உழவுக்கும், தெய்வத்திற்கும் வந்தனை செய்தோம்உள்ள(த்)தைச் சொல்கிறோம்

வயலும் வாழ்வும் பார்த்து பழகிப்போன எங்களுக்கு வயலும் தெய்வங்களும் என்ற தலைப்பில் பக்தி சிறப்பிதழை தந்து மெய்யுருகச் செய்த ஆன்மிகம் இதழுக்கு கோடான கோடி நன்றிகள்.
-s.மகாராஜன் பாப்பான்குளம்.

நாயன்மார்கள் வரலாற்றை நம்ம ஆன்மிகம் இதழ் வாயிலாக அறிய காத்திருந்தோம். அது வெளிவந்ததை எண்ணி பெருமகிழ்வு கொள்கின்றோம். எங்களை இலக்கியம் சார்ந்த ஆன்மிக உலகுக்கு அழைத்துச் செல்கிறது.
- கோ. மகாலிங்கேஸ்வரன் மடிப்பாக்கம் சென்னை.

அரிச்சந்திரனுக்கு சாகம்பரிதேவி உதவியதை உரிய விளக்கங்களுடன் எடுத்துக்கூறிய ந.பரணிகுமார் எழுதிய பாரெங்கும் பசுமை மயமான சாகம்பரிதேவி கட்டுரை அருமை. ஜி.மகேஷ் எழுதிய நோய் நீக்கும் யோகினி ஏகாதசி கட்டுரை மிக அழகு. ஒரு முறை யோகினி ஏகாதசி அன்று விரதம் இருந்தால், எண்பத்தி எட்டாயிரம் மாலவன் அடியவர்களுக்கு உணவிட்ட பலன் உண்டு என்பதை பிரம்ம வைவர்த்த புராணத்தைக்காட்டி எழுதியிருந்தது மிக அழகாக இருந்தது.
- K.சகுந்தலா கைலாசம் தஞ்சை.

முனைவர் செ.ராஜேஸ்வரி எழுதிய வேளாண் கடவுளர் கட்டுரையில் இந்திரன், ஐயனார், மாரியம்மன் ஆகிய தெய்வங்களின் வரிசையில் வேளாண்மைக்குரிய உழு படை கருவிகளையும் தெய்வங்களின் பட்டியலில் சேர்த்து குறிப்பிட்டிருந்தது சிறப்பாக இருந்தது.
- அரசன். A.ராமச்சந்திரன் அகரம் தென்சோலையூர்.

விளைஞ்ச பயிர்களை காத்த மாடன் தலைப்பில் எங்கள் குலதெய்வம் சுடலைமாட சுவாமியின் மகத்துவத்தை உணரச்செய்த ஆன்மிக இதழுக்கும், எழுத்தாளர் சு.இளம் கலைமாறனுக்கும் வாழ்த்துகள்.
- E.பிரம்மநாயகம் முனுசாமி நகர் மேடவாக்கம்.

ஆக்ரோஷமான நரசிம்ம ெபருமாளை அழகனாக்கி, அவனியாபுரத்து கோயிலுக்கே எங்களை அழைத்துச் சென்றீர்கள். கட்டுரையின் எழுத்து நடை அருமையாக இருந்தது.
- ப.முத்துராமலிங்கம் நாரணம்மாள்புரம் சங்கர்நகர்.

ஆனைமுகத்தானை மிஞ்சி ஆதி மூலமே அந்த ஆறுமுகம் தான் என்பதை உணர்த்திய சித்ரா மூர்த்தியின் அருணகிரி உலா படித்து அறிய வேண்டிய ஆன்மிக கட்டுரை.
- மந்திரம் V.M.சத்திரம், திருநெல்வேலி.

கிராம தெய்வங்களின் வரலாறுகளை அவ்வப்போது வெளியிட்டு எங்கள் வழிபாட்டை பெருமைப்படுத்தி வந்த தினகரன் ஆன்மிகமலர், மற்றும் ஆன்மிகம் வயலும் தெய்வங்களும் என்ற சிறப்புக்கட்டுரை தந்து உழவர்களின் வாழ்வியலையும், வழிபாட்டையும் தொடர்பு படுத்தி அருமையாக கட்டுரையை பதிவு செய்தது. எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. அதிலும் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு தெய்வங்கள் துணை நிற்பதும். அத்தெய்வத்திற்கு மரியாதை செய்யும் பொருட்டு பூஜை செய்வதும் இந்த காரணத்திற்காகத்தான் என்பதை தெரியாதவர்களுக்கும் தெரிய வைத்தது மிகவும் அருமை. விவசாய குடியில் பிறந்த எங்களுக்கு பெருமை.
- S.சுடலைரத்தினம் தென்கலம்புதூர், நெல்லை.

உழவுக்கு உதவுவாள் அழகுநாச்சியம்மன், நெற்பயிரைக் காத்த குழலி அம்மன், விளைஞ்ச பயிர்களை காத்த மாடன், விதை தெளிக்கும் ஈசன், உழவனாக வந்த இறைவன், குறிஞ்சிக்கடவுள் விவசாய தேவதையாக பச்சையம்மன், செல்லியம்மன், எல்லையம்மன் குறித்த கவிதை என இதழ் முழுக்க கிராம தெய்வங்களும், விவசாயமும் பற்றிய கட்டுரைகள் அழகாக இருந்தது.
- Dr.M.ஈஸ்வரப்பாண்டியன், முடிச்சூர், சென்னை.