வேலை ரெடி!வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு  அறிவிப்புகள்  இங்கே...

+2 முடித்தவர்களுக்கு விமானப்படையில் ஏர்மேன் பணி!

நிறுவனம்: இந்திய முப்படைகளில் ஒன்றான விமானப்படையில் பயிற்சியுடன்கூடிய வேலை
வேலை: ஏர்மேன் பதவியில் இரண்டு விதமான வேலை. ஒன்று குரூப் எக்ஸ். இது டெக்னிக்கல் அடிப்படையானது. மற்றது க்ரூப் ஒய். இது நான்  டெக்னிக்கல் வேலை. திருமணமாகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்
காலியிடங்கள்: அறிவிக்கப்படவில்லை
கல்வித் தகுதி: குரூப் எக்ஸுக்கு +2 படிப்பில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி அல்லது 3 ஆண்டு எஞ்சினியரிங் டிப்ளமோ படிப்பு. குரூப் ஒய்  வேலைக்கு +2 தேர்ச்சி. இந்த குரூப் ஒய்யிலும் மெடிக்கல் அசிஸ்டென்ட் போன்ற வேலைக்கு அதே +2 படிப்பில் அறிவியல் பாடங்களை எடுத்து  தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்
வயது வரம்பு: 21க்குள்
தேர்வு முறை: எழுத்து, உடல் திறன் தேர்வு மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி; 15.7.19
மேலதிக தகவல்களுக்கு: www.airmenselection.cdac.

விமான ஆணையத்தில்செக்யூரிட்டி வேலை!

நிறுவனம்: ஏர்ஃபோர்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் அண்ட் அலைட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்(AAICLAS) எனும்  விமான ஆணையத்தின் சரக்கு பரிவர்த்தனைத் துறையில் வேலை
வேலை: செக்யூரிட்டி ஸ்கிரீனர்ஸ் எனும் பாதுகாப்புத் துறையில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 272
கல்வித் தகுதி: டிகிரி. இத்தோடு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உரையாடும் திறன் அவசியம். மேலும் சில படிப்புகளில் சான்றிதழ் தேர்ச்சியுடன்  கேட்கப்பட்டுள்ளது
வயது வரம்பு: 45க்குள்
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 7.7.19
மேலதிக தகவல்களுக்கு: www.aai.aero/en/services

டிப்ளமோ படிப்புக்கு இந்திய உருக்கு ஆலையில் வேலை!

நிறுவனம்: செயில்(sail) எனப்படும் இந்திய உருக்கு ஆலையின் கல்கத்தா கிளையில் வேலை
வேலை: ஓவர்மேன், மைனிங் சர்தார் மற்றும் சர்வேயர் எனும் 3 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 72. இதில் முதல் பிரிவில் 19, இரண்டாம் பிரிவில் 52 மற்றும் மூன்றாம் பிரிவில் 1 இடம் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய வேலைகளில் டிப்ளமோ படிப்பு
வயது வரம்பு: 28க்குள்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 14.7.19
மேலதிக தகவல்களுக்கு: www.sailcareers.com

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியர் பணி!

நிறுவனம்: மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்து ஆராய்ச்சிக்கான நிறுவனமான எய்ம்ஸ் மருத்துவமனையின் பாட்னா கிளையில் வேலை
வேலை: பேராசிரியர்கள்
காலியிடங்கள்: மொத்தம் 196
கல்வித் தகுதி: முதுகலை மருத்துவப் படிப்பு
வயது வரம்பு: 58க்குள்
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.7.19
மேலதிக தகவல்களுக்கு: www.aiimspatna.org

தமிழக அரசில் ஃபாரன்சிக் ஆபீசர் பணி!

நிறுவனம்: காலியாக இருக்கும் ஜூனியர் ஃபாரன்சிக் ஆபீசர் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு  வெளியிட்டுள்ளது.
வேலை: ஜூனியர் ஃபாரன்சிக் ஆபீசர்
காலியிடங்கள்: மொத்தம் 64 இடங்கள். கெமிஸ்ட்ரியில் 40, பயாலஜியில் 14, இயற்பியலில் 6, இயற்பியல் மற்றும் வேதியலுடன்கூடிய கம்ப்யூட்டர்  ஃபாரன்சிக் சயின்ஸ் பிரிவில் 4ம் உள்ளன.
கல்வித் தகுதி: எம்.எஸ்சி., பாரன்சிக் சயின்ஸ் அல்லது விண்ணப்பிக்கும் பிரிவில் எம்.எஸ்சி. படிப்பு தேவை
வயது வரம்பு: 01.07.2019 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.7.19
மேலதிக தகவல்களுக்கு: http://www.tnpsc.gov.in/Notifications/2019_20_notyfn_JSO.pdf

மத்திய அரசின் போதை தடுப்புத் துறையில் வேலை!


நிறுவனம்: நார்கோடிக்ஸ் கண்ட்ரோல் பீரோ எனும் மத்திய அரசின் போதைத் தடுப்புத் துறை
வேலை: இண்டலிஜன்ஸ் ஆஃபிசர் மற்றும் ஜூனியர் இண்டெலிஜன்ட் ஆஃபிசர்(இரண்டுமே நுண்ணறிவுப் பிரிவுகள்)
காலியிடங்கள்: மொத்தம் 156. இதில் முதல் வேலையில் 41, இரண்டாம் வேலையில் 115 இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி: டிகிரி
வயது வரம்பு: 56க்குள்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.7.19
மேலதிக தகவல்களுக்கு: www.narcoticsindia.nic.in

பட்டதாரிகளுக்கு தென்மேற்கு ரயில்வேயில் வேலை!

நிறுவனம்: சவுத் வெஸ்டெர்ன் ரயில்வே எனும் தென்மேற்கு ரயில்வேயில் வேலை
வேலை: கூட்ஸ் கார்ட், ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் ஜூனியர் கிளர்க் கம் டைப்பிஸ்ட் எனும் 3 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 179
கல்வித் தகுதி: டிகிரி
வயது வரம்பு: 18 முதல் 42 வரை
தேர்வு முறை: எழுத்து, கல்வித்திறன் சோதனை மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.7.19
மேலதிக தகவல்களுக்கு: www.swr.indianrailway.gov.in

ஐ.டி.பி.ஐ. வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜர் பணி!

நிறுவனம்: பொதுத்துறை வங்கியான இண்டஸ்ரியல் டெவலப்மென்ட் பேங்க் இது ஐ.டி.பி.ஐ வங்கி எனவும் அழைக்கப்படும்
வேலை: அசிஸ்டென்ட் மேனேஜர்
காலியிடங்கள்: மொத்தம் 600
கல்வித் தகுதி: டிகிரி
வயது வரம்பு: 21 முதல் 28 வரை
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 3.7.19
மேலதிக தகவல்களுக்கு: www.idbi.com

- தொகுப்பு: டி.ரஞ்சித்