய்ப்புள்ளதை ராகுவின் நிலை எடுத்துக்காட்டுகிறது. இதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சித்திரை 17-ம் தேதி வரை திருமண முயற்சிகளுக்கு ஏற்ற காலகட்டமாகும். அதன் பிறகு, கிரக நிலைகள்  மாறிவிடுகின்றன.

உத்தியோகம்: சித்திரை 17-ம் தேதி வரை பாக்கிய ஸ்தானத்தில் நிலைகொண்டிருக்கும் குரு பகவான், ஜீவன ஸ்தானமாகிய ரிஷபத்திற்கு மாறிவிடுகிறார். ஜீவனகாரகரான சனி பகவான், செவ்வாயுடன் கூடி சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார்.  மேலதிகாரிகளின் ஆதரவு, சக-ஊழியர்களின் ஒத்துழைப்பு ஆகியவை பணிகளில் உற்சாகத்தைத் தரும். ஆயினும், பொறுப்புகளும், வேலைச் சுமையும் சக்திக்கு மீறியதாக இருப்பதால், அடிக்கடி சோர்வும், அசதியும் ஏற்படும். சில தருணங்களில், “வேறு வேலைக்கு முயற்சிக்கலாமா?” என்ற எண்ணம் மேலோங்கும். அத்தகைய தவறான எண்ணங்களைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, வேலை கிடைக்கும். ஆயினும், அதில் திருப்தியிராது.

தொழில், வியாபாரம்: வியாபாரத்தில், போட்டிகள் கடினமாக இருக்கும். லாபத்தைத் தக்க வைத்துக் கொள்ள கடுமையாக உழைக்க நேரிடும். அடிக்கடி விற்பனை சம்பந்தமாக வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லவேண்டி வரும். நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். சகக் கூட்டாளிகளுடன் கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளைத் தற்போதைக்கு ஒத்திப்போடுவது அவசியம். சில்லரை வியாபாரிகள் அதிக வட்டிக்குக் கடன் வாங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். இல்லையெனில், எதிர்காலத்தில் வருந்தவேண்டி வரும் என்பதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. ஆபத்து வருமுன், எச்சரிக்கை செய்து நம்மைக் காப்பாற்றுவதில், ஜோதிடக் கலைக்கு நிகரான கலை வேறொன்றும் கிடையாது.

கலைத்துறையினர்: சித்திரை 11-ம் தேதி வரை சுக்கிரனின் பரிபூரண ஆதரவு கிடைக்கிறது. அதுவரை, வருமானம் திருப்திகரமாக இருக்கும். அதன் பிறகு கிரக நிலைகள் மாறுவதால், வருமானமும் சிறிது குறைந்துவிடும். இருப்பதை வைத்துச் சமாளிக்க நேரிடும். ஆயினும், மக்களிடையே செல்வாக்குக் குறையாது. திரைப்படத் துறையினருக்கு, முதல் இரண்டு வாரங்கள் லாபகரமாக இருக்கும். அதற்குப் பின்பு, பின்னடைவு ஏற்படும்.    

அரசியல்துறையினர்:  சித்திரை 11-ம் ேததி வரை, கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக உள்ளன. அதன் பிறகு, சிறிது பின்னடைவை நீங்கள் சந்திக்க நேரிடும். பிற கட்சியினருடன், நீங்கள் கொண்டுள்ள நட்பை விலக்கிக் கொள்வது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது. ஏனெனில், கிரக நிலைகளின்படி, மேலிடத் தலைவர்களுக்கு உங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை சுக்கிரன் மற்றும் ராகுவின் சஞ்சார நிலைகள் சூட்சுமமாக எடுத்துக்காட்டுகின்றன.

மாணவ - மாணவியர்: கிரக நிலைகள், தொடர்ந்து உங்களுக்கு அனுகூலமாக வலம் வந்துகொண்டிருக்கின்றன. படிப்பில் முன்னேற்றம் எவ்வித பாதிப்புமின்றி நீடிக்கின்றன. கிரகிப்புத் திறன், நினைவாற்றல் ஆகியவை அதிகரிக்கும். பாடங்களில் மனம் பதியும். மாதத்தின் கடைசி வாரத்தில், சிறு உடல் நலக் குறைவு ஏற்படக்கூடும். இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படிப்பது, நண்பர்களுடன் நேரத்தைக் கழிப்பது, தேவையில்லாமல் ஊர் சுற்றுவது ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு அதிபதியான செவ்வாய், சனியுடன் சேர்ந்திருப்பது நன்மை தராது. வயல் பணிகளில் உழைப்பு கடினமாக இருக்கும். கால்நடைகள் நோய்வாய்ப்படுவதால், மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்கும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால், இரவு நேரங்களின்போது, வயற்பணிகளில், எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம். விஷ ஜந்துக்களால் பாதிக்கப்படக்கூடும். அண்டை நிலத்தாரோடு, வாக்குவாதத்தைத் தவிர்க்கவும்.

பெண்மணிகள்: சித்திரை 17-ம் தேதி வரை குடும்ப நிர்வாகத்தில் எவ்விதப் பிரச்னையும் இராது. அதன் பிறகு, குரு பகவான், ரிஷப ராசிக்கு மாறிவிடுவதால், சிறு சிறு பிரச்னைகள் மனத்திற்கு வேதனையை அளிக்கும். உத்தியோகம் பார்க்கும் பெண்மணிகளுக்கு, அலுவலகத்தில் சக்திக்கு மீறிய உழைப்பும், பொறுப்புகளும் உடல்நலனை வெகுவாக பாதிக்கும்.

அறிவுரை: கூடியவரையில், தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்ப்பது, ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவும். அஷ்டம ஸ்தானத்தில், ராகு நீடிப்பதால்,  முன்கோபத்தையும், பிறருடன் வாக்குவாதம் செய்வதையும் தவிர்த்தல் மிகவும் அவசியம்.

பரிகாரம்:  சோளிங்கபுரம் யோக நரசிம்மரின் தரிசனம், தோஷங்களை உடனடியாகப் போக்கி, பாதுகாப்பளிக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் செல்வது, அதிக பலனைத் தரும். செல்லும்போது தூங்கா விளக்கில் நெய் சேர்க்க மறந்துவிடவேண்டாம்.மறவாமல் மூன்று மண் அகல் விளக்குகளைக் கொண்டு சென்று நெய் தீபம் ஏற்றி, தரிசித்துவிட்டு வந்தால், சகல தோஷங்களும் நீங்கி, சந்தோஷமாய் மாறும் உங்கள் வாழ்க்கையில்.

அனுகூல தினங்கள்

சித்திரை: 1-3, 8-11, 15-19, 25-27, 30.

சந்திராஷ்டம தினங்கள்

சித்திரை: 21 பிற்பகல் முதல், 23 மாலை வரை.

கன்னி

(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)

குடும்பம்: சனி, செவ்வாய் ஆகிய இரு கிரகங்களும் மாத ஆரம்பத்திலிருந்தே, உங்களுக்கு ஆதரவாக நிலைகொண்டுள்ளனர்! சித்திரை 12-ம் தேதியன்றிலிருந்து சுக்கிரனால், நன்மைகளைப் பெறலாம். சித்திரை 18-ல் குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறி, ஜென்ம ராசியை, தனது சுபப் பார்வையினால், பலப்படுத்துகிறார்!! மாதம் முழுவதும், வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால், பணத் தட்டுப்பாடு இராது.

வீண் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். மீன ராசியில், ராகு நிலைகொண்டிருப்பதால், மனைவியின் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல், நல்லது. ஜென்ம ராசியில் கேது நிலைகொண்டிருப்பதால், மனம் ஆன்மிகத்தில் தீவிரமாக ஈடுபடும்.  தீர்த்த - தல யாத்திரை ஒன்றிற்கும் செல்ல சாத்தியக்கூறு உள்ளது. குரு பலத்தினால், விவாக முயற்சிகளில் வெற்றி கிட்டும். அஷ்டம ராசியில் சூரிய பகவானின் சஞ்சாரத்தினால், உஷ்ண சம்பந்தமான உபாதைகள் மற்றும் சரும பாதிப்புகள் ஏற்பட்டு எளிய சிகிச்சையினால் குணம் கிட்டும். உறவினர்களிடையே சுமூகமான உறவு நிலவும்.

 உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவான் சுப பலம் பெற்று, உங்களுக்கு ஆதரவாகச் சஞ்சரிப்பதால், அலுவலகச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு பெருகும். சக - ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், சிறு பதவியுயர்வு ஒன்றையும் எதிர்பார்க்கலாம். சிலருக்கு, வெளிநாடு செல்லும் யோகமும் அமைந்துள்ளதை கிரக நிலைகள் சுட்டிக் காட்டுகின்றன.

தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையினருக்கு, முதல் இரண்டு வாரங்களைவிட, மூன்று மற்றும் நான்காவது வாரங்களில் லாபம் பல மடங்கு உயரும். சந்தையில் போட்டிகள் குறையும். நிதிநிறுவனங்கள் முன்வந்து உதவுவார்கள். உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஏற்ற மாதம், இந்தச் சித்திரை!! புது விற்பனைக் கிளைகள் ஆரம்பிப்பதற்கு கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன. 

ஏற்றுமதித் துறை அன்பர்களுக்கு, வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களிலிருந்து புதிய ஆர்டர்கள் கிடைக்கும். சப்ளை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய துறைகளில் காலடி பதிப்பதற்கு, ஏற்ற மாதம் இந்தச் சித்திரை!! சிலருக்கு, வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் யோகமும் அமைந்துள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. இம்மாத கிரக நிைலகள் வியாபாரத் துறையினருக்கு அரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவுள்ளன. பயன்படுத்திக்கொள்வது உங்கள் திறனில் உள்ளது.

கலைத் துறையினர்: சித்திரை 11-ம் தேதி வரை அதிக நன்மைகளை எதிர்பார்க்க முடியாது! 12-ம் தேதியிலிருந்து, சுக்கிரன் சுப-பலம் பெறுவதால், புதிய வாய்ப்புகள் அதிக முயற்சியின்றித் தேடி வரும்.  குறிப்பாக, திரைப்படத் துறையினருக்கு, மாதத்தின் பிற்பகுதி லாபகரமாக இருக்கும். மீண்டும் வருமானம் வரத் தொடங்கும். சென்ற சுமார், இரண்டரை வருடங்களுக்கு மேலாக, மிகக் கடுமையான பாதிப்பிற்கு உள்ளான அன்பர்கள், கலைத் துறையைச் சேர்ந்தவர்களே! அதிலும் குறிப்பாக, திரைப்படத் துறையினராவர்!!  ஏராளமான நடிகர்கள், நடிகைகள், துணை நடிக-நடிகைகள், கீழ்மட்ட ஊழியர்கள், இயக்குநர்கள், புகைப்பட நிபுணர்கள், விநியோகஸ்தர்கள் என ஏராளமான அன்பர்கள், மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது, அனைவரும் அறிந்ததே! அந்நிலை, இம்மாதத்திலிருந்து அடியோடு மாறவுள்ளது என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. இதனை இம்மாதத்தில் அனுபவத்தில் காண முடியும்.

அரசியல்துறையினர்:  முதல் இரண்டு வாரங்கள் கிரக நிலைகள் சாதகமாக இல்லை!! பேச்சிலும், செயலிலும், உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக இருத்தல் மிகவும் அவசியம். மேலும், மேல்மட்டத் தலைவர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை வேண்டும். அவசியமானால் தவிர, அவர்களைச் சந்திப்பதைத் தவிர்ப்பது தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். மிக முக்கியமான தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், எவர், எவரை சந்தேகிக்கிறார்கள் என்பதை ஊகிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. உங்களது சிறு செயலையும், மேலிடத் தலைவர்கள் உன்னிப்பாக, உங்களுக்கே தெரியாமல் கண்காணித்து வருவதை, செவ்வாய், ராகு மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் சஞ்சார நிலைகளும் வெளிப்படுத்துகின்றன.

மாணவ - மாணவியர்: சென்ற மாதம் போலல்லாமல், இப்போது கிரக நிலைகள் மிகவும் சாதகமாக மாறியுள்ளன. படிப்பில் ஆர்வம் மிகும். தேர்வுகளில் சரியான விடையளித்து, நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு அனுகூலமாக வித்யா காரகரான புதனின் சஞ்சார நிலை அமைந்துள்ளது.

விவசாயத் துறையினர்: செவ்வாய் - சனி இணைந்திருப்பது, இந்தச் சித்திரை யோக பலன்களை உங்களுக்குச் சற்று தாராளமாகவே அளிக்கவிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. இம்மாதத்தில்தான், தமிழ்ப் புத்தாண்டும், பிறக்கிறது. இந்தப் புத்தாண்டில் மேகாதிபதியும், அர்க்காதிபதியும் சனி பகவான்தான்! ஆதலால், தண்ணீர்ப் பஞ்சம் சிறிதளவும் இராது. பலருக்கு, நவீன விவசாய வசதிகள்  குறைவில்லாமல்  கிட்டும்.

பெண்மணிகள்: குரு பகவான், சித்திரை 18-ம் தேதி பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். சித்திரை 12-லிருந்து, சுக்கிரனும் ஆதரவாக மாறுகிறார். சனி பகவானும், செவ்வாயும், ஏற்கெனவே சுப பலம் பெற்று விளங்குகின்றன. ஆகையால், சென்றமாதம் உங்களுக்கு எற்பட்ட பல பிரச்னைகள் நல்லபடி தீரும். மனம் அமைதியடையும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகத்தையளிக்கும்.

அறிவுரை: வீண் அலைச்சலையும், வெளியூர்ப் பயணங்களையும் தவிர்த்துவிடுங்கள்.

பரிகாரம்:  ராகுவிற்கு மட்டும், பரிகாரம் செய்தால் போதும். காள ஹஸ்தி, திருநாகேஸ்வர திருத்தல தரிசனம் உகந்த பரிகாரமாகும்.

2. தினமும் 1008 முறை ராம நாமம் எழுதி வந்தால் மகத்தான புண்ணிய பலனையும், சிறந்த பரிகாரமாகவும் அமைந்துவிடும்.
3. பசுவிற்கு, பசும் புல்லும், காகத்திற்கு எள்,  நெய், பருப்பு கலந்த சாத உருண்டை அளிப்பது சிறந்த பரிகாரமாகும்.
4. சர்வ ரோக நிவாரணி எனப் போற்றப்படும் மத் சுந்தர காண்டத்தை தினமும் ஒரு சர்க்கமாவது படித்து வந்தால் போதும்.

அனுகூல தினங்கள்

சித்திரை: 1, 2, 6, 7, 13-15,  19-22, 26-29.

சந்திராஷ்டம தினங்கள்

சித்திரை: 23 மாலை முதல், 25 இரவு வரை.

துலாம்

(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)

குடும்பம்:  குரு பகவான், சித்திரை 17-ம் தேதி வரை அனுகூலமாக சஞ்சரிக்கின்றார்! அதன் பிறகு, அவரால் நன்மை எதுவும் ஏற்படாது!! மாதம் முழுவதும் ராகு சாதகமாக நிலைகொண்டுள்ளார். மற்ற கிரகங்கள் அனுகூலமாக இல்லை. வரவை விட, செலவுகளே அதிகமாக இருக்கும். எந்தச் செலவையும் தவிர்க்க இயலாது. மாதக் கடைசியில், பண நெருக்கடி ஏற்படக்கூடும். முதல் இரண்டு வாரங்கள் திருமண முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஏற்பட்டுள்ள சனி - செவ்வாய் கூட்டுச் சேர்க்கையினால், உடல் நலனில் கவனமாக இருத்தல் நல்லது. சிறு, சிறு உபாதைகள் உடலை வருத்தும். சில தருணங்களில், பணத் தட்டுப்பாடு சற்று கடுமையாகவே இருக்கும். குரு பகவான், அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுவதால், குடும்பத்தில் ஒற்றுமை குறையும். வெளியூர்ப் பயணங்கள் ஏமாற்றத்தைத் தரும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் சிறிது பாதிக்கப்படக்கூடும். சிலருக்கு, வீடுமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு அதிபதியான சனி பகவான் சாதகமாக இல்லை. வேலைபார்க்குமிடத்தில், பணிச் சுமை அதிகமாக இருக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பது கடினம். மேலதிகாரிகளின் கண்டிப்பு, எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தும். சக-ஊழியர்களின் மறைமுகப் பேச்சுகளும், ஒத்துழையாமையும் கவலையை அளிக்கும். தசா, புக்திகள் அனுகூலமற்று இருப்பின், நிறுவன மாற்றம் ஏற்படக்கூடும். கவனமாக இருந்தும், கடமைகளில் தவறுகள் ஏற்படக்கூடும். புதிதாக வேலைக்கு முயற்சித்துவரும் துலாம் ராசியினருக்கு, ஏமாற்றம் ஏற்படும்.

தொழில், வியாபாரம்: உற்பத்தி மற்றும் விற்பனை ஆகிய விஷயங்களில் கவனமாக இருத்தல் அவசியம். சந்தை நிலவரம் அடிக்கடி மாறும் என்பதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். மாதத்தின் கடைசி வாரத்தில் பண நெருக்கடி ஏற்படும். முன்-பணம் இல்லாமல், சரக்குகளை அனுப்புவதைத் தவிர்த்தல் அவசியம். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து வரவேண்டிய பணம் தாமதப்படும். சில்லரை வியாபாரிகளுக்கு, பணத் தட்டுப்பாடு கடுைமயாக இருக்கும். வெளியூர்ப் பயணங்களால், எவ்வித நன்மையும் ஏற்பட வாய்ப்பில்லை.

கலைத்துறையினர்: கலைத்துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் அனுகூலமாக இல்லை! புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும், அவற்றிற்கான வருமானம் கிடைப்பது தாமதப்படும். திரைப்படத் துறையினருக்கு, சோதனையான மாதமாகும் இந்தச் சித்திரை. நடிகர் - நடிகைகளுக்கும் வருமானம் குறையும். இருப்பதைக் கொண்டு சமாளிக்க வேண்டிவரும். பிரதான கிரகங்கள் அனுகூலமற்ற நிலைகளுக்கு மாறுவதால், சற்று சிரமமான மாதம் என்று கூறவேண்டியுள்ளது.

அரசியல்துறையினர்:  அரசியல் துறைக்கு அதிகாரியான சுக்கிரன், இம்மாதம் முழுவதும் சாதகமாக இ்ல்லை! அரசியலுக்குச் சம்பந்தப்பட்ட மற்ற கிரகங்களும்கூட, அனுகூலமாக இல்லை. பேச்சிலும், செயலிலும், பிற கட்சிகளுடன் உள்ள தொடர்பிலும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென கிரக நிலைகள் வற்புறுத்திக் கூறுகின்றன. சந்திக்கும்போது புன்னகை மலரப் பேசினாலும், உங்களுக்குப் பின்னால், உங்களுக்கு எதிராகச் செயல்படும் “நண்பர்கள்” இருப்பதை சனி - செவ்வாயின் நிலை உணர்த்துகிறது. எவரையும் நம்பாமல், எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய மாதமிது! எதையும் தீர ஆராய்ந்து பார்த்து முடிவெடுத்தல் உங்கள் எதிர்கால் நலனிற்கு உகந்ததாகும்.

மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு அதிகாரியான புதன் இம்மாதம் முழுவதும் சுப-பலம் பெற்றுத் திகழ்கிறார். பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். தேர்வுகளில் தெளிவாக பதிலளிக்கும் திறன் ஓங்கும்.விவசாயத் துறையினர்: பூமி காரகரான செவ்வாய், அனுகூலமாக இல்லை! வருமானத்தைத் தீர்மானிக்கும் இதர கிரகங்களும் சாதகமாக சஞ்சரிக்கவில்லை!! அடிப்படை வசதிகள் குறைவில்லாமல் கிடைத்தும், விளைச்சலும், வருமானமும் குறைவாகவே இருக்கும். பழைய கடன்களும் மன நிம்மதியைப் பாதிக்கும். அண்டை நிலத்தாரோடு பகை ஏற்படக்கூடும். தவிர்ப்பது நல்லது.

பெண்மணிகள்: பெண்மணிகளின்  நலன்களுக்குப் பொறுப்பேற்றுள்ள குரு, சுக்கிரன்ஆகிய இருவருமே இம்மாதம் முழுவதும் அனுகூலமாக இல்லை! குடும்பச் சூழ்நிலையும், கவலையளிக்கும். ஆரோக்கியமும் பாதிக்கப்படக்கூடும். சற்று பொறுமையுடன் இருங்கள். நெருங்கிய உறவினர்களால் வீண் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.   

 அறிவுரை: சிக்கனமாக செலவு செய்யவும்.  சுகாதாரக் குறைவான உணவகங்களில் உண்பதைத் தவிர்க்கவும்.
 பரிகாரம்:   வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களிலும், மாலையில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் நெய் தீபம் ஏற்றி வைத்து, தரிசித்துவிட்டு வந்தால் போதும்.

அனுகூல தினங்கள்

சித்திரை: 4-7, 11-13, 16-18, 22-24, 28,29.

 சந்திராஷ்டம தினங்கள்

சித்திரை: 25 இரவு முதல், 27 பின்னிரவு வரை.

விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)

குடும்பம்: உங்கள் ராசிக்கு நாதனாகிய செவ்வாய், சனி பகவானுடன் இணைந்து, அர்த்தாஷ்டக தோஷத்தை விளைவிக்கக்கூடிய, கும்ப ராசியில் நிைலகொண்டிருக்கிறார். குரு பகவான், சித்திரை 18-ம் தேதியிலிருந்து உங்களுக்குச் சாதகமாக மாறிவிடுகிறார். சூரியன், இம்மாதம் முழுவதும் ஆதரவாக சஞ்சரிக்கிறார். சித்திரை 11-ம் தேதி  வரைதான் சுக்கிரன் அனுகூலமாக இருக்கிறார்.

முதல் இரண்டு வாரங்கள் வரை, வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். அதற்குப் பிறகு, எதிர்பாராத செலவுகளால் பணத் தட்டுப்பாடு ஏற்படும். மாதக் கடைசியில், கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். தவிர்க்க முயற்சி செய்வது, எதிர்காலத்திற்கு நல்லது. திருமண முயற்சிகளுக்கு, இம்மாத கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை. சனியின் நிலையினால்,  உடல் நலனில் பின்னடைவு ஏற்பட்டு, எளிய சிகிச்சை மூலம் குணம் ஏற்படும்.

உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவான், ஆதரவாக இல்லை. ராகுவினாலும், நன்மை ஏற்பட வாய்ப்பில்லை. உங்கள் பணிகளில் கவனமாக இருத்தல் அவசியம். மேலதிகாரிகளுடன் அனுசரித்து நடந்துகொள்ளவும். சக-ஊழியர்களுடன் முக்கிய அலுவலக விஷயங்கள் பற்றி விவாதிக்கக் கூடாது. வௌிநாட்டு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, இம்மாதம் கிரக நிலைகள் சாதகமாக இல்லை. தவிர்ப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி ஏமாந்துவிடுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை ராகுவின் நிலை, குறிப்பிட்டுக்காட்டுகிறது. புதிய ேவலைக்கு முயற்சிக்க ஏற்ற மாதமில்லை இது!!

தொழில், வியாபாரம்: சந்தை நிலவரத்திற்கேற்ப, உற்பத்தியைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும். தொழிலை விருத்தி செய்யும் திட்டமிருப்பின், ஒத்திப்போடுவது அவசியம். ஏனெனில், வர்த்தகத் துறையைக் கட்டுப்படுத்தும் சனி, செவ்வாய், ராகு மற்றும் சுக்கிரன் ஆகிய நால்வரும் ஆதரவாக சஞ்சரிக்கவில்லை. நிதிநிறுவனங்களின் நெருக்கடி கவலையை அளிக்கும். புதிய முயற்சிகளையும், விஸ்தரிப்புத் திட்டங்களையும் ஒத்திப்போடுவது மிகவும் அவசியம்.

பல தருணங்களில், கூட்டாளிகளினால், பிரச்னைகள் உண்டாகும். அத்தகைய தருணங்களில், நிதானமாகச் சிந்தித்து, சாதுர்யமாக நடந்துகொண்டால், விபரீதப் பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலும். வெளிநாட்டுப் பயணங்கள், பலன் தராது! ஆதலால், தவிர்ப்பது நல்லது. ஒருசிலர், வியாபாரம் சம்பந்தமாக, வெளிநாடு சென்றுவரும் சாத்தியக்கூறு உள்ளது கிரக நிலைகளின்படி!! பிரதான கிரகங்கள் அனுகூலமற்று சஞ்சரிப்பதால், வெளிநாட்டுப் பயணத்தினால், அதிக நன்மை எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. செலவு செய்வதுதான், கண்ட பலன்!

கலைத்துறையினர்: வருமானமும், வாய்ப்புகளும் ஒரே சீராக இருக்கும். ஆயினும்,  செலவுகள் அதிகமாக ஏற்படும்,  சில தருணங்களில், பிறர் உதவியை நாடவேண்டிய அவசியம் உருவாகும். திரைப்படத் துறையினருக்கு, சித்திரை 12-ம் தேதியிலிருந்து, சுக்கிரன் அனுகூலமற்று மாறுவதால், எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் ஏமாற்றத்தைத் தரும். மாதக் கடைசியில், நிதிப் பற்றாக்குறை சற்று கடினமாக இருக்கும். பொறுமையுடன் நிலைமையைச் சமாளிப்பது அவசியம். ஏனெனில், தற்போதுள்ள கிரக நிலைகளின்போது, வாங்கும் கடன் வேகமாக அதிகரிக்கும் என புராதன ேஜாதிட நூல்கள் எச்சரிக்கை செய்கின்றன.

அரசியல்துறையினர்:  அரசியல் துறையுடன் சம்பந்தப்பட்டுள்ள முக்கிய கிரகங்கள் அைனத்தும் சாதகமாக இல்லை! பேச்சில் நிதானம் வேண்டும். அவசர முடிவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். கட்சியில் ஆதரவு குறையக்கூடும். பல கட்சிகளிலிருந்து ஒரே சமயத்தில், அழைப்பும், நிர்ப்பந்தமும் ஏற்படுவதால், என்ன முடிவெடுப்பது என்பதில் மனதில் குழப்பம் ஏற்படும். உறக்கம், நிம்மதி பாதிக்கப்படும். கட்சியில், நண்பர் யார்? எதிரி யார்? என்பது தெரியாமல், மனதில் குழப்பம் ஏற்படும். பரிகாரம் அவசியம்.

மாணவ - மாணவியர்: பூர்வ புண்ணிய, புரத்திர ஸ்தானத்தில், ராகு நிலைகொண்டுள்ள இத்தருணத்தில், புதனும் சாதகமாக இல்லை! படிப்பில், மனதை ஊன்றிச் ெசலுத்துவது கடினமாக இருக்கும். உடல் நலனும் சிறிது பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. ேசர்ந்தாற்போல், சில மணி நேரம் படிக்க இயலாதபடி, சோர்வும், அசதியும் மேலிடும். படிக்க உட்கார்ந்தால், தூக்க உணர்ச்சி அதிகரிக்கும். கூடியவரையில், இரவில் வெகு நேரம் கண் விழித்துப் படிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். உடன் படிக்கும் நண்பர்களுடன் வெளிச் செல்வதையும், தேவையற்ற அலைச்சலையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

விவசாயத் துறையினர்: பூமி காரகரான செவ்வாய், அர்த்தாஷ்டக ராசியில், சனியுடன் இணைந்திருப்பது நல்லது அல்ல! வயல் பணிகளில் உழைப்பு கடினமாகும். உழைப்பிற்கேற்ற விளைச்சல் கிடைக்காது. ஆதலால், வருமானமும் எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே இருக்கும். 11-ம் தேதி வரைதான் உங்களுக்கு ஆதரவாக அமர்ந்துள்ளார். ஆதலால், முதல் இரண்டு வாரங்கள் வரை, வயல் பணிகளில் எவ்விதப் பிரச்னையும் இராது நடைபெறும். ஆயினும், மூன்றாம் வாரத்திலிருந்து, விளைச்சலும் வருமானமும் சற்று பாதிக்கப்படும். பழைய கடன்கள் தொல்லை தரும்.  கால்நடைகளின் பராமரிப்பிலும் பணம் விரயமாகும். மாதம் முழுவதும், சூரியன் சுப பலம் பெற்றிருப்பதால், அரசாங்கச் சலுகைகள் தக்க தருணத்தில் கிடைக்கும்.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களைக் காக்கும் பிரதான கிரகமாகிய குரு, சித்திரை 18-ம் தேதிவரை உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிக்கின்றார். மற்றொரு கிரகமாகிய சுக்கிரன், 11-ம் தேதி வரைதான் உங்களுக்கு ஆதரவாக அமர்ந்துள்ளார். முதல் இரண்டு வாரங்கள் சிறந்த முன்னேற்றத்தையும்,  நன்மைகளையும் நீங்கள் எதிர்பார்க்கலாம். மூன்றாம் வாரத்திலிருந்து, குடும்ப நிர்வாகத்தில் சிறிது பிரச்னைகளை நீங்கள் சமாளிக்க நேரிடும். பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்தில், ராகு பலம் பெற்றிருப்பதால், குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். பல குழந்தைகளுக்கு, பள்ளியிலும், கல்லூரிகளிலும் பிரச்னைகள் ஏற்படும்.

அறிவுரை: வீண் கவலைகளைத் தவிர்க்கவும்.  கைப்பணத்தை எண்ணி, எண்ணிச் ெசலவு செய்யவும்.

 பரிகாரம்:  தினமும் கந்தர் சஷ்டி கவசம் படித்தாக வேண்டும். பெண்மணிகள், லலிதா சகஸ்ர நாமம்,  ஸ்துதி, மீனாட்சி பஞ்சரத்னம், அபிராமி அந்தாதி ஆகியவற்றில் எவை முடிகிறதோ அவற்றைத் தினமும் உங்கள் வீட்டுப் பூஜையறையில் நெய் தீபம் ஏற்றிவைத்துப் படித்து வந்தால் போதும்.

அனுகூல தினங்கள்

சித்திரை: 3-6, 12-14, 19-21, 23-26.

சந்திராஷ்டம தினங்கள்

சித்திரை: 2 நள்ளிரவு வரை. மீண்டும், 27 பின்னிரவு முதல் 30 காலை வரை.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)

குடும்பம்: சுக்கிரன், செவ்வாய், சனி மற்றும் புதன் ஆகிய நான்கு கிரகங்களும் இம்மாதம் முழுவதும் உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர். சித்திரை 17-ம் தேதி வரை குரு பகவானும், சாதகமாக உள்ளார். சித்திரை 18-ம் தேதியிலிருந்து அனுகூலமற்ற நிலைக்கு, குரு மாறிவிடுகிறார். சூரியன், ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களினால் எவ்வித நற்பயனையும் எதிர்பார்க்க முடியாது! நன்மை செய்யும் கிரகங்களே அதிக சுப பலம் பெற்றுள்ளதால், பண வசதி ஓரளவு திருப்திகரமாக உள்ளது.

முயன்றால், சேமிப்பிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. முதல் இரண்டு வாரங்கள் திருமணம் சம்பந்தமான முயற்சிகளுக்கு, ஏற்றவை. அர்த்தாஷ்டக ராசியில் ராகு சஞ்சரிப்பதால், சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஜீவன ஸ்தானத்தில், கேது நிலைகொண்டுள்ளதால், வேலை பார்க்கும் இடத்தில் சக-ஊழியர்களுடன் பகை ஏற்படக்கூடும். எத்தகைய நிலையிலும், உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்துவிடுங்கள். மனிதப் பிறவியின் மிகப் பெரிய எதிரி முன்கோபமே!!  முதல் இரண்டு வாரங்களில், மிக முக்கிய திருத்தல தரிசனம் ஒன்று கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.

உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவான், சுப பலம் பெற்றுத் திகழ்கிறார். மேலதிகாரிகள், நிர்வாகத்தினர் ஆகியோரின் ஆதரவு பணிகளில் உற்சாகத்தைத் தரும். சக-ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். ராகுவின் நிலையினால்,பொறுப்புகளும், வேலைச்சுமையும் உங்கள் பொறுமைக்குச் சோதனையாக அமையும். அலுவலகக் கடமைகள் காரணமாக, வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமிருப்பின், பணம் மற்றும், முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். புதிய வேலைக்கு முயற்சிக்கும் தனுர் ராசி அன்பர்களுக்கு, வெற்றி கிட்டும். செவ்வாய், சனி இணைந்திருப்பதால், சிலருக்கு இடமாற்றம் ஏற்படக்கூடும். தற்கால தசா, புக்திகளை ஆராய்ந்து பார்த்தால், இது துல்லியமாகத் தெரியும். அந்நிய நாடுகளில் வேலை பார்க்க ஆர்வமிருப்பின், இம்மாதம் முயற்சிக்கலாம். வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தொழில், வியாபாரம்: சம்பந்தப்பட்ட கிரகங்கள், அனுகூலமாக உள்ளன. உற்பத்தியை ஓரளவு அதிகரித்துக் கொள்ளலாம். சந்தை நிலவரம் உங்களுக்குச் சாதகமாக உள்ளது. சகக் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். சிறு அளவில் முதலீடுகள் செய்து தொழிலை விருத்தி செய்து கொள்ளலாம். நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிட்டும் என்பதையும் கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. சில்லரை வியாபாரிகள், நடைபாதை விற்பனையாளர்கள் ஆகியோருக்குக்கூட, நல்ல லாபத்தைப் பெற்றுத் தருவார், சனி, செவ்வாய், சுக்கிரன் ஆகிய மூவரும்!! கூடியவரையில், கடன் வாங்காமல் செய்வது நல்லது. இம்மாதம் கடன் வாங்கவேண்டிய அவசியமும் இராது. வியாபார அபிவிருத்தி சம்பந்தமாக, பிற மாநிலங்களுக்குச் சென்று வரவேண்டிய அவசியமும் உருவாகும்.

கலைத்துறையினர்: சென்ற மாதம் ஏற்பட்ட நன்மைகள் நீடிக்கின்றன. நல்ல வாய்ப்புகள் வருமானத்தை உயர்த்தும். மக்களிடையே செல்வாக்கு உயரும். திரைப்படத் துறையினருக்கு, மிக நல்ல மாதம் இது! தயாரிப்பாளர்கள், புது திரைப்படங்கள் எடுப்பதில் கவனம் செலுத்தலாம். நல்ல லாபம் கிடைக்கும்.  புதிதாக திரைப்படத் துறையில் அடியெடுத்து வைக்க ஏற்ற நேரமிது!! அவரவர்களது ஜனனகால ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால், சினிமாத் துறை ஏற்றதா? இல்லையா? என்பதை மிகத் துல்லிமாக அறிந்துகொள்ளலாம். அதன்படி, முடிவெடுப்பது மிகவும் நல்லது. ஏனெனில், வெளிப் பார்வைக்குப் பகட்டாகத் தெரிந்தாலும், சினிமாத் துறையில் வெற்றிபெற பல மேடு-பள்ளங்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும்!!

அரசியல்துறையினர்:   சென்ற மாதம் போலவே, இம்மாதத்திலும் அரசியல் துறைக்கு அதிகாரம் பெற்ற கிரகங்கள் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், நல்ல முன்னேற்றம் ஏற்படுவது நிச்சயம்! செவ்வாயும், சுக்கிரனும். மக்கள் ஆதரவு வெள்ளமெனப் பெருகிவரும். வெற்றி உறுதி. பின்பு பொறுப்புள்ள பதவியொன்று வகிப்பதற்கும் கிரக நிலைகள் சுபபலம் பெற்றுத் திகழ்கின்றன.  

மாணவ - மாணவியர்: வித்யா காரகரான புதன் மற்றும் கல்வித் துறைக்குத் தொடர்புள்ள இதர கிரகங்களும், அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர், இம்மாதம் முழுவதும்! படிப்பில் ஆர்வம் மிகும். தேர்வில், தெளிவாக பதில் எழுதும் திறமை ஓங்கும். நினைவாற்றல் தக்க தருணங்களில் கைகொடுக்கும். நேர்முகத் தேர்வுகளில், உடனுக்குடன் மிகச் சரியான பதிலளிக்கும் சாதுர்யத்தை புதன் தந்தருள்கிறார்.  பல்கலைக் கழக உச்ச நிலை முனைவர் பட்டம் (doctorate) பெற்றுத் தரும் அளவிற்கு கிரக நிலைகள்  உச்சபலம் பெற்றுள்ளதால், முயற்சிக்கவும்.

விவசாயத் துறையினர்: பூமி - விவசாய காரகரான செவ்வாய், ஜீவன காரகரான சனி பகவானுடன், சனியின் ஆட்சிப்பீடமான கும்ப ராசியில் இணைந்திருப்பது உயர்ந்த யோக பலன்களைக் குறிக்கிறது. விளை நிலத்தைப் பார்த்தாலே தெரியும், உங்களின் உழைப்பினால்பூமியெங்கும் பசும் புல்லைப் பாயாக விரித்ததுபோன்ற நிலையைக் காணலாம்.  உடலும் உள்ளமும் மகிழ்ச்சியில் பூரிக்கும். சந்தையில் உங்கள் விளைபொருட்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கும் என்பதையும் கிரக நிலைகள்  தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. விளை நிலம் வாங்கும் யோகமும் அமைந்துள்ளது. வாய்ப்பினைத் தவறவிடாதீர்கள்!

பெண்மணிகள்: சித்திரை 18-ம் தேதி குரு ருண, ரோக ஸ்தானத்திற்கு மாறுவதால், குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, மனம் வேதனைப்படும்.  உடல் நலனிலும் கவனமாக இருத்தல் அவசியம்.அறிவுரை: அர்த்தாஷ்டக ராசியில், ராகு அமர்ந்திருக்கும் நிலையில், சித்திரை 18-ம் தேதி குருவும் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு மாறுவதால், ஆேராக்கியத்தில் கவனமாக இருக்கவும். உறவினர்களுடன் வாக்குவாதம் வேண்டாம்.

பரிகாரம்: ராகுவிற்காக, சனிக்கிழமைதோறும், அருகிலுள்ள திருக்கோயில் தீபத்தில் சிறிது நல்லெண்ணெயும், குருவிற்காக சிறிது பசு நெய்யும் சேர்த்துவரவும்.

அனுகூல தினங்கள்

சித்திரை: 1, 6-11, 15-18, 22-25, 30.

சந்திராஷ்டம தினங்கள்

சித்திரை: 2 நள்ளிரவு முதல், 5 காலை வரை.

மகரம்

(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)

குடும்பம்:  ஏழரைச் சனியின் கடைசி பகுதியில்  உள்ளதால், சனி பகவானால் பல நன்மைகளை எதிர்பார்க்கலாம். புதன், சுக்கிரன், ராகு மூவரும் உங்களுக்குச் சாதகமாக வலம் வருகின்றனர்.  சித்திரை 18-ம் தேதியிலிருந்து, குரு பகவானும்  அனுகூலமாக மாறுகிறார். வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால், பணத் தட்டுப்பாடு இராது. எதிர்பாராத செலவுகள் ஏற்படினும், சமாளித்துவிடுவீர்கள். முயற்சிகளனைத்திலும், வெற்றி கிட்டும். சித்திரை 18-லிருந்து, உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்திற்கு ரிஷபத்திற்கு குரு பகவான் மாறுவதால், குழந்தைகளின் படிப்பில், நல்ல முன்னேற்றம் ஏற்படுவது மகிழ்ச்சியை அளிக்கும். பாடல் பெற்ற திருத்தல தரிசனம் ஒன்று கிடைக்கும் யோகமும் அமைந்துள்ளது.

திருமணமான பெண்கள், கருத்தரிப்பதற்கு கிரக நிலைகள் யோக பலம்  பெற்றுள்ளன. விவாக வயதிலுள்ள பெண்களுக்கு, நல்ல வரன் அமையும். ஆரோக்கியத்திலும் நல்ல அபிவிருத்தியைக் காணலாம். உத்தியோகம்: சென்ற சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகவே ஏழரைச் சனியின் தாக்கத்தினால், அலுவலகப் பிரச்னைகளினால் மிகவும் வேதனைப்பட்டுவந்த உங்களுக்கு, நல்ல காலம் பிறக்கிறது, இப்போது! சிலருக்கு, நிறுவன மாற்றம்உள்ளது. வேலையில்லாதவர்களுக்கு, சிறிது முயற்சியிலேயே வேலை கிடைக்கும். தற்காலிகப் பணியில் உள்ளவர்களுக்கு, பணி நிரந்தரமாகும். உத்தியோகம் காரணமாக, பிரிந்திருந்த கணவர் - மனைவி மீண்டும் ஒன்றுசேர்வர். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிய ஆர்வமிருப்பின், இம்மாதத்தின் கடைசி வாரத்தில் முயற்சிக்கலாம். ெவற்றி தேடி வரும்.

தொழில், வியாபாரம்: தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு கிரக நிலைகள் மூன்றாம் வாரத்திலிருந்து அனுகூலமாக மாறுகின்றன. உற்பத்தியை அதிகரித்துக் கொள்ளலாம். உங்கள் பொருட்களுக்கு சந்தையில் அதிக தேவையும், நல்ல விலையும் கிடைக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து, புதிய ஆர்டர்கள் வரும். வரவேண்டிய பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன. புதிய தொழில் ஆரம்பிப்பதற்கு சாதகமான மாதம் இது. ஒரு சிலர் சொந்தக் கட்டடத்திற்கு மாற்றம் செய்வார்கள்.

கலைத்துறையினர்: பல மாதங்களுக்குப் பிறகு, இப்போதுதான் உங்களுக்கு நல்ல காலம் துளிர்க்கவுள்ளது எனக் கூறலாம்! மூன்றாம் வாரத்திலிருந்து மீண்டும் வருமானம் வரத் தொடங்கும். புதிய வாய்ப்புகள் கைகொடுக்கும். வீட்டு வேலை செய்துவரும் வேலைக்காரர்களினால், ஏற்பட்டுவந்த தொல்லைகள் அடியோடு நீங்கும்.

அரசியல்துறையினர்:  சுக்கிரன் உங்களுக்கு ஆதரவாக நிலைகொண்டுள்ளார். கட்சியில் ஆதரவு நீடிக்கிறது. வெற்றிக் கனியை எளிதில் பறித்துவிட, சுக்கிரன் - சனியின் நிலை சாதகமாக உள்ளது. செல்வாக்கு மிகுந்த பிரமுகரின் தொடர்பு, சமய சஞ்சீவியாக உங்களுக்கு இப்போது உதவும்.  வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வது உங்கள் திறனில் உள்ளது. எப்போதெல்லாம் அரிய வாய்்ப்புகள் உருவாகின்றனவோ அப்போதெல்லாம் நமக்கு எடுத்துக்காட்டி உதவுகிறது, ஜோதிடக் கலை!!

மாணவ - மாணவியர்: கிரக நிலைகள் இம்மாதம் முழுவதும் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால், தேர்வுகளில் தன்னம்பிக்கையையும், ஆர்வமும் மேலிடும். நினைவாற்றல் சரியான விடையளிக்க துணைநிற்கும். வெளிநாடுகளில் விசேஷ கல்வி பயின்றுவரும் மாணவ - மாணவியர் குறித்த காலகட்டத்தில், தங்கள் பிராஜெக்ட்களை முடித்து, வெற்றிபெற அனுகூலமான மாதமிது!

விவசாயத் துறையினர்: ராசிக்கு தன ஸ்தானத்தில், சனி இருப்பதும், ஜென்மச் சனி தோஷம் விலகியுள்ளதும், இம்மாதம் உங்களுக்குப் பல நன்மைகள் ஏற்படவிருப்பதைச் சுட்டிகாட்டுகின்றன.

உழைப்பிற்கேற்ற விளைச்சலும், வருமானமும் இருக்கும். கால்நடைகள் அபிவிருத்தியடையும். பழைய கடன்கள் அடைபடும். ஒருசிலருக்கு சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளது.

பெண்மணிகள்: சென்ற மாதம் செவ்வாய் தோஷத்தினால் ஏற்பட்டுவந்த உஷ்ண சம்பந்தமான உபாதைகள் இம்மாதம் நீங்கிவிடுவது, ஆரோக்கியத்தைத் திரும்பப்பெற உதவுகிறது! அடிக்கடி ஏற்பட்டுவந்த, சோர்வு, அசதி ஆகியவை இம்மாதம் இராது!! மீண்டும் உடலில் புத்துணர்ச்சி உண்டாகும். அதற்கேற்றாற்போல் ராகுவும் உதவிகரமாக அமைந்துள்ளார். குருவும், சித்திரை 18-ம் தேதி ரிஷப ராசிக்கு மாறுவது, மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய மிக முக்கிய கிரக மாறுதலாகும்.

அறிவுரை: முக்கிய கிரகங்கள் சாதகமான பாதைகளில் மாறிவருவதால், இம்மாதம் பல நன்மைகள் உங்களுக்கு ஏற்படவுள்ளன. வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
 பரிகாரம்:   ஏழரைச் சனி அடியோடு நீங்கவில்லை. ஆதலால், பரிகாரம் செய்துகொள்வது, நன்மையளிக்கும். சனிக்கிழமைகளில் மட்டும், இரவில் உபவாசமிருத்தல் நல்ல பலனையளிக்கும். ஆரோக்கியக் குறைவினால், இதனைச் செய்ய இயலாதவர்கள், தங்கள் இல்லங்களில், சனிக்கிழமை மாலையில் கூடுதலாக ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் பரிகார தீபம் ஏற்றி வருவது, உடனுக்குடன் பலனளிக்கும்.

அனுகூல தினங்கள்

சித்திரை: 1-4, 8-11,  15-18, 22, 26-28.

 சந்திராஷ்டம தினங்கள்

சித்திரை: 5 காலை முதல், 7 இரவு வரை.

கும்பம்

(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)

குடும்பம்:  சூரியன், சுக்கிரன், புதன் மூவரும் உங்களுக்கு ஆதரவாக, இம்மாதம் முழுவதும்  சஞ்சரிக்கின்றனர். வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால், பணத் தட்டுப்பாடு இராது. அதே தருணத்தில், செலவினங்களும் அதிகமாக இருப்பதால், சேமிப்பிற்கு இடமிருக்காது. ெஜன்ம ராசியில், சனி - செவ்வாய் அமர்ந்திருப்பதாலும், தன ஸ்தானத்தில் ராகு இருப்பதாலும், மருத்துவச் செலவுகள் ஏற்படும். உஷ்ண சம்பந்தமான பிணிகள் உடலை வருத்தும். உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகள், காய் - கனிகள் ஆகியவற்றைத் தவிர்த்தல் முக்கியம். அவசியமில்லாமல், வெயிலில் வெளிச் செல்வதைக் குறைத்துக் கொள்ளவும்.

கூடியவரையில், வெளியூர்ப் பயணங்களையும் இம்மாதம் தவிர்ப்பது ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக்கொள்ள உதவிகரமாக இருக்கும். இத்தகைய கிரக நிலைகள் அமைந்திருக்கும் சமயத்தில், பிறருக்கு உதவ, கடன் கொடுத்தால், திரும்பி வராது எனக் கூறுகிறது ஜோதிடக் கலை! குரு பகவானும், அனுகூலமாக இல்லாததால், நெருங்கிய உறவினர்களுடன் சற்று அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. தன ஸ்தானத்தில் ராகு பலமாக நிலைகொண்டிருப்பதால், வீண் கவலைகள் சற்று அதிகமாகவே இருக்கும். சில தருணங்களில், கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படக்கூடும். சற்று கண்டிப்பாக இருப்பின், தவிர்க்கலாம். திருமண முயற்சிகளை ஒத்திப் போடுவது நல்லது. ஏனெனில், சரியாக விசாரிக்காமல், தவறான வரன்களை நிச்சயித்துவிட சாத்தியக்கூறு உள்ளது.

உத்தியோகம்: ஏழரைச் சனியில், ஜென்மச் சனியின்பிடியில் இப்போது நீங்கள் இருப்பதை கிரக நிலைகள் எடுத்துகாட்டுகின்றன. வேலை பார்க்குமிடத்தில், தானுண்டு; தன் வேலையுண்டு என்றிருப்பது, மிகவும் அவசியம். பிறர் செய்யும் தவறுகளுக்கு, நீங்கள் காரணம் என்ற அவப்பெயர் ஏற்படக்கூடும். மேலதிகாரிகளுடன் அனுசரித்து நடந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தையும் கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. நிர்வாகத்தினரின் குறைகளைப் பற்றி, சக ஊழியர்களுடன் விவாதிக்க வேண்டாம். இயந்திரங்களில், பணி புரியும் ஊழியர்கள், அதி-ஜாக்கிரதையாகவும், விழிப்புணர்வுடனும், பாதுகபாப்பு விதி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தும் செயல்படுவது அவசியம். ஏனெனில், ஜென்மச் சனியின் தோஷத்தினால், ஆபத்துகள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளன.

தொழில், வியாபாரம்: தொழிலில் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டிய மாதமிது! உற்பத்திக்கு அத்தியாவசியமான மூலப்பொருட்களின் விலை விஷம் ஏறுவதுபோல் உயர்வதால், உற்பத்தியை அளவோடு வைத்துக் கொள்வது நல்லது. தொழிலாளர்கள் பிரச்னை ஒருபுறமும், நிதி நிறுவனங்களின் நெருக்கடி மறுபுறமும் என, உங்கள் பொறுமைக்கு சோதனையான மாதமாகும், இந்தச் சித்திரை!! சந்தை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வரவேண்டிய மாதமிது.

சில்லரை வர்த்தகர்கள், கடன் வாங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்பதை, செவ்வாய், சனி இணைந்திருப்பது எடுத்துக்காட்டுகின்றது. ஜோதிடக் கலையின் விதிகளின்படி, ஜென்மச் சனிக் காலத்தில், செவ்வாயின் சேர்க்கை ஏற்படும்போது, வாங்கும்கடன் வளரும் எனவும் அதனைத் தீர்ப்பது பிற்காலத்தில் மிகவும் கடினம் எனவும், மிகப் புராதனமான ஜோதிடக் கிரந்தங்கள் கூறுகின்றன. “கடன் கொண்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்...!” எனக் கூறுகிறார் கவிச்சக்கரவர்த்தி, கம்பனும், தனது ராமாயண மகா காவியத்தில், ராவணன் மரணத்தின் பிடியில் சிக்கிக் கொள்ள இருந்த விநாடிகளில்...!! கடன் என்பது எத்தகைய கொடிய விஷம் என்பதை “பூர்வஜென்ம நிர்ணய ஸாரம்” எனும் ஒப்புயர்வற்ற ஜோதிட நூல் கூறுகிறது. ஆதலால், தவிர்க்கவும்.

கலைத்துறையினர்: மாதம் முழுவதும், சுக்கிரன் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால், வருமானம் ஓரளவு கிடைப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது. இருப்பினும், கடைசி இரண்டு வாரங்களில், பணத் தட்டுப்பாடு சற்று கடுமையாகவே இருக்கும். மாத ஆரம்பத்திலிருந்தே, திட்டமிட்டு செலவு செய்வது, மிகவும் நல்லது. சினிமாத் துறையினருக்கு, சற்று தாராளமாகவே செலவு செய்வது வழக்கமாகிவிட்டது. மனதில் வைராக்கியம் அவசியம். ஏழரைச் சனியின் ஜென்மச் சனிக்காலத்தில், சிக்கனமாக இருக்கவேண்டியது கட்டாயம் என்பதை மனத்தில் வைத்துக் கொண்டால், இத்தோஷ காலத்தை சுலபமாகக் கடந்துவிடலாம்.

அரசியல்துறையினர்:  மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய தருணம் இது என்பதை ஜென்ம ராசியிலுள்ள சனியும், செவ்வாயும் உணர்த்துகின்றன. வாக்கு ஸ்தானத்தில், ராகு இருப்பதை மறந்துவிடவேண்டாம்! உணர்ச்சிவசப்பட்டு, பேசுவது, உங்களைப் பேராபத்தில் கொண்டுவிடக்கூடும். கண்ணியமான அரசியலுக்கு, வாக்கு கட்டுப்பாடு மிக, மிக அவசியம்.
மாணவ - மாணவியர்: மாதம் முழுவதும் கல்வித் துறையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள அனைத்து கிரகங்களும், உங்களுக்குச் சாதகமாக நிலைகொண்டுள்ளனர். பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். ஆசிரியர்களின் ஆதரவு மனதை நெகிழச் செய்யும். ஜெமச் சனி தோஷத்தினால், ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். இரவில் நீண்ட நேரம் கண்விழித்துப் படிக்க வேண்டாம்.

விவசாயத் துறையினர்: ஜென்ம ராசியில், செவ்வாயுடன், சனி சேர்ந்திருப்பதால், வயலில் உழைப்பு கடுமையாக இருக்கும். ஆயினும், உழைப்பிற்கேற்ற விளைச்சலும் வருமானமும் கிடைப்பதால், மனதில் மகிழ்ச்சி ஏற்படும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். பெண்மணிகள்: உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும். உடலில் அசதியும், சோர்வும் அதிகமாக இருக்கும். ஒருசிலருக்கு, மாதவிடாய்க் கோளாறுகள், மூட்டுவலி, கை கால் குடைச்சல் ஆகியவை வருத்தும். ஓய்வு அவசியம்.

அறிவுரை: தேவையற்ற, கற்பனையான கவலைகளை விட்டுவிடுங்கள்.

பரிகாரம்: செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று, தீபம் ஏற்றிவைத்துவிட்டு, தரிசித்துவிட்டு வரவும்.

அனுகூல தினங்கள்

சித்திரை: 1-4, 11-14, 19-21, 26-28, 30.

 சந்திராஷ்டம தினங்கள்

சித்திரை: 7 இரவு முதல், 10 காலை வரை.

மீனம்

(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)

குடும்பம்: ஏழரைச் சனியின் ஆரம்பப் பகுதியில் உள்ள உங்களுக்கு, ஜென்ம ராசியில் சுக்கிரனும், ராகுவும், புதனும் சேர்ந்திருப்பது, நன்மையும், தீமையும் மாறி, மாறி வருவதைக் குறிக்கிறது. சுக்கிரனால், நன்மைகள் ஏற்படும். மேலும், ராகுவினால் ஏற்படும் தோஷத்தை, குருவின் சஞ்சார பலம் குறைக்கிறது. சிறு, சிறு உடல் உபாதைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும். உடலில் சிறு உபாதை ஏற்பட்டாலும், தகுந்த மருத்துவ ஆேலாசனை பெறுவது மிகவும் நல்லது. ராசி நாதனாகிய குரு பகவான், சித்திரை 17-ம் தேதி வரையில்தான் உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிக்கிறார்.

அதன் பிறகு, அவரால் அதிக நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. சிறு விஷயங்களுக்கும்கூட அதிக அலைச்சல் தேவைப்படும். கேதுவின் நிலையினால், மனைவியின் ஆரோக்கியம் பற்றி கவலை உண்டாகும். மனதில் நிம்மதி குறையும். சித்திரை 18-ம் தேதி குரு பகவான் திருதீய ஸ்தானமாகிய ரிஷபத்திற்கு மாறுவதால்,  குடும்பத்தில், செலவுகள் அதிகரிக்கும். விவாகம் சம்பந்தமான முயற்சிகளில், தடங்கல்களும், தாமதங்களும் ஏற்படும். ஜென்ம ராகுவினால்,  கற்பனையான கவலைகள் மனதை அரிக்கும். விவாகம் சம்பந்தமான விஷயங்களில், வரன் அமைவதில் தாமதமாகும்.

உத்தியோகம்: ஏழரைச் சனியின்  தோஷத்துடன், ஜென்ம ராசியில் ராகுவும், நிலைகொண்டிருப்பதால்,  அலுவலகத்தில் பொறுப்புகள் சக்திக்கு மீறியதாக இருக்கும். இருப்பினும், கும்பம், சனியின் ஆட்சிவீடாக இருப்பதால், தோஷத்தின் கடுமை குறைகிறது. மேலும், குருவின்  ஆட்சி ராசிகளில் ராகு மற்றும் கேதுவின் வீரியம் குறைகிறது எனக் கூறுகிறது, “ஜோதிட அலங்காரம்” எனும் மிகப் புராதனமான ஜோதிட கிரந்தம். மேலும், ராகுவினால் ஏற்படும் தோஷம், பரிகாரத்திற்கு உட்பட்டதேயாகும்.

வெளியூர்ப் பயணங்களின்போது, விழிப்புடன் இருப்பது அவசியம்.தொழில், வியாபாரம்: தொழில் அபிவிருத்திக்காக அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்லவேண்டிய அவசியம் ஏற்படும். லாபம் உயரும். தொழிலாளர் பிரச்ைன, மற்றும் முலப் பொருட்களின் விலையுயர்வு, கூட்டாளிகளின் ஒற்றுமையின்மை ஆகியவை கவலையை அளிக்கும். நிதி நிறுவனங்களின் ஒத்துைழப்பு கிடைப்பது கடினம். விற்பனையை உயர்த்துவதற்காக, அடிக்கடி வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும். சக்திக்கு மீறிய அலைச்சலால் உடல்நலன் பாதிக்கப்படும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து வரவேண்டிய பணம் தாமதமாகும்.  விற்பனை அபிவிருத்தித் திட்டங்களைத் தற்போதைக்கு ஒத்திவைப்பது நல்லது.

 கலைத் துறையினர்: இம்மாதம் முழுவதும் கலைத்துறைக்கு சம்பந்தப்பட்ட அனைத்து கிரகங்களும் அனுகூலமாக இல்லை! கடினமாக உழைத்தும், பலன் குறைவாகவே இருக்கும். திரைப்படத் துறையினர், மேலும் பல பிரச்னைகளுக்கு ஆளாகக்கூடும். படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள்  ஆகியோருக்கு, பின்னடைவு ஏற்படும். மிகவும் கடினமான நிதி நிலைமையை இம்மாதம் நீங்கள் சமாளிக்க நேரிடும். நடிகர்கள், நடிகைகள் ஆகியோர் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் கண்டிப்பாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். உடல் நலனிலும் கவனமாக இருத்தல் நல்லது. கூடிய வரையில், இரவுநேரப் பயணங்களைத் தவிர்க்கவும்.

அரசியல்துறையினர்:  இம்மாதம் முழுவதும் கிரக நிலைகள் ஓரளவே அனுகூலமாக உள்ளன. அதிக ஆர்வம் காரணமாக,  பொது மேடைகளில் பேசும்போதும், உணர்ச்சிவசப்படாமல், நிதானமாகப் பேசுங்கள்! பிற கட்சியினரின் குற்றங்குறைகளைப் பற்றிக் கூறும்போது, வார்த்தைகளை அளந்து பேசுங்கள். ஏனெனில், நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக்ெகாள்ள வாய்ப்புகள் உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

மாணவ - மாணவியர்: சற்றுப் பாடுபட்டுப் படிக்கவேண்டியுள்ளது, இம்மாதம் முழுவதும்! சம்பந்தப்பட்ட கிரக நிலைகள் சுப பலம் பெற்றிருப்பதால், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், ஏழரைச் சனியின் தோஷம்  இருப்பதால், தவறான பழக்கங்கள் உள்ள  மாணவர்களின் சேர்க்கை ஏற்படக்கூடும். தவிர்ப்பது மிக, மிக அவசியம். வாரத்தில், ஒருநாளாவது அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று தரிசிப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். ஜென்மச் சனி மற்றும், ராகுவினால் ஏற்படும் தோஷம் நீங்கிவிடும்.

விவசாயத் துறையினர்: ஜென்மச் சனியுடன் பூமி காரகரான செவ்வாயும் சேர்ந்திருப்பதால், வயல் பணிகளில் உழைப்பு கடினமாகும். இரவு நேரப் பணிகளில் விஷ ஜந்துக்களால், பாதிப்பு ஏற்படக்கூடும். சற்று எச்சரிக்கையாக இருந்தால் போதும். அண்டை நிலத்தாரோடு பகை வேண்டாம்.

சிறு பிரச்னையும், பெரிய சண்டையில் கொண்டுவிடக்கூடும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. மனிதர்களுக்குக் கோபம் எத்தகைய விபரீத எதிரி என்பதை ஜோதிடக் கலை விவரித்துள்ளது. தற்போதுள்ள கிரக நிலைகள் சரியில்லாததால், இந்த அறிவுரையைக் கூறியுள்ளோம்!பெண்மணிகள்: குறிப்பாக, கடின உழைப்பையும், தனியே வெளிச் செல்வதையும் தவிர்ப்பது மிகவும் அவசியம். ஜென்மச் சனியுடன், செவ்வாயும் சேர்ந்து, ராகுவினாலும், தோஷம் ஏற்பட்டுள்ளதால், நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். சிறு உடல் உபாதையானாலும், மருத்துவரிடம் காட்டி சரி செய்துகொள்ள வேண்டும். பரிகாரம், தோஷத்தைப் பெருமளவில் குறைக்கும்.

அறிவுரை: வெளியே செல்லும்போது, ஜாக்கிரதையாக இருங்கள். சிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.பரிகாரம்: சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில், அருகிலுள்ள திருக்கோயில் சென்று, தீபத்தில் சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து, தரிசித்துவிட்டு வரவும். ஈடிணையற்ற பரிகாரம் இது. ஒவ்வொரு திருக்கோயிலிலும், மூலவர் சந்நிதியில் சக்திவாய்ந்த யந்திரங்கள்  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன பக்தர்களின் நன்மைக்காகவே!!இயலாதவர்கள், “லிகித ஜபம்” ஆகப் போற்றிப் புகழப்படும், ராம ஜெயம் எனும் தாரக மந்திரத்தை புத்தகத்தில் எழுதி வரவும். அதிக சிரமமில்லாதது; அளப்பரிய புண்ணிய பலன்களை அளிக்க வல்லது.

அனுகூல தினங்கள்

சித்திரை: 1-3 , 7-9, 13-15, 20-22, 26-29.

 சந்திராஷ்டம தினங்கள்

சித்திரை: 10 காலை முதல், 12 இரவு வரை.