வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

சுரங்கம் மற்றும் எரிசக்தி ஆய்வுத் துறையில் வேலை!

நிறுவனம்: மத்திய அரசின் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மைனிங் அண்ட் ஃப்யூல் ரிசர்ச் எனும் சுரங்கம் மற்றும் எரிசக்தி ஆய்வுத் துறையின் ஜார்கண்ட் கிளையில் வேலை
வேலை: புராஜக்ட் அசிஸ்டென்ட் பதவியிலான மேற்சொன்ன துறையில் தொடர்புடைய வேலை. இந்த வேலையில் லெவல் 1, லெவல் 2 எனும் இருபிரிவுகளில் காலியிடங்கள் உண்டு
காலியிடங்கள்: மொத்தம் 111. இதில் லெவல் 1-ல் 78 மற்றும் லெவல் 2-ல் 33 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித்தகுதி: தொடர்புடைய துறையில் டிகிரி, பி.டெக்/டிப்ளமோ அல்லது முதுகலைப் பட்டப்படிப்பு
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.2.18 வரை நேரடியான நேர்முகத்தேர்வு இருக்கும். அதற்குள் விண்ணப்பிக்கலாம்
மேலதிக தகவல்களுக்கு: www.cimfr.nic.in

ஏ.எஸ்.ஆர்.பி-யில் விவசாய அறிவியலாளர் பணி!

நிறுவனம்: மத்திய அரசின் விவசாயத்துக்கான பணியாளர் தேர்வாணையமான ஏ.எஸ்.ஆர்.பி. எனப்படும் அக்ரிகல்ச்சர் சயின்டிஸ்ட் ரெக்ரூட்மென்ட் போர்ட் (விவசாய அறிவியலாளருக்கான பணியாளர் தேர்வாணையம்)
வேலை: விவசாய அறிவியலாளர்கள்
காலியிடங்கள்: 195
கல்வித்தகுதி: விவசாயம் தொடர்பான படிப்பில் முதுகலைப் படிப்பு
வயது வரம்பு: 21 முதல் 32 வரை
தேர்வு முறை: வரவிருக்கும் ஏ.எஸ்.ஆர்.பி-யின் பிரிலிம்னரி தேர்வு மற்றும் நெட் 1 தேர்வு மற்றும் மெயின் தேர்வு, அவற்றின் தேர்ச்சி விகிதம் மற்றும் நேர்முகம் மூலம் இந்த வேலைகள் வழங்கப்படும்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 2.3.18
மேலதிக தகவல்களுக்கு: www.asrb.org.in

IOCL-ல் ஜூனியர் ஆபரேட்டர் பணி!

நிறுவனம்: ஐ.ஓ.சி.எல். எனப்படும் இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட்
வேலை: ஜூனியர் ஆபரேட்டர் (ஏவியேஷன்)
காலியிடங்கள்: மொத்தம் 56
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 26 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்து, திறன் தேர்வு மற்றும் உடல் திறன் சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.2.18
மேலதிக தகவல்களுக்கு: www.iocl.com

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை!

நிறுவனம்: இண்டியன் கோஸ்ட் கார்ட் எனப்படும் இந்தியக் கடலோரக் காவல்படை
வேலை: குக் மற்றும் ஸ்டூவர்ட்
காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 22 வரை
தேர்வு முறை: எழுத்து, உடல் தகுதி சோதனை மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.2.18
மேலதிக தகவல்களுக்கு: www.indiancoastguard.gov.in

பாதுகாப்பு அமைச்சகத்தில் டிரைவர் வேலை!

நிறுவனம்: மினிஸ்ட்ரி ஆஃப் டிஃபன்ஸ் எனும் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் வடக்குக் கிளையின் தலைமையகத்தில் வேலை
வேலை: சிவிலியன் மோட்டார் டிரைவர், ஃபையர்மேன், லேபர் உட்பட 10 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 90. இதில் அதிகபட்சமாக மோட்டார் டிரைவர் 42, ஃபையர்மேன் 25 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித்தகுதி: எல்.டி.சி. எனப்படும் லோயர் டிவிஷன் கிளார்க் வேலைக்கு மட்டுமே +2 தகுதி தேவை. மற்ற வேலைகளுக்கு எல்லாம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது
வயது வரம்பு: மோட்டார் டிரைவர் வேலைக்கு மட்டும் 18 முதல் 27 வரை. மற்ற வேலைகளுக்கு 18 முதல் 25 வரை
தேர்வு முறை: உடற்தகுதி, எழுத்து மற்றும் தொழில் திறன் சோதனைகள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 17.2.18
மேலதிக தகவல்களுக்கு: https://mod.gov.in

தொகுப்பு: டி.ரஞ்சித்