நாகை நீலாயதாட்சிக்கு பூப்புனித நீராட்டல்



ஆடிப்பூரம் 03-08-2019

ஆடிப்பூரத் திருநாளில் அம்பிகைக்கு பூப்புனித நீராட்டல் (ருது ஸ்நான வைபவம்) நடைபெறுவதை முன்னிட்டு, பல அம்மன் கோயில்களில் கண்ணாடி வளையல்களை அடுக்கி சுமங்கலி பூஜை (சுவாசினி பூஜை) நடைபெறும். நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் ஆலயம் 64 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், சிவபெருமானின் ஏழு தியாக க்ஷேத்திரங்களில் (தலங்களில்) ஒன்றாகவும் போற்றப் படுகிறது.

இங்கு நீலாயதாட்சியம்மன் கன்னி தெய்வமாக அருள்புரிகிறாள். ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு பூப்புனித நீராட்டல் (ருது ஸ்நான வைபவம்) மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஒன்பது கன்னிப் பெண்களை வரிசையாக உட்காரவைத்து நலங்கிட்டு வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பழம், பூ, சீப்பு, குங்குமச் சிமிழ், ரவிக்கைத்துணி ஆகியவற்றை வழங்குகிறார்கள். இதேபோல, திருக்கருகாவூர் அம்மனுக்கும் இதுபோல் ருது சாந்திவிழா நடைபெறுகிறது. அப்போது மங்கையர்கள் கண்ணாடி வளையல்களை அம்மனுக்கு சமர்ப்பித்து, அர்ச்சித்துப் பெற்றுக் கொள்கிறார்கள்.

- பரணிகுமார்